சனி, 5 ஏப்ரல், 2014

நஸ்ரியா நடிக்க குடும்பத்தினர் திடீர் தடை ? ஒரு நடிகையின் சுதந்திரம் ?

திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிக்க குடும்பத்தினர் தடை விதித்திருப்பதால் படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்சை திருப்பி தருகிறார் நஸ்ரியா.‘நேரம்', ‘நய்யாண்டி', ‘ராஜா ராணி' படங்களில் நடித்துள்ள நஸ்ரியா நாசிம் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முன்னணி இடத்தில் இருந்தார். இந்நிலையில் மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ‘திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். அதற்கு பஹத் ஒப்புதல் அளித்துவிட்டார்' என நஸ்ரியா கூறினார். ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று நஸ்ரியாவுக்கு குடும்பத்தினர்கண்டிஷன்போடுகிறார்களாம். இதையடுத்து புதிய படங்கள் ஒப்புக்கொள்வதை நிறுத்தி வைத்திருக்கிறார். ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்காக வாங்கிய அட்வான்சையும் அவர் திருப்பி தருகிறாராம்.பார்த்திபன் இயக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ என்ற படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் தற்போது அதிலும் நடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பார்த்திபன் கூறும்போது, ‘'நஸ்ரியா நடித்தால்தான் அந்த வேடத்தை வைப்பேன். இல்லாவிட்டால் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை படத்திலிருந்து நீக்கிவிடுவேன்'' என்றா - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக