சனி, 13 அக்டோபர், 2012

.துருக்கி போர் விமானங்கள் சிரியாமீது தாக்குதல் ஆரம்பம் ?

துருக்கி, முதல் தடவையாக தமது போர் விமானங்கள் இன்று மாலை எல்லை நோக்கி கிளம்பி விட்டன! இன்றிரவு தாக்கலாம்!! துருக்கி, முதல் தடவையாக தமது போர் விமானங்களை சிரியா நாட்டு எல்லையை தாக்குவதற்காக இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் உச்சக்கட்டத்தை அடைந்ததையே இது காட்டுகிறது. துருக்கி போர் விமானங்கள், சிரியா நாட்டு எல்லையில் உள்ள ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடந்தலாம் என ஊகிக்கப்படுகிறது.
துருக்கி-சிரியா எல்லையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள துருக்கி நகரம் அஸ்மாரின் மீது நேற்று மாலை சிரியா நாட்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தின. சிரியா ஹெலிகாப்டர்கள் துருக்கி எல்லைக்கு உள்ளே வந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுப்பதற்கே, துருக்கி விமானப்படை விமானங்கள் இன்று அனுப்பப்பட்டன என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 16,502 ரவுடிகள்: சென்னைக்கு முதலிடம்

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பெயர் பட்டியலை, ஐகோர்ட்டில் டிஜிபி நேற்று தாக்கல் செய்தார். அதில், Ôமாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 502 ரவுடிகள் உள்ளனர். ரவுடிகள் பட்டியலில் தலைநகர் சென்னை முதலிடத்திலும் 2வது இடத்தில் நெல்லையும் 3வது இடத்தில் மதுரையும் கடைசி இடத்தில் நீலகிரி மாவட்டமும் உள்ளதுÕ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முத்துக்குமார், காதல் பிரச்னையில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையில் போலீசார் கைது செய்த இருவர், ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் பட்டியல், குற்றங்களின் எண்ணிக்கை, தண்டனை விபரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய, தமிழக டிஜிபிக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

மாற்றான் தயாரிப்பு செலவு அதிகம் So லாபம் ?.

சூர்யாவின் மாற்றான் ரிலீஸ்: முதல் நாள் ரிப்போர்ட் ஆகா ஓகோவா? ஆளைவிடு ஐயோவா?

Viruvirupu
தமிழ் ரசிகர்களுக்கு விஞ்ஞான அறிவு புகட்ட வரும் படம் என்ற ரீதியில் ப்ரீ-ஸ்கிரீனிங் காமென்டுகள் அடிபட்டுக் கொண்டிருந்த மாற்றான், நேற்று வெளியாகியது. டைரக்டர் கே.வி.ஆனந்த், இதைவிட குறைந்த செலவில் எடுத்து வெளியிட்ட கோ படத்தின் கலெக்ஷனை மாற்றான் எட்டிப் பிடிக்க கூடும். ஆனால், தயாரிப்பு செலவு அதிகம் என்ற காரணத்தால், லாபம் குறைவு.
போட்ட காசை வசூலித்துவிடும். ஆனால் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் நடைமுறை வட்டிவீதத்தை வசூலித்தால் பெரிய விஷயம் என்பதே நிலை.
“தவறு செய்தவர் தந்தையே ஆனாலும், ஹீரோ சும்மா விடமாட்டார்” என்று கே.வி.ஆனந்துக்கு எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டு போய்விட்டார். அதை இப்போது படமாக கொடுத்திருக்கிறார் இவர். காலம் மாறிவிட்டதால், மரபணு மாற்றம் அது இதென்று லேசாக சயின்ஸ் தடவியிருக்கிறார்கள்.
ரஷ்யா பற்றியெல்லாம் கதைக்குள் கொண்டுவந்து, ரஷ்ய மொழியில் உக்ரேனில் நின்று பேசுகிறார்கள்.
உக்ரேன் முன்பு சோவியத் ரஷ்யாவில் இருந்த நாடு என்று டைரக்டருக்கு தெரிந்துள்ளது. ஆனால், உக்ரேனில் பேசப்படுவது ரஷ்ய மொழி அல்ல,

வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை வேலூர் சிறையிலிருந்து ஸ்டாலின், கனிமொழி நேரில் வரவேற்பு

 Veerapandi Arumugam Released From Prison வேலூர்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து இன்று அவர் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். வேலூர் சிறையிலிருந்து விடுதலையான வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி, உள்ளிட்டட திமுக நிர்வாகிகள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சேலம் அங்கம்மாள் காலனி குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வீரபாண்டி ஆற்முகம் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

கடவுளை நம்பாத கமலோடு இளையராஜா


கடவுளை நம்பாத கமலோடு, கடவுளை நம்பும் நீங்கள் எப்படி நட்பாக இருக்க முடியும்?'

காத்து நின்னு போச்சு.. 12 மணி நேரம் பவர் கட்

12 Hr Power Cut Districts Chennai தமிழ்நாடு முழுவதும் 12 மணி நேரம் பவர் கட் - சென்னையில் 'ஒன் அவர்'தான்!

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கிட்டத்தட்ட அடியோடு குறைந்து போய் விட்டதால் தமிழகம் முழுவதும் சராசரியாக 12 மணி நேர மின்தடை அமலாக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் மட்டும் வழக்கம் போல ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடைபடுகிறது.
தமிழ்நாட்டுக்கு தினமும் 14 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் முதல் மற்றும் 4-வது யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் 1050 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அந்த அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ராபர்ட் ரொம்ப நல்லவர் Overnight multi-billionaire Robert Vadra

அன்னா ஹஸாரே கூட்டணியிலிருந்து பிரிந்து வந்த கேஜ்ரிவால் தன்னிடம் கைவசம் நிறைய ஊழல் பட்டியல் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒவ்வென்றாக எடுத்துவிடுகிறார். தற்போது சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவை குறிவைத்து சில புகார்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். நிச்சயம் இவரை பற்றி முன்பே அன்னா குழுவிற்கு தெரிந்திருக்கும், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து விட்டால் தான் இவர்கள் டிவியில் ரொம்ப நாளைக்கு தெரிவார்கள்!.
குற்றச்சாட்டு - ஐம்பது லட்சம் ரூபாய் கடனாக டி.எல்.எஃப் கம்பெனியிடம் வாங்கி அதை வைத்துக்கொண்டு டி.எல்.எஃப் ரியல் எஸ்டேட் கம்பெனியில் 300 கோடிக்கு சொத்து வாங்கியது எப்படி ? ஒரு வரைமுறையின்றி சல்லிசாக அள்ளி வீசப்பட்ட கடன்களை மூலதனமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதுதான் இவ்வளவு பெரிய சொத்துக்களின் சாம்ராஜ்யம்.

இயக்குனர் பாலா: பரதேசிகளில் ஒருத்தன் தான் அதர்வா.

இயக்குனர் பாலா படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு மட்டுமில்லாமல் ஒரு தேடலும் இருக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களை தன் படத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் இயக்குனர் பாலா. சேது படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்தை பார்த்ததிலிருந்து தொடர்கிறது ரசிகர்களின் தேடல்.விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களை திரையில் முற்றிலும் மாறுபடுத்திக் காட்டிய பாலா, விஷால்-ஆர்யா என இளம்நடிகர்களையும் மாற்றினார். ஆனால் இரண்டு படங்கள் மட்டுமே நடித்த அதர்வாவை பரதேசி படத்தின் கதாநாயகனாக அறிவித்து, அவரை மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று படவேலைகளில் தீவிரமாக இறங்கியது தான் ரசிகர்களை குழப்பத்திலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது.

ஆற்காடு வீராச்சாமியை ரொம்பவே திட்டிவிட்டோமோ என வருத்தப்பட்ட மக்கள்

மன்னியுங்கள் ஐயா...: திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்த போது, அப்போது மின்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராச்சாமியை மக்கள் கண்டபடி திட்டி தீர்த்தார்கள்.இரண்டு மணி நேர மின் வெட்டிற்கே, அப்போது அப்படி திட்டி தீர்த்த பொதுமக்கள் இப்போது 16 மணி நேரம் வரை மின்வெட்டாவதை எப்படி பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது நியாயமான கேள்விதான்.,பொறுத்துக்கொள்ளவில்லை புலம்பி தீர்க்கிறார்கள் என்பதுதான் நிஜம்.
இன்றைய மின்வெட்டை பார்க்கும் போது அன்றைய வீராச்சாமியை ரொம்பவே திட்டிவிட்டோமோ என வருத்தப்பட்ட மக்கள் அவரிடம் மன்னிப்பு கேட்பது போல குமாரபாளையத்தில் வைத்துள்ள பேனர் பலரையும் கவர்ந்துள்ளது.
வேதனையைக்கூட வேடிக்கையாக வெளிப்படுத்த முடியும் என்பதன் வெளிப்பாடான இந்த போஸ்டர் தற்போது தமிழகம் முழுவதும் பாப்புலராகிவிட்டது

மின்வெட்டு: தீபாவளி துணி தயாரிப்பு 60% டவுன்! விலைகள் எகிறும்!!

Viruvirup.com
 துணி உற்பத்தி ஆலைகளில் தினந்தோறும் 10 முதல் 14 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால், தீபாவளிக்கு தயாராக வேண்டிய துணிகளில் 40 சதவீத துணிகளையே தயாரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு துணி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது என தெரியவருகிறது.
ஈரோட்டில் மட்டும் சுமார் 30,000 விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஒரு மாதமாக தினமும் 10 முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதால் துணி உற்பத்தி கடும் பாதிப்படைந்துள்ளது. முன்பு நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது வெறும் 4.5 லட்சம் மீட்டர் மட்டுமே துணி உற்பத்தியாகிறது.
ஏற்கனவே பால் விலையில் இருந்து, டீசல், கேஸ் வரை விலையுயர்வு கழுத்தை நெரிக்கும் நிலையில், தீபாவளிக்கு தயாராகும் 60 சதவீதம் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு தேவையான துணி உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, விலையும் உயரப் போகிறது.

மின்வாரிய பொறியாளரின் காம களியாட்டம்

வால்பாறை: நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து, அதை, "லேப்-டாப்' மற்றும் சி.டி.,யில் பதிவு செய்து, ரசித்து வந்த, 57 வயதான மின் வாரியப் பொறியாளரை, போலீசார் கைது செய்தனர். பொறியாளரின் காம லீலைகளை அறிந்த போலீசார், அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள, அட்டகட்டி, அப்பர் ஆழியாறு மின் வாரிய அலுவலகத்தில், உதவி மின் பொறியாளராக பணிபுரிந்தவர், சுப்பிரமணியம், 57. இவர், மின் வாரிய அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரியும் கண்ணம்மாள், 44, என்பவருக்கு, "செக்ஸ் டார்ச்சர்' கொடுத்துள்ளார். சுப்பிரமணியத்தின் ஆசை வார்த்தைக்கு அடி பணியாத கண்ணம்மாள், வால்பாறை போலீசில் புகார் செய்தார்; மின்வாரிய அதிகாரி என்பதால், சுப்பிரமணியத்தை, போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதன் பிறகும் கண்ணம்மாளுக்கு, செக்ஸ் டார்ச்சரும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் கடந்த ஆண்டு வரை இந்தியாவின் 2-வது மிகப்பெரிய விமான நிறுவனமாக இருந்தது. ஆனால் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.நஷ்டம், ஊழியர்களின் போராட்டம் போன்ற பிரச்சினைகளால் விமான சேவையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில், கிங்பிஷர் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்ட ஜி.எம்.ஆர். நிறுவனத்திற்கு கிங்பிஷர் நிறுவனம் சார்பில் ரூ.10 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. வங்கியில் பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்பி வந்துவிட்டது.இதையடுத்து ஜி.எம்.ஆர். நிறுவனம் சார்பில் அய்தராபாத் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் , கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா மற்றும் 5 நிர்வாகிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு கடுமையாக உழையுங்கள்.

காந்தியத்தின் மதிப்பு காலத்தால் அழியாதது. இந்திய இளைஞர்கள் காந்திய மதிப்பீடுகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து ஒரு முன்னேற்றப் பாதையை வகுக்க வேண்டும். அதை முன்மாதிரியாய் உலகமே பின்பற்றும்”.
இதைச் சொன்னவர் காந்தியத்தின் 21ம் நூற்றாண்டு விற்பனைப் பிரதிநிதிகளான அண்ணா ஹசாரேவோ, தமிழ் அருவி மணியனோ, அப்துல் கலாமோ இல்லை.
பாஜக தலைவர் சுதீந்திர குலகர்னி எழுதிய ‘கைராட்டையின் இசை -  இணைய யுகத்தில் மகாத்மா காந்தியின் அறிக்கை’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆண்ட்லியா மாளிகை கட்டிய அண்ணன் அம்பானி முகேஷ்தான் இப்படி பேசினார்.
அம்பானி மற்றும் உலக முதலாளிகள் அனைவரின் இன்பமான கனவுகளில் காந்தியம் இடம் பெறுகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
“உழைக்கும் மக்களே, காந்திய கொள்கைப்படி எங்களது நவீன ஆலைகளில் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு கடுமையாக உழையுங்கள். சேரிகளில் வாழ்ந்து  கொள்ளுங்கள். ஏதாவது தேவைப்பட்டால் காந்திய கொள்கைப்படி உண்ணாவிரதம் இருங்கள். நான் ஆண்டிலியா மாளிகையில் உட்கார்ந்து கொண்டு காந்தியின் தர்மகர்த்தா கொள்கையை கடைப் பிடிக்கிறேன்”.
இதுதான் அம்பானியின் பேச்சின் உள்கிடக்கை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

சாதனையோ சாதனை அப்படி ஒரு சாதனை அப்படி ஒரு ஆட்சி

Viruvirupu
கலைஞரும்,தி.மு.க.-வினரும் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் என்று கருப்பு சட்டை அணிந்துகொண்டு வீடு வீடாக போய் துண்டுப் பிரசுரம் கொடுக்கிறார்கள். அ.தி.மு.க.-வினர் பச்சை சட்டையுடன் போய், அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்று துண்டுப் பிரசுரம் கொடுக்கின்றனர்.
தி.மு.க. துண்டுப் பிரசுரங்கள் எந்த நேரத்திலும் கொடுக்கப்படலாம் என்ற வசதி உள்ளது. ஆனால், அ.தி.மு.க.-வினர் பாவம், தினமும் 4-5 மணிநேரம்தான் துண்டுப் பிரசுரம் கொடுக்க முடிகிறது.
காரணம், மீதி நேரங்களில் பவர் கட். அந்தக் கடுப்பில் உள்ள மக்களிடம் போய், ‘சாதனை’ என்று துண்டுப் பிரசுரத்தை கையில் திணித்தால், பச்சைச் சட்டையை கிழித்து, வாயில் திணித்து அனுப்பும் அளவில் கொதிப்புடன் உள்ளார்கள்.
. அ.தி.மு.க.-வினருக்கு கிண்டலாக அட்வைஸூம் கொடுக்கிறார். “அ.தி.மு.க.வினரால் தங்கள் துண்டுப் பிரசுரத்தில் தவிர்க்கப்பட்ட “சாதனை(?)களை” அடுத்த பிரசுரத்தில் சேர்ப்பதற்காக சிலவற்றை நான் பட்டியலிட்டுள்ளேன்” என்ற நக்கலுடன் அவர் வெளியிட்டுள்ள பட்டியல் இது.

ஹைகோர்ட் அதிரடி வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்தது செல்லாது

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை (வயது 73) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து அவருடைய மனைவி லீலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் எனது கணவர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். இதற்கான உத்தரவை 18.6.12 அன்று சேலம் போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கான காரணமாக, அவர் மீது கூறப்பட்டுள்ள வழக்குக்கும் அவருக்கும் நேரடி தொடர்பு கிடையாது. 560 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து கமிஷனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பெரும்பாலான ஆவணங்கள் தமிழில் இருப்பதால், தமிழரல்லாத அவரால் அதை முழுவதும் படித்து பார்த்து, திருப்தி அடைந்து உத்தரவிட்டு இருக்க முடியாது. உள்நோக்கத்தோடு உத்தரவுகளை பிறப்பித்து வீரபாண்டி ஆறுமுகத்தை ஜெயிலில் அடைத்துவிட்டனர். எனவே அந்த உத்தரவை சட்டத்துக்கு புறம்பானது என்று அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் கே.என்.பாஷா, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் கடந்த சில தினங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது. வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததில் நடைமுறைகள் சரிவர பின்பற்றப்படவில்லை என்று வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு அதற்கான சி.டி. ஆதாரத்தையும் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.

Infosys இன்போசிஸ் லாபம் 24% உயர்வு.

 Infosys Q2 Fy13 Results It Major Wage Hike Employees பெங்களூர்: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸின் லாபம் 24.29% அதிகரித்துள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டு காலத்தில் இதன் லாபம் ரூ. 2,369 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் இது ரூ. 2,289 கோடியாக இருந்தது.
அதே போல, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 9,616 கோடியில் இருந்து ரூ. 9,858 ஆக அதிகரித்துள்ளது. அதாவது வருவாய் 21.7% அதிகரித்துள்ளது.

பெங்களூரில் மாற்றான் படத்துக்கு ஒரு தியேட்டர் கூட கிடைக்கவில்லை!

பெங்களூர்: காவிரி பிரச்சினை வந்தாலே போதும்...
சத்தமில்லாமல் எல்லா தமிழ்ப் படங்களையும் தியேட்டர்களைவிட்டு தூக்கிவிடுவார்கள். புதுப்படங்களுக்கு தியேட்டரும் தர மாட்டார்கள்.
இந்த முறையும் காவிரி கலாட்டா ஆரம்பித்ததுமே, அத்தனை தமிழ்ப் படங்களையும் தியேட்டர்களிலிருந்து எடுத்துவிட்டார்கள் கர்நாடகத்தில். இத்தனைக்கும் இவைதான் அதிக வசூலைக் கொடுத்து வந்தவை. குறிப்பாக ஒற்றைத் திரை அரங்குகளில் தமிழ்ப் படங்கள்தான் அதிக ரசிகர்களை ஈர்த்து வந்தன.
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் சூர்யாவின் மாற்றானுக்கு, பெங்களூரில் ஒரு தியேட்டர் கூட தரப்படவில்லை.

Dirty Picture நயன்தாராவுக்கு ரூ 2.5 கோடி ஆஃபர்? உண்மையா.?

டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 2. 5 கோடி தருவதாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதனை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது. மறுப்பது ரொம்ப நார்மல் தானுங்க வரி கவலை இருக்கே 
தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைதான் இந்த டர்ட்டி பிக்சர். இந்தியில் சக்கைப் போடு போட்ட படம்.
இந்தப் படத்தில் சில்க் வேடத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.
இந்த படத்தை தமிழிலும் தெலுங்கிலும் எடுக்க பல மாதங்களாக முயற்சித்து வருகின்றனர்.

விவாத King ஒபாமா ஏன் அடக்கி வாசித்தார்?

அடுத்த மோதலுக்குத் தயாராகிறார் ஒபாமா: 'பொய் ஸ்பெஷலிஸ்ட்' ராம்னிக்கு பதிலடி தருகிறார்!

நியூயார்க்: அக்டோபர் 3 ம் தேதி 'பொய் ஸ்பெஷலிஸ்ட்' மிட் ராம்னியுடன் நடந்த முதல் நேரடி விவாதத்தில் தான் மிகவும் நாகரீகமாகவும் மென்மையாக நடந்து கொண்டதாகவும், முடிந்துபோன விவகாரத்தைப் பேசவேண்டாம்... அடுத்து நடக்கப் போவதைப் பேசுங்கள் என்றும் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய அங்கமாக நடைபெறும் பிரதான வேட்பாளர்களின் முதல் நேரடி விவாதம் அக்டோபர் 3 ம் தேதி டென்வர் நகரில் நடைபெற்றது. அதிகம் அலட்டிக்கொள்ளாமல் பங்கேற்ற ஒபாமாவை விட மிட் ராம்னி திறமையாக வாதாடினார் என்று கருத்து கணிப்பு தெரிவித்தது.
முன்பு தான் பேசிய அத்தனை அபத்தக் கருத்துக்களுக்கும் மாறாக ராம்னி அடுத்தடுத்து பொய்கள் கூறியதில் ஒருவேளை ஒபாமா அசந்துவிட்டாரோ என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். பின்னர் அதுதான் உண்மை என்பதை ஒபாமாவே தெரிவித்திருந்தார்.

Punjab 10ல் ஏழு இளைஞர்கள் போதை அடிமைகள்: ராகுல் கவலை

Sperm Shock for Young Macho PunjabisThe big, macho Punjabi male is losing his vigour and that, too, fast. The sperm count of men from Punjab has drastically gone down, thanks to drug abuse, alcoholism and overuse of pesticides.Data compiled by a WHO committee has brought these findings to the fore. “The sperm count is going down and this is evident from increasing cases of infertility in young males,” says Dr BS Shah, who is a member of the WHO committee on semen analysis.

 சண்டிகார்: ""பஞ்சாபில், 10 இளைஞர்களில், ஏழு பேர் போதைக்கு அடிமைகளாக உள்ளனர்,'' என, காங்., பொதுச் செயலர் ராகுல் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில், இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள, காங்., பொதுச் செயலர் ராகுல், பஞ்சாப் பல்கலைக் கழக வளாகத்தில், இந்திய மாணவர் அமைப்பினர் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: பஞ்சாபில் ஆட்சியில் உள்ள, அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி அரசு, இளைஞர்களுக்கு குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு எதையும் செய்யவில்லை. இங்கே, மனித வளம் இருக்கிறதா, இல்லையா என, யோசிக்கத் தோன்றுகிறது. இளைஞர்களில், 10ல் ஏழு பேர், போதைக்கு அடிமையானவர்களாக உள்ளனர்.

மாயாவதி கட்டிய நினைவிடங்களை வாடகைக்கு விட அகிலேஷ் முடிவு


உத்தர பிரதேசத்தில், முந்தைய மாயாவதி ஆட்சியின் போது, லக்னோ மற்றும் நொய்டா நகரங்களில் கட்டப்பட்ட, தலித் தலைவர்களுக்கான, பிரமாண்ட நினைவிடங்கள், பூங்காக்களில், காலியாக உள்ள இடங்களை, திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு, வாடகைக்கு விட, ஆளும் சமாஜ்வாதி அரசு முடிவு செய்துள்ளது.

உ.பி.,யில், கடந்த முறை, ஆட்சியிலிருந்த, முதல்வர் மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் அரசின் போது, 6,000 கோடி ரூபாய் செலவில், தலித் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. தலைநகர் லக்னோ, முன்னணி வர்த்தக நகரம் நொய்டா போன்ற இடங்களில், அம்பேத்கார், கன்ஷிராம், மாயாவதி போன்றோருக்கு கட்டப்பட்ட, பிரமாண்ட நினைவிடங்கள் மற்றும் மாயாவதி பெயரில் நிறுவப்பட்ட இடங்களைப் பராமரிக்க, 5,634 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர், கன்ஷிராம் பிறந்த நாள், விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாறியதும், காட்சியும் மாறியது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்ததும், அதிரடி நடவடிக்கைகளைத் துவக்கினார். "தலித் தலைவர்களின் நினைவிடங்களில், காலியாக இருக்கும் பகுதியில், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் கட்டப்படும்' என்றார். இதற்கு, மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்தார். "நினைவிடங்களில் கை வைத்தால், நடப்பதே வேறு' என, எச்சரித்தார். எனினும், தன் முடிவில், அகிலேஷ் யாதவ் உறுதியாக உள்ளார். கன்ஷிராம் பிறந்த நாளில் அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை ரத்து செய்தார்.

கோவைக்கு மின்வெட்டு ஆனால் ஜக்கிக்கு 24 மணிநேரமும் ஏசி!

, October 11, 2012
கோவை-ஈஷா14 மணிநேர மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் தவித்துக் கொண்டிருக்க, அதே கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என ஒரு காலத்தில் கோவை அழைக்கப்பட்டது. சிறு, குறு தொழிற்சாலைகள் அந்தளவுக்கு இம்மாவட்டத்தில் நிறைந்திருந்தன. நிலமற்ற கூலி விவசாயிகளும், பண்ணையடிமைகளும் ஒருவேளை உணவுக்காக தஞ்சம் அடைந்தது இங்குதான்.
அப்படிப்பட்ட கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நாளொன்றுக்கு இரண்டு முதல் 10 மணி நேரங்கள் வரை மின்வெட்டு தேவைக்கேற்ப அமலாக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களாக இந்த எண்ணிக்கை 14 மணிநேரம் வரை அதிகரித்திருக்கிறது.
இதனால் கோவையில் உள்ள சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்களது குடும்பங்கள், இப்போது வாழவழியின்றி தவிக்கின்றன. இந்த திமிர் பிடிச்ச தில்லு முள்ளு சாமியார் மின்வாரியத்துக்கு என்ன குடுத்தான் ?

நாஞ்சில் சம்பத் ஆவேசம்! மதிமுகவில் இருந்து ஒதுக்க சதி!

நாஞ்சில் சம்பத் வைகோவிடம் இருந்து கழருகிறார் அம்மாவின் ஆசியும் தாமரையின் கனிவும் இருக்கவே இருக்கிறதே 
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, அக்கட்சியிலிருந்து வெளியேற, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் அவர் இணையவதற்கான சில வேலைகளை அதிமுகவினர் சிலர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது, இந்த நிலையில்,
ராமநாதபுரத்தில் பேசிய அவர், மதிமுகவில் இருந்து என்னை ஒதுக்கி வைக்க ஆளும் கட்சி முயல்கிறது. கட்சியின் பொதுச்செயலாளருக்கும், தனக்கும் விரோதம் ஏற்படுத்தும் விதத்தில் சில ஊடங்களும் பெரிதுபடுத்துகின்றன. நான் ஒருபோதும் கட்சியின் பொதுச்செயலாளருக்கோ, கட்சிக்கோ துரோகம் இழைப்பவன் அல்ல.செத்தாலும் வைகோவின் காலடியில் சாவேனே ஒழிய மதிமுவைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன். இன்றைய மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, நான் வெளிநாட்டு பயணம் போயிருந்த நிலையில், இந்த ஆளும்கட்சி நாஞ்சில் சம்பத் கட்சி மாறுகிறார் என்று பெரிதுபடுத்துகிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்றார்.

மின் வாரிய அலுவலகம் சூறை தினமும் 16 மணிநேரம் மின்தடை

தினமும் 16 மணிநேரம் மின்தடை ஏற்படுவதைக் கண்டித்து, மேல்விஷாரத்தில் மின்வாரிய அலுவலகம் சூறையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டையடுத்த மேல்விஷாரத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 16 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று மாலை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர். இந்நிலையில், அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்றிரவு 9 மணிக்கு மின்வாரிய அலுவகத்தை முற்றுகையிட்டு, மேஜை, கம்ப்யூட்டர் போன்றவற்றை அடித்து நொறுக்கினர். பில் புக்குகளை தீயிட்டு எரித்தனர். மின்வாரிய அலுவலக காவலாளி பலராமனுக்கும் அடி விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இருப்பினும் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்

10 நாட்களில் 21 பேருக்கு "டெங்கு' :அதிகரிக்கிறது பாதிப்பு

சென்னை: கடந்த, 10 நாட்களில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில், 21 பேருக்கு, "டெங்கு' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் மட்டும், எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்ச்சல் வேகமாகப் பரவுகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
சென்னையில், "ஈடிஸ்' வகை கொசுக்களால், "டெங்கு' காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஆங்காங்கே, "டெங்கு' பாதிப்பால், இறப்பு நேர்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வியாழன், 11 அக்டோபர், 2012

Tamilnadu: 900 நீதிபதிகள் மீது புகார் கடும் நடவடிக்கை பாயும்:

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள நீதிபதிகளில் 900 பேர் மீது புகார்கள் உள்ளன. இதில் 500 புகார்கள் மீது தீவிர பரிசீலனை நடந்து வருகிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நீதிபதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் எச்சரித்துள்ளார். சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் 167 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், மூத்த நீதிபதிகள் எலிபி தர்மராவ், நாகப்பன், பானுமதி உள்ளிட்ட ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்றனர். பதவி பிரமாணம் எடுத்து கொண்ட சிவில் நீதிபதிகளுக்கான பயிற்சியை தலைமை நீதிபதி இக்பால் தொடங்கி வைத்து பேசியதாவது: இதுவரை நீங்கள் சுதந்திர பறவையாக இருந்திருப்பீர்கள். நினைத்ததை எல்லாம் செய்து முடித்திருப்பீர்கள். இப்போது நீங்கள் நீதிபதிகள். உங்கள் பணி காலத்தில் தொழில் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். விமர்சனத்துக்கு ஆளாகாதீர்கள். மக்கள் கடைசியாக நிவாரணம் தேடி வருவது நீதிபதிகளிடம்தான். யாராவது ஒருவர், நீதிபதி ஊழல் செய்தார் என்று விரல் நீட்டி குற்றம் சாட்டினால், அவர் நீதிபதியாக இருப்பதை விட்டுவிட்டு வக்கீல் தொழிலுக்கு திரும்பிவிடலாம்.

8.75 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும்-காவிரி கண்காணிப்பு குழு உத்தரவு


காவிரிநதிநீர்ஆணைய கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கடந்த மாதம் 19-ஆம்  தேதி நடைபெற்றது. அப்போது, தமிழகத்திற்கு செப்டம்பர் 20-ஆம்  தேதி முதல் அக்டோபர் 15-ஆம்  தேதி வரை தினமும் வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் அதனை கருநாடக அரசு ஏற்க மறுத்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தின்  கண்டனத்தையடுத்து தண்ணீர் திறந்துவிட்டது. ஆனால் அதையும் 8-ஆம் தேதியுடன் நிறுத்திவிட்டது. இதனையடுத்து கர்நாடக அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

பேபி ஈமு கோழி: பேபி, தங்கதுரை, வங்கிக் கணக்குகள் சொத்துக்கள் முடக்கம்!

Viruvirup
முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும், பேபி ஈமு பண்ணை உரிமையாளர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், விசாரணையின் போது இருவரிடமும் எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை.
மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரில் பேபி ஈமு பண்ணை நடத்திய தங்கதுரை, தொழிலை நிர்வகித்து வந்த அவரது மனைவி பேபி ஆகியோர் செய்த கவர்ச்சி விளம்பரங்களை நம்பி தமிழகம் முழுவதும் 46 கிளை ஏஜென்ட்கள் மூலம் 2600 முதலீட்டாளர்களிடம் ரூ.37 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டது.
தங்கதுரையை முதலீட்டாளர்கள் தேடிப்பிடித்து சேலம் எஸ்பி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பேபியை கருமலைகூடல் போலீஸ் கைது செய்தது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெறுகின்றன.

நடிகை ஹேமஸ்ரீ மர்மச்சாவு: கணவர் கைது

பெங்களூரு:கன்னட டிவி நடிகை ஹேமஸ்ரீயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டிவி நடிகை ஹேமஸ்ரீ கடந்த 2011ம் ஆண்டு தொழில் அதிபர் சுரேந்திரபாபுவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் வசித்து வருகிறார்.
சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவரவே தனது கணவர் மீதும், மாமியார், மாமனார் மீதும் போலீசில் மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கூறி போலீஸ் பாதுகாப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில் ஹேமஸ்ரீ- சுரேந்திரபாபுவுக்கு இடையே சமாதானம் எற்படவே இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதனையடுத்து செவ்வாய்கிழமையன்று ஆந்திர மாநிலம் ஆனந்தபூரில் நடைபெற்ற உறவினர் குடும்ப நிகழ்ச்சி செல்லும் போது ஹேமஸ்ரீக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே பெங்களூரு திரும்பிய சுரேந்திரபாபு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஹேமஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே ஹேமஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கர்நாடக ஜனதா கட்சி' எடியூரப்பா புதிய கட்சி Karnataka Jantha Party

'கர்நாடக ஜனதா கட்சி' என்ற பெயரில் எடியூரப்பா புதிய கட்சி தொடங்குகிறார்
கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா சுரங்க முறைகேடு புகாரை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார். தன் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த புகாரை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தன் மீதான புகார் ரத்து செய்யப்பட்டு விட்டதால் தன்னை மீண்டும் முதல்- மந்திரி ஆக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மேலிடத்திற்கு எடியூரப்பா கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் மேலிட தலைவர்கள் மீது எடியூரப்பா கடும் அதிருப்திஅடைந்தார்.

இந்த நிலையில் தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, மாநில தலைவர் பதவியையாவது வழங்க வேண்டும் என்று எடியூரப்பா கேட்டு வந்தார். இந்த முயற்சியும் எடுபடவில்லை. எக்காரணத்தை கொண்டும் எடியூரப்பாவுக்கு கட்சி தலைவர் பதவி வழங்குவது இல்லை என்று கட்சி மேலிடம் முடிவு செய்தது.

India பணக்காரர் பட்டியல் 1 முகேஷ் , 2 மிட்டல், 3 அஸிம்பிரேம்ஜி

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி முதலிடத் தில் உள்ளார்.



No.1: Mukesh Ambani ($22.3bn)
Age : 54 years.
Company : Petrchemicals, Oil & Gas.
Country : India.
Despite losing $4.4 billion, Mukesh Ambani's Reliance Industries, that struck a $7.2-billion deal with BP, holds the top spot with a net worth of $22.6 billion.

No.2: Lakshmi Mittal ($20.7bn)
Age : 61 years.
Company : Steel.
Country : India.
Lakshmi Niwas Mittal is the chairman and chief executive officer of Arcelor Mittal, the world's largest steelmaking company.

No.3: Azim Premji ($15.9bn)
Age : 66 years.
Company : Software.
Country : India.
Tech tycoon Azim Hashim Premji of Wipro remains at No 3 even after donating shares worth $2 billion to his charitable trust, which made him one of Asia's top philanthropists.

சரக்கடித்துவிட்டு சட்டகல்லூரி மாணவர்கள் ரகளை

திருச்செங்கோட்டில் நடந்த தனியார் கல்லூரிக்கு எதிரான முற்றுகை போராட் டத்தில் பங்கேற்க சென்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள், ஆறு பேர் நேற்று மாலை சேலம் வந்தனர்.புதிய பேருந்து நிலையம் உள்ள “டாஸ்மாக்” கடை பாரில், சரக்கடித்த  மாணவர்கள் கடையில் சுண்டல் விற்றுகொண்டிருந்தவர்களிடம் காசு கொடுக்க முடியாது என தகராறில் ஈடுபட்டனர். அப்போது, பாரில் இருந்த கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய மாணவர்கள், வி.எஸ்.ஏ., வணிக வளாகம் அருகில் உள்ள ஷேர் ஆட்டோ ஸ்டேண்டுக்கு சென்றுள்ளனர். அங்கு பயணிகளுடன் நின்ற ஆட்டோவில் ஏரியுள்ளனர். ஏற்கனவே ஆட்டோவிற்குள் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.

ஈரான் மீது விமான தாக்குதல்!??ஆச்சரியப்படுவதற்கில்லை

ஒபாமாவின் செல்வாக்கை கடைசி நிமிடத்தில் ‘எகிற வைக்க’, ஈரான் மீது விமான தாக்குதல்!

Viruvirupu,
அமெரிக்காவும், இஸ்ரேலுமான சேர்ந்து ஒரு விமானத் தாக்குதல் ஜாயின்ட் ஆபரேஷனை நடத்தி, ஈரானின் அணுஆலையை குண்டுவீசி தகர்க்கும் திட்டம் ஒன்று உள்ளது என பாரின் பாலிஸி சஞ்சிகை தெரிவித்துள்ளது. இந்த பேச்சுக்களுடன் நெருங்கிய தொடர்புடைய பார்ட்டி ஒன்றிடம் இருந்து தமக்கு கிடைத்த தகவல் இது எனவும் பாரின் பாலிஸி கூறியுள்ளது.
குண்டுவீச்சு விமானங்கள், உளவு விமானங்களின் (drone) உதவியுடன் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என்றும், “ஓரிரு தினங்கள் இந்த ஆபரேஷன் நடக்கலாம், அதுவே ஓரிரு மணிநேரத்தில் முடிந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் அணு உலை மீதான தாக்குதல் என்றால், அவர்களது மிகப்பெரிய அணுஆலையான நதானஸ் மீதே பிரதான தாக்குதல் இருக்கும் என்பதை ஊகிக்கலாம். இதிலுள்ள சாதகமாக அம்சம் என்னவென்றால், இந்த அணுஆலை மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே இல்லை.

நித்தி உன்கிட்ட மறைக்க என்ன இருக்கு?” ஹைகோர்ட் நோஸ்கட்

நித்திக்கு ஹைகோர்ட் நோஸ்கட்: “இவரது விவகாரத்தில் மறைக்க என்ன இருக்கு?”

Viruvirupu
“நித்தியானந்தா விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவுமில்லை. அவரைப் பற்றி முன்னாள் சீடர்கள் கருத்து சொல்வதை தடுக்க முடியாது” என்று கூறி, நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.உன்கிட்ட
தம்மைப் பற்றி தமது முன்னாள் சீடர்கள் ஆர்த்தி ராவ், லெனின் கருப்பன் ஆகியோர் கருத்து தெரிவிக்க தடைவிதிக்க கோரி, சென்னை ஹைகோர்ட்டில் நித்தியானந்தா ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “என்மீது கர்நாடகாவில் குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில் ஆர்த்தி ராவும், நித்தியதர்மானந்தா என்ற லெனின் கருப்பனும் அரசுத் தரப்பு சாட்சிகளாக உள்ளனர். ஆர்த்தி ராவ் என்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான??? கருத்துகளை பத்திரிகை மற்றும் டி.வி.களுக்கு அளித்து வருகிறார்.

காணாமல் போன நடிகை..அதிமுக பிரமுகர் கஸ்டடியிலிருந்து மீட்பு!

சற்றேறக்குறைய ஒரு மாதம் முன்பு, காதலில் சொதப்பிய நடிகை ஒருநாள்


P

போனால் சும்மா இருக்க முடியாதல்லவா!  பழனியப்பன் பழனியம்மாவா மாறிப்போனா மை டியர் ஆனா ஆவன்னா 

தொடர்ந்து போலீஸ் துணையுடன் வலை வீசித் தேடியதில், ஒரு அதிமுக முக்கியப் பிரமுகர் வீட்டில் நடிகை அமுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அத்தனை சுளுவாக போலீஸ் நெருங்கமுடியாத இடம். அதிகாரத்தில் இருப்பவர் வேறு.
பின்னர் போலீசார், ரொம்ப ரொம்ப இறங்கிப் போய் பிரமுகரை கெஞ்சிக் கூத்தாடி நடிகையை விடுவித்து ஒப்படைத்தார்களாம்.
இந்தத் தகவல் மேலிடத்துக்குப் போன அடுத்த கணம், பலிபீடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டார் அந்த முக்கியப் பிரமுகர்! இதானாய்யா உன் 'உயர் கல்வி' லட்சணம் என வறுத்தெடுத்ததோடு ப்யூஸைப் பிடுங்கிவிட்டார்கள்.
பிரமுகருக்கு கட்சி, பதவி ரீதியாக தண்டனை கிடைத்தாலும், நடிகையை எந்த நேரமும் தூக்கிப் போக ஆட்கள் தயார்தானாம்!

நான் ஈ இந்தியில் விஜய்க்கு பதிலாக சல்மான்கான்

 Naan Ee has collected close to Rs 25 crore (Gross) in 50 days. The movie was released in 235 screens (Tamil version) worldwide. It completed 50 days in 74 centres across Tamil Nadu on August 25. The movie was acquired by PVP Cinemas for Rs 5 crore and it sold the television rights to Sun TV for Rs 3.5 crore
இயக்குனர் ராஜமௌளி இயக்கத்தில் ரசிகர்களின் பேராதரவு பெற்ற படம் நான் ஈ. படத்தில் சின்ன ஈ செய்யும் சேட்டைகள் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களையும் கவர்ந்தது. படம் முடிந்து பெயர் ஓடிக்கொண்டிருக்கும் போது நடனமாடும் ஈ, நடிகர் விஜய் திருமலை படத்தில் ஆடிய ஸ்டெப்களை போடுவது ரசிகர்களை கவர்ந்தது. இப்போது இயக்குனர் ராஜமௌளி ‘நான் ஈ’ படத்தை இந்தியில் வெளியிட இருக்கிறார். இந்தி ரசிகர்களைக் கவரும் நோக்கில் படத்தில் முடிவில் ஈ நடனமாடும் அந்த சில நிமிட காட்சிகளை மட்டும் மறுபடியும் கிராஃபிக்ஸ் செய்து அதில் விஜய் போல ஆடிய ஸ்டெப்களுக்கு பதிலாக, இந்தி நடிகர் சல்மான்கான் போல ஈ நடனமாடும் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள்

Man who scared Indira Gandhi

எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து வெளியேறி கட்சி ஆரம்பித்து மக்கள் செல்வாக்கு பெற்று இடைத்தேர்தலில் வென்று இரண்டாம் மட்ட தலைவர்கள்   ஒவ்வொருவராக திமுக வை விட்டு விலகி எம்.ஜி.ஆரிடம்  சென்ற பின் கருணாநிதிக்கு விஷேச அந்தஸ்து அரசியல் உலகில் ஏற்பட்டது.
 காங்கிரசுக்கு எதிரான தேடப்பட்ட அகில இந்திய தலைவர்களுக்கு கருணாநிதி மீது ஒரு வாஞ்சை ஏற்படும்படியாக,எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தியின் விருப்பப்படி செயல்பட மறுத்த முதல்வர் கருணாநிதியின் அரசு ிஸ்மிஸ் ெய்யப்பட்டது.தி.மு.கவில் ஸ்டாலின் உள்பட பலர் மிசாவில் கைது செய்யப்பட்டனர்.

 ஆங்கில பத்திரிக்கையொன்று அட்டைப்படத்தில் கருணாநிதி படத்தைப் போட்டு என்று கௌரவப்படுத்தியது காமராஜரை கைது செய்ய மறுத்தார் கருணாநிதி என்பது துவங்கி,தலைமறைவாக இருந்த ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் போன்றவர்களுக்கு உதவினார் என்பதாகவெல்லாம் பலவாறு கருணாநிதிக்கு புதிய அரசியல் பிம்பம்.
இரண்டாம் சுதந்திரப்போர் நாயகர்களாக அறியப்பட்ட ஜெயப்ரகாஷ் நாராயண்,மொரார்ஜி தேசாய்,வாஜ்பாய்,ராஜ்நாராயண்,சஞ்சீவரெட்டி,போன்றோரின் good books  ல் இடம் பெற்ற தி,மு.க தலைவர் நிஜமாகவே தமிழகத்தில் படித்தவர்கள் மத்தியில்Reasonable politician என்று மதிக்கப்பட்டார்.

பிளேட் ஒன்று 7,721 ரூபாய் பிரதமர் வீட்டு விருந்து


கடந்த மே மாதம் 22 அன்று தன் வீட்டில் ‘பர்த்டே பார்ட்டி’ வைத்தார் பிரதமர் மன்மோகன் சிங். ம்ஹும். இது அவர் ‘பிறந்த’ நாள் அல்ல. அவர் தலைமையேற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா அல்லது நான்காம் ஆண்டு தொடக்க விழா.
இந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி மெத்தப் படித்த அதிகாரிகள் மூலமாக 603 பேருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார், மன்மோகன் சிங். ஆனால், 375 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தின் 46 சதவீத பள்ளிகளில் ஒரு கழிப்பறை கூட‌ இல்லை

மிழகத்தின் 46 சதவீத பள்ளிகளில் ஒரு கழிப்பறை கூட‌ இல்லை என்கிறது “குழந்தைகள் உரிமைகளும், நீங்களும்” என்ற தன்னார்வக் குழுவின் கள ஆய்வு. இன்னும் ஆறு மாதங்களில் அனைத்துப் பள்ளிகளும் போதுமான கழிப்பறைகளைப் பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்த போதிலும் அதனை பள்ளிகள் எதுவும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
சென்னையில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினரில் 100 க்கு 94 பெற்றோர்கள் போதுமான கழிப்பறை வசதிகளோ அல்லது இருபால் பிரிவினருக்கும் தனித்தனியான கழிப்பறைகளோ இல்லாத காரணத்தால் தான் தமது பெண் குழந்தைகளை பள்ளியில் இருந்து இடையிலேயே நிறுத்தி விடுகின்றனர். பெரும்பான்மை பெற்றோர்களுக்கு (85%) கழிப்பறை வசதி குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தாலும் அடிப்படை வர்க்கமாக இருப்பதால் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டியுள்ளது. அங்கு கழிப்பறைகள் சில சமயங்களில் அமைந்து விட்டாலும் பராமரிக்கப்படாத காரணத்தால் அங்கே போகவும் முடியாது. அதற்கு போதுமான துப்புரவுத் தொழிலாளிகளை அரசு நியமிப்பதும் இல்லை. தனியார்மயம் கல்வியில் நுழைந்த பிறகு அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ‘முன்னேற்றங்கள்’ இவை.

லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் ஆணும் பெண்ணும் கைது! போட்டோகிராபர் கடத்தலுடன் தொடர்பு?


Viruvirupu
லண்டன் ஹீத்ரோ ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய இருவர், தீவிரவாத குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 26 வயதான, ஒரு ஆண், ஒரு பெண், எகிப்து தலைநகர் கய்ரோவில் இருந்து வந்திறங்கியபோது நேற்றிரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இருவரும் பிரிட்டிஷ் பிரஜைகள்.
இருவரும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக சிரியா சென்றுவிட்டு திரும்புகிறார்கள் என்பதே குற்றச்சாட்டு. சிரியாவில் வைத்துக் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் போட்டோகிராபர் ஒருவரின் கடத்தலுடன் இவர்கள் தொடர்புடையவர்களா என விசாரிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.

DMK:சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு கூடாது

 தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிக்கை:மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ஏற்கனவே மத்திய அமைச்சரவையில், தி.மு.க., சார்பில் இடம் பெற்றுள்ளவர்களைத் தவிர, மேலும், கட்சியின் சார்பில், புதியதாக அமைச்சரவையில் இடம் கோருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பது, கட்சியின் கொள்கை நிலைப்பாடு என கூறியுள்ளார்.

புரோக்கர் தப்பியோட்டம்! இலங்கையரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக கூறிய

Viruvirupu
ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக திருச்சி புரோக்கர் ஒருவர் கூறி அழைத்துச் சென்ற 55 இலங்கையர், தமிழகம், எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை காளியம்மன் கோயிலில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் நூறு பேர் படகு மூலம் விளாத்திகுளம் கடல் பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும், இதற்காக அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் தங்கி இருப்பதாகவும் தமிழக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இரண்டு தினங்களுக்கு முன்பு சிந்தலக்கரை வந்த இவர்கள், காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் போல அங்கு தங்கினர். அங்கிருந்து கலைக்குட்டம் செல்வதற்கு எட்டயபுரத்தில் வேன் வாடகை பேசியபோது, இவர்கள் மீது சந்தேகமடைந்த வேன் டிரைவர்கள் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

புதன், 10 அக்டோபர், 2012

எஸ் ஏ சந்திரசேகரன்: விஜய் என் பிள்ளைதான் என்றாலும்

Vijay Demanded Big Director Heroine For Tuppakki பெருசு பெருசா கேட்டார் விஜய்: எஸ் ஏ சந்திரசேகரன்

துப்பாக்கி படத்துக்காக பெரிய இயக்குநர், பெரிய ஹீரோயின், பெரிய ஒளிப்பதிவாளர் என பெருசு பெருசா கேட்டார் விஜய். அவர் கேட்டது போல கொடுத்ததால்தான் நடிக்க சம்மதித்தார் என்றார் எஸ்ஏ சந்திரசேகரன்.
துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எஸ் ஏ சந்திரசேகரன் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது. இந்தப் படம் உருவான விதம், அதற்கு விஜய் போட்ட நிபந்தனைகளையெல்லாம் அவர் சுவாரஸ்யமாக சொன்னார்.
எஸ்ஏசியின் பேச்சு:
விஜய் என் பிள்ளைதான் என்றாலும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் எனக்கு படம் பண்ண கால்ஷீட் தருவார்.
அப்படித்தான் துப்பாக்கிக்கும் கால்ஷீட் கொடுத்தார். இந்தப் படம் ஆரம்பிக்கும் முன்ப எனக்கு அவர் போட்ட கண்டிஷன்கள் கொஞ்சமல்ல.

துரை தயாநிதி: அதற்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்?”

துரை தயாநிதி, போலீஸூடன் ஒத்துழைக்க தயார்” புதிய மனுவில் ‘ஏதோ’ உள்ளது!

Viruvirupu
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீண்டும் ஒரு தடவை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். துரை தயாநிதியின் மனைவி உட்பட அவருடன் தொடர்புடையவர்களை ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைத்துவரும் நிலையில், இந்த இரண்டாவது முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்ஜாமீன் கிடைத்தால், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார் துரை தயாநிதி.

ஜெயந்தி நடராஜன் புகார், எனது அதிகாரத்தில் ப.சிதம்பரம் எப்படி தலையிடலாம்?

டெல்லி: பெரிய முதலீடுகள் தொடர்பாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கொண்டு வந்துள்ள புதிய திட்டம், பிற அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் ஜெயந்தி நடராஜன் பிரதமருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த காங்கிரஸ் அமைச்சர் மீது மற்றொரு காங்கிரஸ் அமைச்சர் குறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் நிதியமைச்சரானது முதல் அடுத்தடுத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அமலாக்கி வரும் சிதம்பரம் தனது அடுத்த நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

Channai போலீஸ் கமிஷனர் நிருபர்கள் மோதல்



சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மாலை நடந்தது.  புதிய கமிஷனராக ஜார்ஜ் பொருப்பேற்றபின் நடக்கும் முதல் சந்திப்பு இது. 
சென்னை ஐசிஎப் பகுதியில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டு ஆந்திரமாநிலம் ஓங்கோல் அருகே நக்சல்கள் உள்ள பகுதியில் இருந்து மீட்கப்பட்டான்.  இது தொடர்பாக கமிஷனர் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் இருந்து செய்தியாளர்களுக்கு தகவல் வந்தது.
கமிஷனரின் முதல் சந்திப்பு என்பதால் பிரிண்ட் மீடியாக்கள், விஷூவல் மீடியாக்கள் அனைவரும் மாலை 5 மணி அளவில் கமிஷனர் அலுவகத்தில் கூடினர்.
அப்போது திடீரென கமிஷனர் ஜார்ஜ், ’’எனக்கு முன்னால் எந்த மைக்கையும் வைக்காதீர்கள்’’ என்று அறிவித்தார்.  அப்போது ஜெயா தொலைக்காட்சி நிருபர், ’’சார், எங்க மைக் கூடவா?’’ என்று கேட்டார்.
அப்போது அருகில் இருந்த மற்ற காவல் அதிகாரிகள்,  ’’கமிஷனருக்கு மைக், கேமிரா என்றால் அலர்ஜி’’ என்று விளக்கம் அளித்தனர்.  இதனால் வீடியோ மேன்களும், கேமராமேன்களும் வேறு வழியின்றி வெளியேற்றப்பட்டனர்.  செய்தியாளர்களும் கமிஷனரும் நேருக்கு நேர் வாக்குவாதம் செய்யக்கூடிய ஒரு சூழல் இதனால் ஏற்பட்டது.
இருப்பினும் செய்தியாளர்கள் பெருந்தன்மையோடு,  ‘’ சார், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்யுங்க’’ என்று கமிஷனரிடம் கேட்க,  அதற்கு அவர், ‘’ எனக்கு எந்த பப்ளிசிட்டியும் நீங்கள் தரவேண்டாம்’’ என்று காட்டமாக பதிலளித்தார்.
இதனால் ஜெயா டிவியின் நிருபர் தலைமையில் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.   
அம்மாவின் நம்பிக்கையை பெற இப்படியெல்லாம் நல்ல பிள்ளை வேஷம் போட  வேண்டி இருக்கிறது 

காதல்..தங்கையைக் கொலை செய்த அண்ணன்! சகோதர பாசமாம்

டெல்லி: தங்கை காதலித்து வருவது பிடிக்காத ஒரு பிளஸ் ஒன் மாணவர் தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார்.
டெல்லியைச் சேர்ந்தவர் சுஜீத். 18 வயதான இவரது தங்கை பெயர் லட்சுமி. இருவரும் பிளஸ் ஒன் படித்து வந்தனர். லட்சுமி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இது சுஜீத்துக்குப் பிடிக்கவில்லை. தங்கையிடம் காதலை விட்டு விடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதை லட்சுமி ஏற்கவில்லையாம்.
இதனால் கோபம் கொண்ட சுஜீத், தனது தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டார். பலமுறை கத்தியால் குத்தியதால் லட்சுமியின் உடல் ரத்தக் கோலமாக மாறிப் போனது. பின்னர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார் சுஜீத்.
போலீஸார் சுஜீத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Jeyalalitha:ஜனநாயகம், மாண்பு, கடமை, நன்மை, முன்னேற்றம்

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் மனம் போன போக்கில் பேசி, திட்டமிட்டு சட்டசபையில் அமளியை உருவாக்கும்போது கண்டிப்புடன் செயல்பட வேண்டிய கடமை சபாநாயகருக்கு உண்டு என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
தமிழக சட்டசபையின் புதிய சபாநாயகராக தனபால் இன்று தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடந்த சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா, தனபாலை வாழ்த்துப் பேசினார். அவர் கூறுகையில்,
ஜனநாயகம் என்பது பண்பட்டதும், பயனுடையதும், ஆற்றல் மிகுந்ததும், அருமை வாய்ந்ததுமான ஆட்சி முறை. ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற பேதம் இல்லாமல், நாட்டில் உள்ள அனைவரின் நன்மையையும், முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டது தான் ஜனநாயகம் ஆகும்.
ஜனநாயகத்தில் மக்கள்தான் அரசின் கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். இப்படிப்பட்ட உயரிய ஜனநாயக ஆட்சியில் சுதந்திரமாக கருத்துகளை பிரதிபலிக்கும் இடமாக இந்தச் சட்டமன்றம் திகழ்கின்றது.

மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு?

www.vinavu.com
மருந்து-கம்பெனிபன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மருத்துவத் துறை எப்படி இயங்குகிறது…? ஒரு மெடிக்கல் ரெப் விளக்குகிறார்

    “டாக்டர் ஆகனும் நாட்டுக்காக சேவை செய்யனும் அதுதான் என் லட்சியம்” பத்தாம் வகுப்பு வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளிவந்ததும் தமிழக பத்திரிகைகளில் மாணவர்களின் புகைப்படங்களுடன் இது போன்ற செய்திகள் வரும். அடுத்த வருடம் அதே செய்தி வேறு மாணவர்களின் புகைப்படத்துடன் வரும். இவர்கள் அனைவருமே மருத்துவர்களாகிவிடுகிறார்களா ?
    எனது நண்பனும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானதும் இப்படித்தான் சொன்னான். பிறகு பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் சீட் கிடைக்கவில்லை. வழியின்றி எம்.எஸ்.சி. மைக்ரோபையாலஜி படித்தான். வேலை தேடி அலைந்தபோது, சரியான வேலை கிடைக்காததால் மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ்) ஆனான். அது சென்னை நிறுவனம். மாதம் பத்தாயிரம் சம்பளம், பெட்ரோல் அலவன்ஸ், செல்போன் பில், இன்சென்டிவ் என சுகமான வாழ்க்கை அவன் விரும்பிய மருத்துவ துறையிலேயே கிடைத்தது.
    ஓரிரு ஆண்டுகளில் பதவி உயர்வுடன் ஒரு பன்னாட்டு கம்பெனிக்கு சென்றுவிட்டான். மாதச்சம்பளம் பதினெட்டாயிரம், புது வண்டி, புளூ பேன்ட், புளூ ஷர்ட், புளூ டை, ஷூ என்று அவன் வீட்டிலிருந்து வெளியே வரும்

    கோவில்கள் முக்கியமல்ல கழிப்பறைகளே முக்கியம்..ஜெய்ராம் ரமேஷ் கருத்து சரி தான் -கி.வீரமணி

     K Veeramani Supports Minister Jairam Ramesh பக்தி இல்லாவிட்டால் என்ன நட்டம்? ஜெய்ராம் ரமேஷ் கருத்து சரி தான் -கி.வீரமணி

    சென்னை: மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி அந்தக் கூற்று உண்மையே. நடைபாதைக் கோவில்கள் முக்கியமல்ல. வீடுகளிலும் பூஜை அறைகள் முக்கியமல்ல. கழிப்பறைகளே முக்கியம் என தி.க. தலைவர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
    இந் நாட்டில் கோவில்களை உருவாக்குவதைவிட கழிப்பறைகள் (டாய்லெட்) அமைப்பது மிகவும் அவசியம் என்பது போன்ற ஒரு கருத்தைச் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
    இதற்கு உடனே பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ராஜீவ் பிரதாப் ரூடி என்பவர் கண்டனம் தெரிவித்து, ஆகா இதன்மூலம் பக்தியும், மதமும் போய்விடும் என உளறிக் கொட்டி, அக்காவிக் கட்சியின் உண்மை நிறத்தை உலகறியச் செய்துள்ளார். மதவெறி அரசியலின் வெளிப்பாடு அது.
    மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூற்று நடைமுறை உண்மை தான். போக்குவரத்துக்கு இடையூறாக நாட்டில் எவ்வளவு நடை பாதைக் கோவில்கள் உள்ளன தெரியுமா? இவை இடித்துத் தரைமட்டமாக்கப்பட வேண்டியவை என்பதை உயர் நீதி மன்றங்களும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளன.
    இருப்பினும், மாநில அரசுகள் (தமிழ்நாடு அரசு உள்பட - தமிழ்நாட்டில் இப்படி அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோவில்கள் அதிகம் என்று உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியும் கூட) வேடிக்கை பார்த்து, கைகட்டி, வாய் பொத்தி எந்த நடவடிக்கையும் எடுக்காது நிற்கின்றன.