அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளில்
பெரும்பான்மையானோர் காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஆதரவு என்று
தெரிவித்திருப்பதாக சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு பல மாநிலங்களில் நடத்தப்பட்டதைப் போன்றே
குஜராத்திலும் பல்வேறு அம்சங்களில் சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்பை
நடத்தியது. இதில் குஜராத் மாநிலத்திலேயே மோடி பிரதமராக 46% பேர் மட்டுமே ஆதரவு
தெரிவித்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இஸ்லாமியர்களில்
மிகப் பெரும்பான்மையோர் காங்கிரஸையே ஆதரிப்பதாகவும் இது சொல்கிறது.
80% இஸ்லாமியர்கள்..
குஜராத்தில் வாழும் 80% இஸ்லாமியர்கள் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்போம்
என்று தெரிவித்துள்ளனர். ஆனால் 15% இஸ்லாமியர்கள்தான் பாஜகவை ஆதரிப்போம்
என்று கூறியுள்ளனர்.
தலித்துகளில் 70%
இதேபோல் தீண்டாமைக் கொடுமை அதிகம் நிகழக் கூடியதாக சொல்லப்படும் இந்த
மாநிலத்தில் தலித்துகளில் 70% காங்கிரஸை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.
உயர்ஜாதி, பிற ஜாதியினர் பாஜகவுக்கு
அதே நேரத்தில் உயர்ஜாதியினர், படேல் ஜாதியினர், இதர பிற்படுத்தப்பட்டோரில்
70%க்கும் அதிகமானோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதேச ரீதியாக..
சவுராஷ்டிரா, தென் குஜராத் பாஜகவுக்கு முன்னணியாம். மத்திய குஜராத்,
காங்கிரஸுக்கு கை கொடுக்குமாம். வடக்கு குஜராத்தில் சொற்ப வித்தியாசத்தில்
பாஜக முன்னணி பெறலாமாம்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக