வியாழன், 11 அக்டோபர், 2012

நித்தி உன்கிட்ட மறைக்க என்ன இருக்கு?” ஹைகோர்ட் நோஸ்கட்

நித்திக்கு ஹைகோர்ட் நோஸ்கட்: “இவரது விவகாரத்தில் மறைக்க என்ன இருக்கு?”

Viruvirupu
“நித்தியானந்தா விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவுமில்லை. அவரைப் பற்றி முன்னாள் சீடர்கள் கருத்து சொல்வதை தடுக்க முடியாது” என்று கூறி, நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.உன்கிட்ட
தம்மைப் பற்றி தமது முன்னாள் சீடர்கள் ஆர்த்தி ராவ், லெனின் கருப்பன் ஆகியோர் கருத்து தெரிவிக்க தடைவிதிக்க கோரி, சென்னை ஹைகோர்ட்டில் நித்தியானந்தா ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “என்மீது கர்நாடகாவில் குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில் ஆர்த்தி ராவும், நித்தியதர்மானந்தா என்ற லெனின் கருப்பனும் அரசுத் தரப்பு சாட்சிகளாக உள்ளனர். ஆர்த்தி ராவ் என்னைப் பற்றி தவறான மற்றும் அவதூறான??? கருத்துகளை பத்திரிகை மற்றும் டி.வி.களுக்கு அளித்து வருகிறார்.

மறைப்பதற்கு என்ன இருக்கு?
ஆர்த்தி ராவ், அவரது தந்தை சேதுமாதவன், லெனின் கருப்பன் ஆகியோர் என்னையும், எனது பக்தர்களைப் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ, கருத்துகள், பேட்டிகள், அறிக்கைகள் அளிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, “தம்மைப் பற்றி மற்றவர்களை பேசக்கூடாது என்று தீர்வு கேட்டு நீதிமன்றத்துக்கு வருகிறவர்கள் சுத்தமான கையோடு இருக்க வேண்டும். தம்மைப் பற்றி மற்றவர்கள் குறை கூறுவதை தடுப்பதற்கும், அவர்களை வாயடைப்பதற்கும் நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடாது.
நித்தியானந்தா சம்பந்தப்பட்ட விவகாரம் அக்குவேறு ஆணிவேறாக இந்தியா முழுவதும் அலசி ஆராயப்பட்டுவிட்டது. அவரது விவகாரத்தை மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
நித்தியானந்தாவின் கேள்விகளுக்குத்தான் பதிலளித்தேன் என்றும், அவரை அவதூறு செய்யும் நோக்கம் எனக்கில்லை என்றும் ஆர்த்தி ராவ் கூறியிருக்கிறார். எனவே, நித்தியானந்தாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நித்யானந்தாவின் மனுவை டிஸ்மிஸ் செய்துள்ளார்.
நித்தி – ஆதீனம் ஊடல்: “வாசல் கதவை ராசலெட்சுமி தட்டுகிற நேரமிது”வைஷ்ணவி காலருகே.. ரஞ்சிதா தோளருகே.. மதுரை போலீஸ் கோர்ட்டருகே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக