சேலம்: வீரபாண்டி ஆறுமுகம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தம்மை யாரும்
தி.மு.க.வில் இருந்து நீக்கியிருக்க முடியாது என்று மு.க. அழகிரி உருக்கமாக
கூறியுள்ளார்.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி நேற்று ஆலோசனை
நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மு.க. அழகிரி பேசியதாவது:
மறைந்த வீரபாண்டியார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்னை கட்சியை
விட்டு யாரும் நீக்குவதாக அறிவித்திருக்க முடியாது. என்னை கட்சியில்
இருந்து நீக்க வீரபாண்டியார் அனுமதித்திருக்க மாட்டார்.
இப்போது என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால்
எனக்கு எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. என்னை கட்சியை வீட்டு நீக்குவதில்
உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் எப்போதும் தி.முக.தான் எனக்கு எப்போதும் தலைவர்
கருணாநிதிதான். அவரைத் தவிர வேறு யாரையும் ஒருபோதும் தலைவராக ஏற்க
முடியாது.
இவ்வாறு அழகிரி பேசினார்.
Read more at: http://tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக