வெள்ளி, 12 அக்டோபர், 2012

மின் வாரிய அலுவலகம் சூறை தினமும் 16 மணிநேரம் மின்தடை

தினமும் 16 மணிநேரம் மின்தடை ஏற்படுவதைக் கண்டித்து, மேல்விஷாரத்தில் மின்வாரிய அலுவலகம் சூறையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆற்காட்டையடுத்த மேல்விஷாரத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 16 மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று மாலை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர். இந்நிலையில், அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்றிரவு 9 மணிக்கு மின்வாரிய அலுவகத்தை முற்றுகையிட்டு, மேஜை, கம்ப்யூட்டர் போன்றவற்றை அடித்து நொறுக்கினர். பில் புக்குகளை தீயிட்டு எரித்தனர். மின்வாரிய அலுவலக காவலாளி பலராமனுக்கும் அடி விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இருப்பினும் பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து போலீசார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக