வெள்ளி, 12 அக்டோபர், 2012

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்

விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் கடந்த ஆண்டு வரை இந்தியாவின் 2-வது மிகப்பெரிய விமான நிறுவனமாக இருந்தது. ஆனால் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.நஷ்டம், ஊழியர்களின் போராட்டம் போன்ற பிரச்சினைகளால் விமான சேவையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பங்குகளும் கடும் சரிவைச் சந்தித்தன. இந்நிலையில், கிங்பிஷர் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்ட ஜி.எம்.ஆர். நிறுவனத்திற்கு கிங்பிஷர் நிறுவனம் சார்பில் ரூ.10 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. வங்கியில் பணம் இல்லாததால் அந்த காசோலை திரும்பி வந்துவிட்டது.இதையடுத்து ஜி.எம்.ஆர். நிறுவனம் சார்பில் அய்தராபாத் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் , கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா மற்றும் 5 நிர்வாகிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக