வெள்ளி, 4 ஏப்ரல், 2014

வாய்தா ராணியின் மூன்றாவது சுதந்திர போராட்டம் – கார்ட்டூ

ஜெயலலிதா மூன்றாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதாக
இன்னாவோ கார் அடிமை நாஞ்சில் சம்பத் அருளியிருக்கிறார். அந்த ‘போராட்டங்களின்’ பட்டியலோடு முகிலனின் கேலிச்சித்திரம்!

நாவில் நஞ்சை வைத்திருக்கும் சம்பத்திற்கு அரசியல் ஒரு தொழில்தான் .ஆனால் என்ன அதைவிட விபச்சாரம் சற்று மேலான தொழிலாகும், ஜெயலலிதாவின் தற்போதைய போராட்டம் என்னவோ சுதந்திரம் பற்றியது என்பதில் ஓரளவு உண்மை உண்டுதான். சொத்துகுவிப்பு வழக்கில் மாட்டிகிடாமல் சுதந்திரமாக வாழ்வதற்கு அல்லது மேலும் மிரட்டி சொத்துக்களை பறிப்பதற்கு உரிய சுதந்திரம் தேவை அல்லவா. அதற்கு தகிடுதத்தங்கள் அல்லது நாஞ்சில் அகராதியில் போராட்டம் செய்வது காலத்தின் தேவையாகும். தர்மம் சற்று வலியது . எல்லாம் தெரிந்த புரட்சி தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு வாழ்வெல்லாம் தேடிய சொத்துக்களை வெறும் அடிமாட்டு விலைக்கு பறிகொடுத்த மனிதர்களின் கண்ணீரின் பலம் தெரியாமல் போனது உண்மையில் ஒரு சோகம்தான், உப்பு தின்றவர் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும், இப்போதும் ஒரு நல்லவழி இருக்கிறது, பறித்த சொத்துக்களை அவரவர்களிடம் திருப்பி கொடுத்து மன்னிப்பு கேட்டு கொண்டு பிராயச்சித்தம் செய்து விடலாம், ஆனால் அதற்கும் ஆணவம் பேராசை இடங்கொடாது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக