சனி, 5 ஏப்ரல், 2014

American இந்திய தூதர் தேவயானி ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் வழக்கிலும் சிக்கினார்

அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய இந்திய தூதர் தேவயானி கோப்ரகடே தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் தேவயானி கோப்ரகடேவிற்கு வீடு ஒதுக்கியது தொடர்பாக அவர் மீதும், அவரது தந்தை மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ முடிவு செய்துள்ளது. வீடு ஒதுக்குவதற்காக தவறான ஆவணங்களை தேவயானி தாக்கல் செய்துள்ளது குறித்து சி.பி.ஐக்கு தற்போது தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு மும்பையில் உள்ள ஓஷிவாராவில் உள்ள அரசு குடியிருப்பில் தேவயானி கோப்ரகடேவிற்கு சொந்தமாக அடுக்கு மாடி குடியிருப்பு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில் அவரது தந்தையான உத்தம் கோப்ரகடே அதை மறைத்து போலியான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
எனவே கோப்ரகடே மற்றும் அவரது தந்தை மீது வரும் சில வாரங்களில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. .maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக