வியாழன், 11 அக்டோபர், 2012

ஈரான் மீது விமான தாக்குதல்!??ஆச்சரியப்படுவதற்கில்லை

ஒபாமாவின் செல்வாக்கை கடைசி நிமிடத்தில் ‘எகிற வைக்க’, ஈரான் மீது விமான தாக்குதல்!

Viruvirupu,
அமெரிக்காவும், இஸ்ரேலுமான சேர்ந்து ஒரு விமானத் தாக்குதல் ஜாயின்ட் ஆபரேஷனை நடத்தி, ஈரானின் அணுஆலையை குண்டுவீசி தகர்க்கும் திட்டம் ஒன்று உள்ளது என பாரின் பாலிஸி சஞ்சிகை தெரிவித்துள்ளது. இந்த பேச்சுக்களுடன் நெருங்கிய தொடர்புடைய பார்ட்டி ஒன்றிடம் இருந்து தமக்கு கிடைத்த தகவல் இது எனவும் பாரின் பாலிஸி கூறியுள்ளது.
குண்டுவீச்சு விமானங்கள், உளவு விமானங்களின் (drone) உதவியுடன் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் என்றும், “ஓரிரு தினங்கள் இந்த ஆபரேஷன் நடக்கலாம், அதுவே ஓரிரு மணிநேரத்தில் முடிந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஈரானின் அணு உலை மீதான தாக்குதல் என்றால், அவர்களது மிகப்பெரிய அணுஆலையான நதானஸ் மீதே பிரதான தாக்குதல் இருக்கும் என்பதை ஊகிக்கலாம். இதிலுள்ள சாதகமாக அம்சம் என்னவென்றால், இந்த அணுஆலை மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே இல்லை.
மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியே, தனிப்பட்ட இடம் ஒன்றில் உள்ளது.
இதனால், விமானத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டால், பொதுமக்கள் அழிவு என்பது பூச்சியம் என்ற அளவிலேயே இருக்கும். ஆனால், அணுஆலை பணியாளர்கள், மற்றும் அங்குள்ள விஞ்ஞானிகள் கொல்லப்படுவதை தவிர்க்க முடியாது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேலியர்களை இந்த தாக்குதலை செய்ய அனுப்பிவிட்டு, முக்கிய தருணத்தில் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் இணைந்து கொள்ளும் என கூறப்படுகிறது.
“இந்த விவகாரத்தில், ராஜதந்திர மற்றும், அரசியல் நன்மைகள் இரு தரப்புக்குமே உள்ளன. முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்படியொரு தாக்குதல் ஒபாமாவின் செல்வாக்கை எகிற வைக்கும்” என்கிறது, பாரின் பாலிஸி சஞ்சிகை. ஒபாமாவின் எதிர் வேட்பாளர் மிட் ராம்னி, “ஈரான் விஷயத்தில் ஒபாமா தைரியமாக முடிவு எடுக்க முடியாத நபராக உள்ளார்” என்று தமது பிரசாரத்தில் பேசி வருகிறார்.
பாரின் பாலிஸி சஞ்சிகை இப்படியான விவகாரங்களில், வெறும் வதந்திகளை மட்டும் வைத்து எழுதும் ஊடகம் அல்ல. இவர்கள் தாக்கலாம் என ஊகிக்கப்படும் நதானஸ் அணுஆலையின் சட்டலைட் போட்டோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக