சனி, 13 அக்டோபர், 2012

மாற்றான் தயாரிப்பு செலவு அதிகம் So லாபம் ?.

சூர்யாவின் மாற்றான் ரிலீஸ்: முதல் நாள் ரிப்போர்ட் ஆகா ஓகோவா? ஆளைவிடு ஐயோவா?

Viruvirupu
தமிழ் ரசிகர்களுக்கு விஞ்ஞான அறிவு புகட்ட வரும் படம் என்ற ரீதியில் ப்ரீ-ஸ்கிரீனிங் காமென்டுகள் அடிபட்டுக் கொண்டிருந்த மாற்றான், நேற்று வெளியாகியது. டைரக்டர் கே.வி.ஆனந்த், இதைவிட குறைந்த செலவில் எடுத்து வெளியிட்ட கோ படத்தின் கலெக்ஷனை மாற்றான் எட்டிப் பிடிக்க கூடும். ஆனால், தயாரிப்பு செலவு அதிகம் என்ற காரணத்தால், லாபம் குறைவு.
போட்ட காசை வசூலித்துவிடும். ஆனால் முதலீடு செய்யப்பட்ட பணத்தின் நடைமுறை வட்டிவீதத்தை வசூலித்தால் பெரிய விஷயம் என்பதே நிலை.
“தவறு செய்தவர் தந்தையே ஆனாலும், ஹீரோ சும்மா விடமாட்டார்” என்று கே.வி.ஆனந்துக்கு எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டு போய்விட்டார். அதை இப்போது படமாக கொடுத்திருக்கிறார் இவர். காலம் மாறிவிட்டதால், மரபணு மாற்றம் அது இதென்று லேசாக சயின்ஸ் தடவியிருக்கிறார்கள்.
ரஷ்யா பற்றியெல்லாம் கதைக்குள் கொண்டுவந்து, ரஷ்ய மொழியில் உக்ரேனில் நின்று பேசுகிறார்கள்.
உக்ரேன் முன்பு சோவியத் ரஷ்யாவில் இருந்த நாடு என்று டைரக்டருக்கு தெரிந்துள்ளது. ஆனால், உக்ரேனில் பேசப்படுவது ரஷ்ய மொழி அல்ல,
உக்ரேனியன் மொழி என்பதை யாரும் அவருக்கு சொல்லவில்லை.
அல்லது உடுமலைப்பேட்டையில் படம் பார்ப்பவருக்கு உக்ரேனியன் மொழியில் பேசினாலென்ன, உதித் நாராயணன் பேசும் தமிழில் பேசினாலென்ன என்று நினைத்திருக்கலாம்.
சூர்யாவின் நடிப்பு அருமை. ஆனால், இப்படியான நடைமுறைக்கு மாறான கேரக்டர் உள்ள படங்களில் ஹீரோவாக நடிப்பவர் அரிதான நபராக இருக்க வேண்டும்.
சூர்யா அப்படி அரிதான நபர் இல்லை.
அச்சு வெல்லம் விளம்பரத்தில் இருந்து அணு ஆயுத விளம்பரம் வரை, “நம்ம சரக்கை வாங்குங்க” என்று நாள் பூராவும் டி.வி.யில் கூவிக்கொண்டு இருக்கும் விளம்பர ஸ்டார். அவரை வைத்து கோ போன்ற ரெகுலர் கேரக்டர் ஹீரோ படம் எடுக்கலாம். ஆனால், வித்தியாசமான கேரக்டரில் தோன்றினால், விளம்பர சூர்யா கண்களில் தெரிவார்! அதுதான் இதில் நடக்கிறது.
பின்பாதி சற்றே இழுவலான மாற்றான், பணம் போட்டவர்களை வீதிக்கு கொண்டுவர மாட்டான் என்று சொல்லலாம். டைரக்டர் அல்லது ஹீரோவின் மகுடத்தில் ஒரு ரத்தினம் அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக