சனி, 5 ஏப்ரல், 2014

சர்க்கரை நோயாளிக்கு கணையம், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை

சர்க்கரை நோயால் பாதிப்படைந்த பெண் ஒருவருக்கு கணையம் மற்றும் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சைகள் அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி (52). கடந்த 21 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், தினமும் இன்சுலின் ஊசி போட்டு வந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அதிக சோர்வு ஏற்பட்டது. பரிசோதனையில் அவரின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு வந்தபோது அவருக்கு சிறுநீரகம் மற்றும் கணையம் மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது தெரியவந்தது. அவருடைய கண்களும் பாதிக்கப்பட்டிருந்தன.
ஆனால், உடல் உறுப்புகள் தானமாக கிடைக்காததால் தொடர்ந்து 8 மாதங்களாக அவர் டயாலிஸிஸ் செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரகம் மற்றும் கணையம் தானமாகக் கிடைத்தது.
இது குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் காக்கர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
பரமேஸ்வரிக்கு நாள் ஒன்றுக்கு 50 யூனிட் இனசுலின் செலுத்தப்பட்டு வந்தது. dinamani.com
சிறுநீரகம் மற்றும் கணைய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பத்தாவது நாளில் அவர் வீடு திரும்பினார்.
இப்போது அவருக்கு இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, டயாலிஸிஸ் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக