சனி, 5 ஏப்ரல், 2014

தலிபான்கள் அச்சுறுத்தலுக்கு இடையே வெற்றிகரமாக நடந்தேறிய ஆப்கானிஸ்தானின் அதிபர் தேர்தல்

Relief in Afghanistan after largely peaceful landmark poll

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இடையே, அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.  ஆப்கானிஸ்தானில் தற்போதைய அதிபர் ஹமீது கர்சாயின் பதவி காலம் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை தொடர்ந்து 2வது இடத்தில் அஷ்ரப் கனி மற்றும் ஜல்மய் ரசூல் ஆகிய இருவரும் பஸ்துன் வாக்குகளை பெற முயற்சித்து வருகின்றனர் -
ஆப்கானிஸ்தானுடன் இரு தரப்பு ராணுவ ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட தற்போதைய அதிபர் ஹமீது கர்சாய் மறுப்பு தெரிவித்து வருகிறார். எனினும், புதிய அதிபர் தேர்தலில் போட்டியிடும் அஷ்ரப் கனி தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தின் தலையீட்டை விரும்பாத தலிபான் தீவிரவாதிகள், தேர்தலை புறக்கணிக்கும்படி மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மாலை வரை வாக்கு பதிவு நடக்கிறது. - .tamilmurasu.org/  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக