வியாழன், 3 ஏப்ரல், 2014

கலைஞர் பிரசாரத்தின் இடையில் அதிருப்தியாளர்கள் குறைகளையும் கவனிக்கவேண்டி உள்ளது , எல்லாம் ஸ்டாலின் உபயம் ?

தி.மு.க., தலைவர், கருணாநிதி தன் இரண்டாவது கட்ட பிரசாரத்தை, வரும், 5ம் தேதி கோவையில் துவக்குகிறார். அன்று முதல் ஒவ்வொரு தொகுதியிலும், பிரசாரம் மேற்கொள்ளும் போது, காலையில், கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து, 'பஞ்சாயத்து' நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும்படி முடுக்கி விட உள்ளார். மாலையில், தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.லோக்சபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, கருணாநிதி வெளியிடும் போது, சில வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என, பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இதுவரை வேட்பாளர் யாரும் மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. 'இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு வந்தால், வேட்பாளர்களை மாற்ற வேண்டிய நிலை நேரிடலாம் என்ற அர்த்தத்தில்தான், கருணாநிதி அப்படி கூறினார்' என, பொருளாளர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சில தொகுதிகளின் வேட்பாளர்கள் மீதான அதிருப்தி, தொடர்கதையாகவே உள்ளது. தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, தென்மண்டல அமைப்பு செயலர் அழகிரி, தனக்கு பிடிக்காத, தி.மு.க., வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என, ஆதரவாளர்களிடம் கூறி வருவதால், தேர்தல் நேரத்தில், அந்த வேட்பாளர்களுக்கு எதிராக, பெரிய அளவில் உள்குத்து வேலைகள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 தி.மு.க., தலைவர், கருணாநிதி தன் இரண்டாவது கட்ட பிரசாரத்தை, வரும், 5ம் தேதி கோவையில் துவக்குகிறார். அன்று முதல் ஒவ்வொரு தொகுதியிலும், பிரசாரம் மேற்கொள்ளும் போது, காலையில், கட்சியின் அதிருப்தியாளர்களை அழைத்து, 'பஞ்சாயத்து' நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும்படி முடுக்கி விட உள்ளார். மாலையில், தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கிறார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேட்பாளர்கள் மாற்றப்படலாம்:

லோக்சபா தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, கருணாநிதி வெளியிடும் போது, சில வேட்பாளர்கள் மாற்றப்படலாம் என, பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், இதுவரை வேட்பாளர் யாரும் மாற்றப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. 'இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தி.மு.க., கூட்டணிக்கு வந்தால், வேட்பாளர்களை மாற்ற வேண்டிய நிலை நேரிடலாம் என்ற அர்த்தத்தில்தான், கருணாநிதி அப்படி கூறினார்' என, பொருளாளர் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சில தொகுதிகளின் வேட்பாளர்கள் மீதான அதிருப்தி, தொடர்கதையாகவே உள்ளது. தி.மு.க.,விலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, தென்மண்டல அமைப்பு செயலர் அழகிரி, தனக்கு பிடிக்காத, தி.மு.க., வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என, ஆதரவாளர்களிடம் கூறி வருவதால், தேர்தல் நேரத்தில், அந்த வேட்பாளர்களுக்கு எதிராக, பெரிய அளவில் உள்குத்து வேலைகள் நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்காததால், அதிருப்தி அடைந்த, தி.மு.க., பிரமுகர்களும், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடாமல், பட்டும் படாமல் நடந்து கொள்கின்றனர். பெயர் அளவுக்கு மட்டும், சில வேலைகளை செய்து வருகின்றனர்.

அதிருப்தி அதிகமாக:

இந்த விவரங்கள் எல்லாம், தற்போது கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், எந்தெந்த தொகுதிகளில், அதிருப்தி அதிகமாக உள்ளது என, தன் உதவியாளர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் மூலம் பட்டியல், ஒன்றை அவர் தயாரித்துள்ளார். இந்நிலையில், கருணாநிதியின் இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரம், வரும், 5ம் தேதி கோவையில் துவங்குகிறது. அன்று முதல் ஒவ்வொரு தொகுதிக்கு செல்லும் போதும், அந்தத் தொகுதியின் அதிருப்தியாளர்களை, காலையில் தான் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வரவழைத்து, அவர்களின் பிரச்னை என்ன என்று கேட்டு, பஞ்சாயத்து நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி, தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடும்படி, ஆலோசனை கூற, கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.காலையில், இந்த பஞ்சாயத்து முடித்ததும், மாலையில், அதிருப்தியாளர்களையும் உடன் அழைத்துச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

குடும்ப டாக்டரின் ஆலோசனை:

அத்துடன், தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு, தன் உடல் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், குடும்ப டாக்டரின் ஆலோசனையையும் கருணாநிதி கேட்டு வருகிறார். சுற்றுப்பயணத்தில், அவரது துணைவியார் ராஜாத்தி மற்றும் மகள் செல்வி ஆகியோர் உடன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. கோபாலபுரம் வீட்டில் உள்ள தன் தாயார் தயாளுவின் உடல் நலத்தையும் பார்க்க வேண்டி உள்ளதால், செல்வி, அவ்வப்போது சென்னைக்கும், வெளியூருக்கும் சென்று வருவார் என, கூறப்படுகிறது. இதற்கிடையில், கருணாநிதி உட்காருவதற்கும், படுத்து, ஓய்வு எடுப்பதற்கும் வசதியாக பிரசார வேன் தயாராகி வருகிறது. அந்த வேன், ஓரிரு நாளில் அறிவாலயத்திற்கு வரவுள்ளது. அதை கருணாநிதி பார்வையிட்டதும், கோவை புறப்பட்டுச் செல்கிறது. கோவைக்கு, கருணாநிதி, ரயில் மூலம் செல்வதற்கும், விமானம் மூலம் செல்வதற்கும் வசதியாக, டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர், கனிமொழி எம்.பி.,யும், 18 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். வரும், 5ம் தேதி, தென் சென்னையில், அவர் பிரசாரத்தை துவக்கி, கன்னியாகுமரியில் முடிக்கிறார். கருணாநிதி ஏற்கனவே பயன்படுத்தி வந்த பிரசார வேன், கனிமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது. கனிமொழி பிரசாரத்திற்கு செல்லும் போது, அவரது ஆதரவாளர்கள், மாவட்ட வாரியாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர்.

- நமது சிறப்பு நிரு கலைஞர் பிரசாரத்தின் இடையில் அதிருப்தியாளர்கள் குறைகளையும்  கவனிக்கவேண்டி உள்ளது , எல்லாம் ஸ்டாலின் உபயம் ?

தேர்தலில் போட்டியிட, 'சீட்' கிடைக்காததால், அதிருப்தி அடைந்த, தி.மு.க., பிரமுகர்களும், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடாமல், பட்டும் படாமல் நடந்து கொள்கின்றனர். பெயர் அளவுக்கு மட்டும், சில வேலைகளை செய்து வருகின்றனர்.
- நமது சிறப்பு நிரு dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக