வியாழன், 11 அக்டோபர், 2012

நடிகை ஹேமஸ்ரீ மர்மச்சாவு: கணவர் கைது

பெங்களூரு:கன்னட டிவி நடிகை ஹேமஸ்ரீயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டிவி நடிகை ஹேமஸ்ரீ கடந்த 2011ம் ஆண்டு தொழில் அதிபர் சுரேந்திரபாபுவை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இருவரும் பெங்களூருவில் உள்ள பனசங்கரியில் வசித்து வருகிறார்.
சுரேந்திரபாபு ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவரவே தனது கணவர் மீதும், மாமியார், மாமனார் மீதும் போலீசில் மோசடி புகார் கொடுத்துள்ளார். அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று கூறி போலீஸ் பாதுகாப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில் ஹேமஸ்ரீ- சுரேந்திரபாபுவுக்கு இடையே சமாதானம் எற்படவே இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இதனையடுத்து செவ்வாய்கிழமையன்று ஆந்திர மாநிலம் ஆனந்தபூரில் நடைபெற்ற உறவினர் குடும்ப நிகழ்ச்சி செல்லும் போது ஹேமஸ்ரீக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே பெங்களூரு திரும்பிய சுரேந்திரபாபு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஹேமஸ்ரீயை பரிசோதனை செய்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே ஹேமஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆனால் ஹேமஸ்ரீயின் பெற்றோர் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சுரேந்திரபாபு மீது போலீசில் புகார் அளித்தனர். ஹேமஸ்ரீயின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவருடைய ஆடையில் திரவ கரையும் இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து ஹேமஸ்ரீ அணிந்திருந்த ஆடைகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேமஸ்ரீயின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் சுரேந்திபாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக