வெள்ளி, 4 ஏப்ரல், 2014

மலேசிய விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். ! நம்புவதா இல்லையான்னு தெரியல


MH370 விமானம் கடத்தப்பட்டதாக பயணி அனுப்பிய எஸ்.எம்.எஸ். உலக நாடுகள் அதிர்ச்சி!
April 03
19:57 2014
மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி Phillip Wood என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான Jim Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. நம்புவதா இல்லையான்னு தெரியல
மேலும் பயணி ஒரு புகைப்படமும் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அந்த புகைப்படத்தில் எந்த படமும் இல்லாமல் கருப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Phillip Wood என்பவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியில் “நாங்கள் அனைவரும் ஒரு ராணுவ அமைப்பால் கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், நான் எனது ஐபோனை மர்ம உறுப்பில் மறைத்து கொண்டதாகவும், மற்றவர்களின் போன்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டதாகவும், கூறியுள்ள அவர்…,
மேலும் தன்னை ஒரு தனிமைச்சிறையில் வைத்துள்ளதாகவும், அந்த இடம் இருட்டாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது உடலில் போதைபொருள் செலுத்தப்பட்டுள்ளதால்   தன்னால் அதிக அளவு சிந்திக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
Philip-Wood
Phillip Wood
அவர் அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ். இதுதான் ”
(“I have been held hostage by unknown military personal after my flight was hijacked (blindfolded). I work for IBM and I have managed to hide my cellphone in my ass during the hijack. I have been separated from the rest of the passengers and I am in a cell. My name is Philip Wood. I think I have been drugged as well and cannot think clearly.”)
Phillip Wood எஸ்,எம்.எஸ் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்ததோடு அனைவரது பார்வையும் தற்போது அமெரிக்க ராணுவம் மீது திரும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா இதுகுறித்து எவ்வித விளக்கமும் இன்னும் கூறவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
மேலே உள்ள படத்தில் Diego Garcia தீவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் கருப்பு நிறத்தில் இருப்பதுதான் MH 370 விமான பயணி அனுப்பிய புகைப்படம். ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக