திருச்சியில் இன்று பிரசாரம் செய்ய வரும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்,
ஹெலிகாப்டர் தரையிறங்க, 'ஹெலிபேடு' அமைக்க, 16 மரங்களை வெட்டியதை
கண்டித்து, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு, அபராதம்
விதிக்க முடிவு செய்துள்ளது.திருச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க.,
வேட்பாளரும் தொகுதியின் எம்.பி.,யுமான குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய,
முதல்வர் ஜெயலலிதா, இன்று திருச்சி வருகிறார். பொன்மலை, ரயில்வே
மைதானத்தில், மாலை 3:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில்
பேசுகிறார்.இந்த இடத்தில் ஹெலிபேடு அமைக்க, அங்கு நின்றிருந்த 15
யூக்கலிப்டஸ் மரம் மற்றும் ஒரு வேப்ப மரம் வேரோடு அகற்றப்பட்டன. இதை அறிந்த
ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு அபராதம் விதித்துள்ளது. நாடு முழுக்க சாலைகள் சரி இல்லை என்று பேசி வருகிறோம்...அதனால தான் எங்க
எலிகாப்டரம்மா கக்கூசு போற இடங்கள்ள கூட ரோடு போடறாங்க..... இப்படியே
எலிபேடா தமிழ்நாடு முழுக்க போட்டு முடிக்கிறப்ப நாடு முழுக்க சிமெண்ட்
சாலைகள் ரெடி ஆகிடும்...எப்படி எங்க எலிகாப்டரம்மா அதிரடி திட்டம்...
ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹெலிபேடு அமைக்க, 16 மரங்களை அகற்றியது உண்மை என தெரிய வந்துள்ளது. சேதம் மதிப்பு கணக்கிடப்படவில்லை. ஜெ., கூட்டம் முடிந்த பின், சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, அக்கட்சிக்கு அபராதம் விதிக்கப்படும். 'டிபாசிட்' தொகையாக வசூலிக்கப்பட்டுள்ள, ஏழு லட்சம் ரூபாயில் அபராதத்தொகை கழிக்கப்பட்டு, மீத தொகை மட்டும் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.திருச்சி தொகுதியில், தி.மு.க., சார்பில் அன்பழகன், காங்கிரஸ் சார்பில் சாருபாலா தொண்டைமான், தே.மு.தி.க., சார்பில் விஜயகுமார், மார்க்சிஸ்ட் சார்பில் ஸ்ரீதரன்
போட்டியிடுகின்றனர்.dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக