சனி, 24 செப்டம்பர், 2011

Biased judges and super singers,finally Sai Charan won

Sai Charan was crowned the Airtel    Super Singer for season 3, at the Grand Finale held at the Chennai Trade Centre, yesterday. Thousands of active and interested audiences witnessed the much expected Airtel Super Singer 3 final, where the four finalists – Sathya Prakash, Pooja, Sai Charan and Santhosh got the greatest opportunity to sing before thousands of LIVE audience for the grand finale. The victory of these singers was judged by the votes of the viewers.Launched in July 2010 for the hunt of Tamilnadu’s best singer, the show had reached new heights and redefined the television viewing in Tamilnadu. Many aspiring singers across Coimbatore, Trichy and Chennai took part in the ground auditions of Super Singer and proved their singing mettle in front of many legendary singers. Many innovative rounds like Black & white, Dedication, Unplugged, Western, Classical the show proved to be a success at the end of every round.

எல்லாருக்கும் எல்லாம் தெரியும்!ராசாவின் சத்திய வார்த்தைகள்

எல்லாம், எல்லாருக்கும் தெரியும்! என்ன ஏதேனும் பகவத் கீதை வ்யாக்யானம் போல் தெரிகிறதா? இல்லை, ஸ்பெக்ட்ரம் ராசா, இப்பிரச்சனையில் சிக்கிய நாள் முதலாகக் கதறும் மூன்று வார்த்தைகள் இவை. இதன் அர்த்தம் சமீபமாக இரண்டு நாட்களாகத்தான் முழுமையாக வெளி வரத் துவங்கியுள்ளன. இம்முறை சிக்குபவர் முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் உள்துறை அமைச்சருமான, சிவகங்கைச் சீமான், ப.சிதம்பரம்.

நமத்துப் போன பட்டாசு திடீரென பெரும் சத்தத்துடன் வெடிப்பது போல இப்பிரச்சினை வெடித்துள்ளது.

பார்ப்பனக் குருக்கள்! 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றான்

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள் !
கோவையில் சேட்டு வீட்டு  குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா?







வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.
செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று தந்தை குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இடையில் கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சிறுமி ராஜேஸ்வரி என்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் அந்தச்சிறுமியின் குடியிருப்புப் பகுதியருகே விசாரணை செய்திருக்கின்றனர். மேலும் பள்ளி அருகேயும் விசாரணை செய்திருக்கின்றனர்.
பள்ளி அருகே மூன்று கட்டிடங்கள் தாண்டி குமார குருக்கள் எனும் 46 வயது ஆஞ்நேயர் கோயிலின் பார்ப்பனப் புரோகிதர் குடியிருக்கிறான். இவன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே இது போன்ற புகாரில் சிக்கி கைதாயிருக்கிறான். வீட்டு முகப்பில் அப்பாவி போன்று அமைதியாக இருந்த இந்த குருக்களை பிடித்து விசாரித்த போது உண்மை வெளியே வந்திருக்கிறது.

Chennai விமானங்கள் மோதல் தவிர்ப்பு : 255 பயணிகள் உயிர் தப்பினர்!.

மீனம்பாக்கம்: ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ஏர் இந்தியா விமானம் தரையிறங்க வந்தது. சரியான நேரத்தில் பைலட் பார்த்ததால், பெரிய அளவில் நடைபெற இருந்த விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது. 255 பயணிகள் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் இன்று காலை 9 மணியளவில் புறப்பட்டது. விமானத்தில் 147 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் உட்பட 152பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, ஓடுபாதையிலே நின்றது.

பிரான்சில் பர்தா அணிந்த 2 பெண்களுக்கு அபராதம்!.

மீயக்ஸ்: பிரான்சில் தடையை மீறி பர்தா அணிந்து வந்த 2 இஸ்லாமிய பெண்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது. பிரான்ஸ்சில் இஸ்லாமிய பெண்கள் முகத்தை முழுவதுமாக மறைக்கும் பர்தா அணிய கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் தீவிரவாதம் அதிகரித்துள்ள நிலையில், பர்தாவை தவறாக பயன்படுத்த கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டு வரப்பட்டது.
எனினும், மத வழக்கங்களுக்கு தடை விதித்ததால் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மீயக்ஸ் நகரில் பர்தா அணிந்து வந்த 2 பெண்களுக்கு உள்ளூர் நீதிமன்றம் நேற்று அபராதம் விதித்தது. ஹிந்த் அமாஸ் (32) என்ற பெண்ணுக்கு 120 யூரோவும், நஜாத் நய்த் அலி (36) என்ற பெண்ணுக்கு 80 யூரோவும் அபராதம் விதிக்கப்பட்டது.

செல்வம் அடைக்கலநாதன் பிணையில் செல்ல அனுமதி!:Sun TV வழக்கில்

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த சன் தொலைக்காட்சி: வழக்கில் செல்வம் அடைக்கலநாதன் பிணையில் செல்ல அனுமதி!

புலிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கத்துக்கு எதிரான வகையிலும் வவுனியாவில் செயற்பட்டு வந்த சன் தொலைக்காட்சி சேவையை நடத்தினார்கள் என்ற அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் (சட்டமா அதிபதியின் இலக்கம் (ERR/76/2009) குற்றம் சுமத்தப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான (அமிர்தநாதன் அடைக்கலநாதன்) செல்வம் அடைக்கலநாதனை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதியளித்தது.

விடுதலைச் சிறுத்தைகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு- திமுகவுக்குக் கண்டனம்

சென்னை : கூட்டணியில் இருக்கும்போதே தனித்துப் போட்டியிடுவதாக திமுக அறிவித்தது கண்டனத்துக்குரிய செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அது அறிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்ட தயாநிதி: பிரதமருக்கு எழுதிய கடிதம் அம்பலத்திற்கு வந்தது

புதுடில்லி: தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் சுதந்திரமாக செயல்பட்டு தனது துறையே முடிவு செய்வதற்கு அனுமதிக்குமாறும், அமைச்சரவை குழுவின் அறிவுரை ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார். இதற்கு பிரதமர் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துக்கொண்டதால் ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு பிரதமரும் காரணமாக அமைந்து விட்டதாகவும், இவரையும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் அரசியல் மேலும் சூடு பிடிக்கும் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

2 ஜி ஸ்பெகட்ரம் முறைகேடு வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி விழுங்கி நிற்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்து மத்திய அமைச்சர் ராஜா முதல் கனிமொழி மற்றும் மெகா கம்பெனிகளின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிற வேளையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊழலுக்கு வழி ஏற்பட்டுள்ளது என்று தற்போதைய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது புதிய தமிழகம்- தனித்துப் போட்டி

முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. எனவே உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவால் அரசியல் ரீதியாக அங்கீகாரம் பெற்ற கட்சிகளில் ஒன்று புதிய தமிழகம். இந்தக் கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார்.
ஆனால் வழக்கம்போல ஜெயலலிதாவின் அதிரடி அணுகுமுறையால் அதிமுக கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட தேமுதிக கூட்டணியிலிருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

திருப்பூர் மினி முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவுன் நகை, பணம் கொள்ளை


திருப்பூர்: பிரபல அடகு நிறுவனமான மினி முத்தூட் நிதி நிறுவனத்தின் திருப்பூர் கிளையில் 3489 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சி அடைந்து முத்தூட் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தால் திருப்பூரே பரபரப்பாகியுள்ளது.

Sai charan winner of Airtel Super Singer 3 youtube on 23rd September 2011


Vijay TV is THE best channel i have ever been associated with. they treat their people well, are fair and just. a delight to work with.
Sai Sharan has been announced as the winner of Airtel Super Singer 3 after the grand grand finals on 23rd September 2011. It was a very tough competition between the contestants Satyaprakash, Sai Sharan, Santhosh and Pooja.. Sai Sharan came onto the finals after the wild card entry from the public voting.
This result of the winner is also based on public voting in internet, sms and phone. This result might be delightful for some viewers and shocking for some of them where they expected other contestants will bag the title. Sai Sharan will be getting the 40 lakhs apartment from Temple Green properties in Oragadam and also the surprise that came out today that the winner will also get a chance to become a playback singer with A.R Murugadoss' next production movie. This news was one of the surprise element in the show and this will be a dream come true for Sai Sharan. There were several other prizes announced for many other contestants and I will soon post them with my review of the day.

அழகிரி தரப்பால் தாமதமான தி.மு.க., வேட்பாளர் பட்டியல்

தி.மு.க.,வில், மத்திய அமைச்சர் அழகிரியின் கட்டுப்பாட்டில் உள்ள தென் மாவட்டங்களுக்கு, உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மதுரை, சேலம் மேயர் பதவிக்கு, யாரை நியமிப்பது என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏழு மேயர் வேட்பாளர்களை, தி.மு.க., நேற்று முன்தினம் அறிவித்தது. திருச்சி தவிர, மதுரை, சேலம் மேயர் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. முதல் பட்டியலில், 22 மாவட்டங்களில், 86 நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர் பெயர்கள்

தேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி

சென்னை: ""தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய தோல்வி அடைந்ததற்கு, தன் கட்சித் தொண்டர்களே காரணம்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: உள்ளாட்சித் தேர்தல் விவரங்களை, தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே அறிவித்ததற்கு, ஆட்சியினர் மீது ஒரு வழக்கு தொடரலாம். தொகுதி விவரங்களை மறைத்து வைத்ததால், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால், வேட்பாளர்கள் தேர்விலும் அவசரம் ஏற்பட்டது. தொகுதி மாற்றத்தால், பலருக்கு சீட் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், இதை நினைத்துக் கொண்டிருக்காமல், தொண்டர்கள் காலதாமதம் செய்யாமல், தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். கடந்த காலத்தில், உள்ளூர் பிரச்னைகளில் தி.மு.க., செயல்பட்டதை, வாக்காளர்களுக்குச் சொல்ல வேண்டும்.

7 முனை போட்டி! உண்மையான பலத்தை சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம்

சென்னை: அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் சட்டசபைத் தேர்தலில் அமைத்த கூட்டணியை கலைத்துவிட்டு, தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. முக்கிய கட்சிகளான இவை இரண்டும் எடுத்த முடிவால், அக்கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு, தனித்தனியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் என, ஏழு முனை போட்டி உருவாகியுள்ளது. இவர்கள் தவிர, பா.ஜ.,வும், கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன.

யாழில் முகமூடித் திருடர்களின் அட்டகாசம், நால்வருக்கு காயம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நடைபெற்ற திருட்டு முயற்சியின் போது யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு வைத்தியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி கருவப்புலம் வீதியைச் சேர்ந்த இந்த மருத்துவர்களின் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் இவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு பணம், நகை போன்ற பெறுமதியான பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 மாதங்களில் 669 தமிழ் பொலிஸார் வட பகுதிக்காக இணைப்பு

இலங்கை மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வை நீக்குவதற்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புகள் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாறாக இராணுவத்தினருக்கு எதிரான பிரச்சாரங்கள் இடம்பெறுவதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் தற்போது குறைந்த அளவிலான இராணுவத்தினரே கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த 30 மாதங்களில் 669 தமிழ் பொலிஸார் வட பகுதிக்காக இணைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையின் போது சுட்டிக்காட்டினார். இதன்படி இலங்கையில் 1,143 தமிழ் பொலிஸார் தற்போது கடமையில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ராஜபட்ச மீதான குற்றச்சாட்டை ஐ.நா. விவாதிக்காது

mahintha -usநியூயார்க், செப்.23: இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பற்றி ஐ.நா. சபையின் பொதுக்குழுவில் விவாதிக்க சாத்தியக்கூறு இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
 ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் தாக்குதல் நடந்திருப்பதாகவும், கடுமையான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை அதிபர் ராஜபட்சவை நேரடியாகவே குற்றம்சாட்டியிருந்தது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பல அதிபர் ராஜபட்சவின் செயல்பாட்டுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன.

ஓ! இவன் இயக்கத்தில் ஒரு முக்கியமான ஆள்’

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (15)
15. புலிகளிடம் வாங்கிய இரண்டாவது உதை!
visuநேரம் மாலையாகி விட்டிருந்தது. நான் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்த நேரமும் கடந்து, 24 மணித்தியாலங்கள் ஆகி விட்டிருந்தன. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குற்றுயிரும் குலையுயிருமாக சிறைச்சாலைக்கு திரும்பவும் அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்தத் திகில் காட்சியில் நானும் ஒருவனாக விரைவில் மாற இருப்பது நிச்சயம் என எனது மனம் சொல்லியது.
Ltte prisonபொழுது கருகும் நேரம் என்னிடம் வந்த புலி உறுப்பினன் ஒருவன், தன்னுடன் வருமாறு என்னை அழைத்தான். நான் தட்டுத்தடுமாறி எழுந்து அவனுடன் புறப்பட்டேன். எதற்காக அழைத்துச் செல்கிறான் என்பதைக் கேட்க முடியாத நிலை.
சிறைச்சாலைக் கட்டிடத்துக்கு (இந்த வீட்டைப் பல கனவுகளுடன் கட்டிய புண்ணியவான், இந்த மண்ணிலும் தனது வீட்டிலும் வருங்காலத்தில் தமிழர் பெயராலேயே இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்)

66வது மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றினார்-ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு!

சர்வதேச ரீதியாக பயங்கரவாதம் உள்ள நிலையில் இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 66வது அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவையில்லை - பேர்டி!

மாகாண சபைகளுக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தேவையில்லை - பேர்டி!

மாகாண முதலமைச்சர்களின் 29 வது, மாநாடு இன்று எம்பிலிபிட்டியவில் ஆரம்பமாகிறது.
கடந்த வரும் இந்த மாநாட்டுக்கு சப்ரகமுவ மாகாணம் தலைமை வகித்தது.
இதற்கிடையில் நாளை இடம்பெறும் மாநாட்டின் போது, ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் இந்த தகவலை எமது செய்திசேவைக்கு வழங்கினார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் குறித்து, இந்த மாநாட்டின் போது பேசப்படுமா என்று எமது செய்திப்பிரிவு, பேர்டி பிரேம்லாலிடம் வினவியது.

இந்த அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு தேவை இல்லை என்று அவர் தெரிவித்தார்.

மனைவி, மச்சினி, மாமியாருடன் பிரேசில் பெருசு ‘ஜாலி’ வாழ்க்கை!.

பிரேசிலியா: தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்ட் நார்ட் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் கோஸ்டா ஒலிவரா (90). விவசாய பண்ணையில் வேலை பார்த்து வந்தவர். வயதாகிவிட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார். இவருக்கு 2 மனைவிகள், 50 பிள்ளைகள், 100-க்கும் அதிகமான பேரக் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவி பெயர் பிரான்சிஸ்கா. அவருக்கு 17 குழந்தைகள் பிறந்தன. உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரான்சிஸ்கா இறந்த பிறகு, மரியா சில்வா என்பவரை ஒலிவரா 2-வது திருமணம் செய்தார். அவர் மூலமாக 17 குழந்தைகள்.

சாய் சரண் சூப்பர் சிங்கராக தெரிவு Sai Charan – Winner of Airtel Super Singer 3








விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 3 சாய் சரண் சூப்பர் சிங்கராக தெரிவுசெய்யப்பட்டார். இரண்டாவது இடம் சத்யப்ரகஷுக்கும் மூன்றாவது இடம் பூஜாவுக்கும் நான்காவது இடம் சந்தோஷுக்கும் கிடைத்துள்ளது.

ஆஸ்கார் போட்டிக்கு தேர்வான மலையாள படம்

2010-ம் ஆண்டுக்கான ஆஸ்கார் போட்டிக்கான படத்தை தேர்வு செய்வதற்காக இந்திய திரைப்பட சம்மேளனம் 14 பேர்களை கொண்ட குழுவை நியமித்தது.
அந்த குழுவைச் சேர்ந்த 16 பேரும் தெய்வதிருமகள், முரண், ஆடுகளம், கோ, எந்திரன் ஆகிய 5 தமிழ் படங்கள் உள்பட 6 மொழிகளைச் சேர்ந்த 16 படங்களை பார்த்தார்கள்.

அதில் `ஆதாமின்டே மகன் அபு' என்ற மலையாள படத்தை தேர்வு செய்து ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த தகவலை குழுவின் தலைவர் எடிட்டர் பி.லெனின் தெரிவித்துள்ளார்.
கடைசியில் அங்காடித் தெருவுக்கு முதுகில் குத்தியாச்சு. ஆமானப்பட்ட சத்யஜித் ரேயின் படங்களையே  ஆஸ்காருக்கு இந்தியா அனுப்பவில்லையே? எப்படி நாங்க வல்லரசாக முடியுமோ தெரியலையே?

கொழும்பு யாழ்ப்பாணம் தனியார் பஸ்கள் பொலிஸாரினால் முடக்கம் _


வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புறப்படுவதற்கு பயணிகளுடன் தயார் நிலையில் நின்றிருந்த 8 தனியார் பஸ்களை சுற்றிவளைத்த வெள்ளவத்தை பொலிஸார் குறித்த பஸ்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு தடை விதித்துள்ளனர்.
இதனால் பல்வேறு தேவைகளின் நிமித்தம் யாழ். குடாநாட்டில் பல பகுதிகளுக்கு செல்லவிருந்த சுமார் 400 பயணிகள் நிர்க்கதிக்குள்ளாகிய நிலைமை நேற்று இரவு ஏற்பட்டுள்ளது. மேற்படி 8 தனியார் பஸ்களுக்குமான வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமை யே இந்த பஸ்களின் யாழ்ப்பாணத்துக்கான பயணம் முடக்கப்பட்டிருப்பதற்குக் காரணமெனத் தெரிவிக்கப்படுகிறது

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

பார்ட்டிகளில் பட வாய்ப்பு தேடும் சோனியா அகர்வால்

பார்ட்டி என்றால் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் நடிகை சோனியா அகர்வால்.

நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் எப்படி வாய்ப்பு தேடுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிரபலங்கள் கொடுக்கும் அனைத்து பார்டிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். பார்ட்டி என்றால் பல பேர் வருவார்கள். புதிதாக பலர் அறிமுகமாவார்கள். அதன் மூலம் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது சோனியாவின் கணிப்பு. அவர் கணிப்பு தவறாகவில்லை.

பரமக்குடி சம்பவம்: உற்சாகத்தில் தி.மு.க.,: கலக்கத்தில் அ.தி.மு.க.,

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறு பேர் பலியானதை தொடர்ந்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி பகுதிகளில் தி.மு.க., விற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தி.மு.க., வினர் உற்சாகத்திலும், அ.தி.மு.க.,வினர் கலக்கத்திலும் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.,11ல் இம்மானுவேல் நினைவு தினத்தன்று சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலியாயினர். கடந்த சட்டசபை தேர்தலின்போது தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிவாகை சூடிய அ.தி.மு.க., பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்பு வரை முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி உட்பட மூன்று ஒன்றியங்கள், பேரூராட்சிகள் உட்பட பல இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறிப்புகள்!


போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!
காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!
முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.

புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

சவூதி பெற்றோர் மன்னிப்பு வழங்கினால் மாத்திரமே றிஸானா விடுதலையாவாள்.

றிஸானா தான் குழந்தையை கொலை செய்ததாக மூன்று தடவைகள் அதாவது பொலிஸ் விசாரணையில், மஜிஸ்திரேட் விசாரணையில், மற்றும் நீதிமன்ற விசாரணைகளில் தெரிவித்துள்ளார். நான்காவது தடவையே விசாரணையின் போது தான் கொலை செய்யவில்லை என மறுத்து வாக்கு மூலம் அளித்துள்ளார்.
நீதிமன்றில் விசாரணையின் போது றிஸானா, தான் எவ்வாறு சிசுவை கொலை செய்தேன் என்பதை சைகை மூலமும் செய்து காட்டியுள்ளார். மூன்று நீதிபதிகள் அடங்கிய  விசாரணையின் போதே தான் கொலை செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் - யூகங்கள்

  • பணவீக்கம் உயர்ந்துகொண்டே போகிறது.
  • பெட்ரோல் விலை மீண்டும் ஏறியுள்ளது.
  • வட்டி விகிதம் உயர்ந்துகொண்டே போகிறது.
  • பங்குச் சந்தை யோயோ மாதிரி அப்படியும் இப்படியும் அலைபாய்கிறது. ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது. (இன்று காலையிலிருந்து இதுவரை சென்செக்ஸில் கிட்டத்தட்ட 700 புள்ளிகள் சரிவு!)
  • தங்கம் விலை கிடுகிடுவென ஏறுகிறது.
  • டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது.

கோடிகளில் கொழிக்கும் மத்திய அமைச்சரவை ! பி.சாய்நாத் !!

கொழிக்கும் மத்திய அமைச்சரவை
2009 தேர்தலின் போது நமது மத்திய அமைச்சர்கள் அளித்த சொத்துக் கணக்கு இரண்டே ஆண்டில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட ‘வளர்ச்சி’ குறித்து கேள்வி எழுப்புகிறார் சாய்நாத்
தி இந்து நாளிதழின் ஊரகப் பிரிவு ஆசிரியராக பணியாற்றும் திரு பி சாய்நாத், மக்களின் வாழ்விலுள்ள அவலங்களை தோலுரித்துக் காட்டுவதில் மிகச் சிறந்த படைப்பாளர்.  இன்று (21/09/11) நாடெங்கிலுமுள்ள ஊடகங்களில் இந்திய திட்டக் குழு ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ 32 சம்பாதிப்பார் எனில் அவரை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர் என கூற முடியாது என்ற ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை வெளியிட்டு பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்த அதே வேளையில், இந்திய அரசியல் என்பது எவ்வாறு வளம் கொழிக்கும் தளமாக மாறியிருக்கிறது என்பதை அற்புதமான தனது நக்கலும், நையாண்டியும் கலந்த நடையில் மக்களின் வயிற்றெரிச்சலை வெளிக்கொணரும் விதமாக  இந்து நாளிதழில் வந்த கட்டுரை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழாக்கம் செய்து இதன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெ.தி.கவின் இரட்டை வேடம்!முத்துராமலிங்கத்திற்கு வக்காலத்து! பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம்

பெரியார் திராவிடர் கழகம் (பெ.தி.க) நடத்தி வரும் மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் செப்டம்பர் 20 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் பேரா.தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, மதிமுக வைகோ, கொளத்தூர் மணி (பெ.தி.க), காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் பேசினர். அக்கூட்டத்தில் பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி பேசியதில் இருந்து:
 “ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் பொய்வழக்கு சோடனை செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரிக்க ஆரம்பிக்கும் முன் நான் இவ்வாறு சொன்னேன். 1957 ஆம் ஆண்டு இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் கைதாகி இருந்தார். அவ்வழக்கில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக 100 அரசு சாட்சியங்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். வழக்கை மதுரையிலோ ராமநாதபுரத்திலோ வைத்து நடத்த இயலாத சூழ்நிலை. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது.

சமூக விரோத செயல்கள், வன்முறை சம்பவங்கள் யாழ். குடாநாட்டில்


யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் சமூக விரோதச் செயல்கள் என்பன மீண்டும் அதிகரித்துள்ளன. நேற்று கொக்குவில், இருபாலை மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பங்களில் ஒருவர் கொல்லப்பட்டும் 9 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறையில் நேற்று அதிகாலை ஒருமணியளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சவரிமுத்து ஜேசுராஜா (57 வயது ) என்பவரே வெட்டிக் கொலை செய்யப்பட்டவராவார். இவரின் மனைவியும் பிள்ளையும் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கொலைக்கு குடும்பப் பகையே காரணம் எனக் கூறப்படுகிறது.

IIT மாணவன் தற்கொலை: 5 ஆண்டுகளில் 9 பேர் தற்கொலை

கான்பூர்: ஐஐடி கான்பூரில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த மாணவன் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஐஐடி பிடிக்காததால் தான் தற்கொலை செய்து கொள்வதாக எழதி வைத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னௌஜைச் சேர்ந்தவர் மெஹ்தாப் அகமது(19). அவர் ஐஐடி கான்பூரில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அவர் க்ல்லூரிக்குச் செல்லவில்லை. உடனே அவரது நண்பர்கள் விடுதிக்கு வந்து பார்த்தபோது அவர் தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இது குறி்தது விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். ஐஐடி பிடிக்கவில்லை என்றும் அதனால் தான் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ், ஒரு நிமிட காட்சிக்கு மட்டும் ரூ.1 கோடி


தமிழ்ப்பற்று காரணமாக...: 
மீண்டும் தமிழ்ப் படம் எடுக்க வந்தேன்.
சூர்யா நடிக்கும் '7 ஆம் அறிவு' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.விழாவில் பேசிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்,

தமிழகத்தில் கலையும் கூட்டணி!கட்சிகள் ஆடை இழந்த அலங்காரிகளாக

ஏறக்குறைய சகல கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளன. சவடால் அரசியல் பேசிய ராமதாஸ் வைகோ விஜயகாந்த் மற்றும் கம்முனிஸ்ட் கட்சிகள் ஆடை இழந்த அலங்காரிகளாக நிற்கின்றனர்.காங்கிரசின் நிலைமை சற்று பரவாயில்லை ஏனெனில் அவர்கள் ஏற்கனவே நிர்வாணிகள் தான். பல கோஷ்டிகள் இருப்பதால் அவர்களின் வாக்குகளை அவர்களே பல கட்சிகளுக்கும் வாங்கி கொடுப்பார்கள். மேலும் பாராளுமன்ற தேர்தலில் தான் அவர்களின் வாக்கு வங்கி உதவும்.
நீண்ட காலமாகவே அங்கும் இங்கும் பிச்சு பிச்சு காலம் ஒட்டி வந்த ராமதாசுதான் மிகவும் கலவரமாகி உள்ளர்போல தெரிகிறது.

பிரித்தானியாவில் இருந்து 150 தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்?

அரசியல் அந்தஸ்த்துக் கோரி தமது நாட்டில் தஞ்சமடைந்த மேலும் சில இலங்கைத் தமிழர்களை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட சுமார் 150 இலங்கைத் தமிழர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


எதிர்வரும் 28ம் திகதி தனியான விமானமொன்றில் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக பிரித்தானிய குடிவரவு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து மறுக்கப்பட்ட சில இலங்கையர்கள் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோ சாலையில் எறியப்பட்ட 35 மனித உடல்கள்


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் மர்ம நபர்களால் நெடுஞ்சாலை ஒன்றில் ஏறியப்பட்ட 35 மனித உடல்களை மீட்ட போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெக்சிகோ நாட்டின் விராகுரூஸ் நகரில் உள்ள பரபரப்பான நெஞ்சாலை ஒன்றில் 2 டிராக்குகளில் வந்த ஒரு கும்பல் 35 பேரின் உடல்களை சாலையின் நடுவே குவித்து வைத்துவிட்டு தப்பி சென்றுவி்ட்டனர். உடல்கள் குவிக்கப்பட்ட பகுதியில் ஒரு பாலம் இருந்ததால், அங்கு சில நிமிடங்களுக்கு போக்குவரத்தை மறித்து நிறுத்திவிட்டு இந்த கொடுமை அரங்கேறி உள்ளது.

காங்கிரஸை திருப்பி அடிக்கும் திமுக!2ஜி..ப.சிதம்பரம் விவகாரம்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ள புதிய குற்றச்சாட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா இல்லையா என்பதை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதன் மூலம் அவர் மீது தனக்குள்ள அதிருப்தியை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார் திமுக தலைவர் கருணாநிதி.

பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம் ப.சிதம்பரத்தை குறை சொல்லி பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் திமுக எம்பி கனிமொழி, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் வலுவிழக்கும் என்று திமுக கருதுகிறது.

தேமுதிகவினர் சபதம்!அதிமுகவை அத்தனை இடங்களிலும் டெபாசிட் இழக்க வைப்போம்-


Vijayakanth Graphics
சென்னை: எங்களை நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டது அதிமுக. எனவே வருகிற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக போட்டியிடும் அத்தனை இடங்களிலும் அவர்களைத் தோற்கடிப்பது மட்டுமல்ல, டெபாசிட் இழக்க வைத்து நாங்கள் யார் என்பதைக் காட்டுவோம் என்று தேமுதிகவினர் ஆவேசமாக கூறியுள்ளனர்.
போன மச்சான் திரும்பி வந்தான் கதையாக மாறி விட்டது தேமுதிகவின் நிலை. சொந்தக் காலிலியே நின்று வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக என்ற வாடகை வாகனத்தில் ஏறி வசதியாக சட்டசபைக்குள் போய் விட்டது. ஆனால் அதிமுகவின் போக்கால் இப்போது அந்தக் கட்சி நடு ரோட்டுக்கு வந்துள்ளது-மீண்டும்.

சோனியாவுடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு

TR Baalu and Sonia
டெல்லி: அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு டெல்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக மூத்த தலைவரான டி.ஆர்.பால இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது திமுக தலைவர் கருணாநிதியின் சார்பில் சோனியாவின் உடல் நிலை குறித்து பாலு விசாரித்தார். மூத்த தலைவரான கருணாநிதியின் ஆசிர்வாதத்தைப் பெற்றதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோனியா கூறியதாக, பாலு பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 8 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற சோனியா அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு இந்த மாத துவக்கத்தில் தான் நாடு திரும்பினார். அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை நடந்தது என்பது தெரியவில்லை.
நாடு திரும்பிய அவரை மூத்த காங்கிரஸ் தலைவர்களே இன்னும் சந்தித்துப் பேச முடியவில்லை. இந் நிலையில் இன்று அவரை பாலு சந்தித்துள்ளார்.

உடப்பு காளி கோவில் மிருக பலி தடை நீதிமன்றம் உத்தரவு

No animal sacrifices at kovil- Court rules


The animal sacrifice which was to be performed today at the Kali Kovil in Udappuwa, Arachchikattuwa was suspended on a court order yesterday (22). Puttalam Additional District Judge Mrs. I.D. Illangasinghe gave the restraining order after having considered a report filed by the Mundalama Police. OIC Mundalama Police IP Sujeewa Alawatta told court that he sought a court order restraining the animal sacrifice at the Udappuwa Kali Kovil to prevent any possible civil commotion.
Meanwhile, the Priests and the trusties of the Udappuwa Weera Badhrakali Amman Kovil had decided to abstain from following the age-old ritual of animal sacrifice and the offering of dana with meat to the devotees and said that they would instead offer a vegetarian meal to the many devotees who visit the Kovil.
The kovil authorities affirmed that their decision, taken on Wednesday (21) was not influenced by any threats but was a result of a discussion they had with police inside the Kovil premises. The spokesman also said that the police prevailed upon them on the legality of the animal sacrifice and that the priests of the Kovil in agreement decided to discontinue the ritual of animal sacrifice

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தும் பிரேரணை தோற்கடிப்பு


பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தி வைப்பதென்று அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டாக இதனைத் தோற்கடித்துள்ளன.அவுஸ்திரேலிய கியன் கட்சியின் செனட்டர் லீ. ரியானன் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்தார்.
நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் லீ. ரியானின் பிரேரணை மீது உரையாற்றிய அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதி இது போன்ற பிரேரணைகள் மூலம் ஒரு நாட்டின் சிக்கல் வாய்ந்த வெளிநாட்டு கொள்கையை தீர்த்து வைக்க முடியாது என்று கூறினார்.செனட்டர் லீ. ரியானன் இரகசியமாக கடந்த வாரம் நடைபெற்ற வட்ட மேசை கலந்துரையாடலிலும் இலங்கையின் யுத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்த ஒரு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

புதிய கூட்டணிக்கு வாய்ப்பு?இடதுசாரியினர் எதிர்பார்க்கின்றனர்


சென்னை, செப். 22: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியில் சேர்ந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.  இவ்விரு கட்சிகளும் தனியாக வந்தால் தாங்களும் அந்த அணியில் சேர்ந்து போட்டியிட விரும்புவதாக விடுதலை சிறுத்தைகள் சார்பில் இக் கட்சியினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.  உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை முதலில் அறிவித்த அதிமுக, அடுத்தடுத்து 124 நகராட்சிகளுக்கும், அனைத்து பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும்கூட எல்லா வார்டுகளுக்குமாக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது அதிமுக.  இருந்தாலும் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பதவிகளில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என இடதுசாரி கட்சிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை

நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அங்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து உரையாடிய போது எடுத்த படம்.

தெரியாம கேஸ் போட்டுட்டோம் எங்கள மன்னிச்சுருங்க அப்படீன்னு

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு தொலைத்தொடர்புத் துறையே காரணம்
புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டுக்கு, உள்துறை அமைச்சர் சிதம்பரம் பொறுப்பு ஏற்க முடியாது. தொலைத் தொடர்புத் துறையின் முரணான செயல்பாடு தான், இந்த பிரச்னைக்கு காரணம்' என, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.


தெரியாம கேஸ் போட்டுட்டோம் எங்கள மன்னிச்சுருங்க அப்படீன்னு ராசாகிட்டயும் கனிமொழிகிட்டையும் சிபியை சொல்லீட்டு கேச மூடிருமோ ? போற போக்க பாத்தா அப்படிதான் தெரியுது 
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும்' எனக்கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வாதம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. சி.பி.ஐ., வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்,

இரண்டாகப் பிரிகிறது ஜேவிபி! புதிய கட்சி விரைவில் அறிவிப்பு?

இலங்கையின் முக்கியமான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பிக்குள் உட்கட்சி முரண்பாடு உக்கிரமடைந்துள்ளது.
ஜே.வி.பியின் தலைமைத்துவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் கட்சியின் மாற்றுக் கொள்கையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தரப்பினருக்கும், சிரேஸ்ட உறுப்பினர் பிரேம்குமார் குணரட்னம் தரப்பினருக்கும் இடையில் கடுமையான முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிணக்குகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நீதிமன்றின் உதவி நாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக மாற்றுக் கொள்கையாளர்கள் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளனர்.

கள்ளத்தனமாக மாடு வெட்டுபவர்களின் கைகளை வெட்டுவதாகவே

கள்ளத்தனமாக மாடு வெட்டுபவர்களின் கைகளை வெட்டுவதாகவே கூறினேனே தவிற முஸ்லிம்கள் மாடுகள் அறுப்பது தொடர்பில் நான் குறிப்பிடவில்லை : அமைச்சர் மேவின் சில்வா!

கள்ளத்தனமாக மாடு வெட்டுபவர்களின் கைகளை வெட்டுவதாகவே கூறினேனே தவிற முஸ்லிம்கள் மாடு அருப்தைப்பற்றி நான் குறிப்பிடவில்லை என்று அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார். கொழும்பு தெவட்டகஹ தர்கா மற்றும் பள்ளி வாயலுக்குச் சென்ற அமைச்சர் அங்கு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படியே மாடு அறுக்கின்றனர்.அதில் தவறில்லை. அவர்களது மார்க்கக் கடமையாகிய ‘குர்பானை’ அவர்கள் உணவாகக் கொள்கின்றனர். ஆனால் மிருக பலி, கள்ளத்தனமாக மாடு வெட்டுவது என்பன வேறு கதை.
நாhன் குறிப்பிட்டது முஸ்லிம்கள் மாடு அறுப்பதை அல்ல. கள்ளத்தனமாக மாடு அறுக்கும் கள்வர்களையே குறிப்பிட்டதாகத் அவர் மேலும் தெரிவித்தார்

கலாநிதியையே மதிக்காத சக்சேனா 60 கோடி ரூபாயை அபேஸ் செய்த பினாமி

சக்சேனாவின் துபாய் பினாமியும் கல்லூரித் தோழருமாக வலம் வந்தவர் 60 கோடி ரூபாயை அபேஸ் செய்தது

சிறைப் பறவையாக கூண்டுக்குள் அடைந்து கிடந்த சக்சேனா, இப்போது வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார். சிறையில் இருந்த போது, தனது எதிரிகள் யார் யார் என்று தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது என்று சொல்லி புலம்புகிறார். சக்சேனாவின் துபாய் பினாமியும் கல்லூரித் தோழருமாக வலம் வந்தவர் 60 கோடி ரூபாயை அபேஸ் செய்தது வேறு சக்சேனாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரசியல்வாதி கைது செய்யப்பட்டால், அரசியலில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் சந்தோஷப்படுவார்கள். சினிமாத் துறையில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அத்துறையில் இருக்கும் அவரது எதிரிகள் சந்தோஷப்படுவார்கள். பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டால், கட்டுமானத் தொழிலில் அவரது போட்டியாளர்கள் கொண் டாடுவார்கள். அரசியல், சினிமா, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் எந்த முத்திரையும் பதிக்காத, நேரடியாக அந்தத் தொழில்களில் இறங்காத ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டதும் எல்லா தரப்பினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

தொழில்ரீதியாக இப்படி போட்டிகள் இருப்பதைக் கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நண்பன் கைது செய்யப்பட்டால், அவரது நண்பர்கள் வருத்தப்படுவதுதான் இயல்பு. ஆனால், ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது நண்பர்கள் எல்லாம் ரகசியமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றால் நம்ப முடிகிறதா?

வேதனையை அனுபவித்துக்கொண்டு இருக் கும் விஜயகாந்த்

சரி... அது உறுதி என்று சொல்லலாம். பிடிவாதம் என்றும் அழைக்கலாம். முதல்வராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... அவருடைய செயல்பாடுகளில் எப்போதும் மாற்றம் இருக்காது. கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொகுதிப் பேச்சுவார்த்தை கள் நடந்துகொண்டு இருக்கும்போதே... தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அத்தனை தலைவர்களுக்கும் ஷாக் கொடுத்தார். அடித்துப் புரண்டு அனை வரும் விஜயகாந்த் அலுவலகத்துக்குப் போய் கண்ணீர் மல்க உட்கார்ந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகள் நெகடிவ்வாக மாறி வெற்றி-தோல்வியைப் பாதித்துவிடக் கூடாதே என்று கூட்டணித் தலைவர் களை அழைத்துப் பேசினார் ஜெயலலிதா. சில தொகுதிகளை விட்டுக்கொடுத்தார். பல தொகுதிகள் பறித்தபடியே இருந்தன. கடைசி யில் தேர்தலும் முடிந்தது. கருணாநிதியின் எதிர்ப்பு வாக்குகளால் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது. அதாவது, ஆளும் கட்சியாக ஆவோமா, இல்லையா என்று தெரியாத நிலையி லேயே, கூட்டணிக் கட்சித் தலைவர்களின் மூக்கில் ரத்தம் வரவைத்தார் என்றால், ஆளும் கட்சியாக ஆன பிறகு என்ன ஆகும்?

அதிகப்படியான வேதனையை அனுபவித்துக்கொண்டு இருக் கும் விஜயகாந்த் நிலைமையைப் பார்த்தாலே தெரியும்!

யாழில் கொள்ளையர்களின் தாக்குதலில் அறுவர் காயம்


யாழ். கொக்குவில் பகுதியில் இரு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளையர்களின் தாக்குதலில் இரு வைத்தியர்கள் உட்பட 6 பேர் காயமடைந்ததுடன் இவர்களில் ஐவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுமுள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது...இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் வைத்தியரின் வீட்டின் புகை போக்கியினூடாக இறங்கி உள்நுழைந்து வைத்தியர்களின் மீது தாக்குதலை மேற்கொண்டு, அவர்கள் அணிந்திருந்த 4 பவுண் எடையுடைய காப்பு, சங்கிலியை பறிமுதல் செய்ததுடன் அவர்களது கையடக்கத் தொலைபேசியையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இதே கொள்ளையர்கள் வங்கியாளரின் வீட்டிற்குச் சென்று கதவை உடைத்து அவர்களைக் காயப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தடயங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்ததுடன் துரித விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கொக்குவில் கிழக்கைச் சேர்ந்தவர்களான யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களாக கடமையாற்றும் கனகலிங்கம் சிவகோணேசன் (வயது 44), இவரது மனைவியான சிவகோணேசன் தாரணி (வயது 42), சிவகோணேசனின் பெற்றோர்களான கனகலிங்கம் (வயது 71), புஸ்பலீலாவதி (வயது 71) ஆகியோர் காயமடைந்ததுடன் மற்றும் ஒரு வீட்டில் வங்கி ஊழியரும் அவரது மனைவியும் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் இலங்கை வங்கியில் கடமையாற்றும் சபாரட்ணம் செல்வராசா (வயது 56), செல்வராஜா சர்வலோஜினி (வயது 43) ஆகியோரே காயமடைந்தவர்களாவார்.

கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி நவாப் மரணம்

Mansoor Ali Khan

டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பட்டோடி நவாப்களில் கடைசி நவாபுமான மன்சூர் அலி கான் பட்டோடி நுரையூரல் பாதிப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி மருத்துவமனையில் பட்டோடி சேர்க்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகலில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. நுரையீரல் பாதிப்பு முற்றியதைத் தொடர்ந்து இன்று மாலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

பட்டோடி நவாப் பரம்பரையைச் சேர்ந்தவர் மன்சூர் அலிகான். பட்டோடியின் 9வது மற்றும் கடைசி நவாப் இவர். இவரது தந்தை பெயர் இப்திகார் அலி கான் பட்டோடி. தாயார் சஜிதா சுல்தான்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

அஜீத் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம்


எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்
சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா.
 தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன்.

அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!," என்று கூறியுள்ளார்

திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.


பரமக்குடி துப்பாக்கி சூடு: HRPC நேரடி அறிக்கை!

செப்டம்பர் 11 – 2011 பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 6 தலித் மக்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை

 கடந்த 11.09.2011 அன்று தலித் தலைவர் தியாகி இமானுவேல் சேகரன் 54வது நினைவு குருபூஜை நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை வந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1. பல்லவராயனேந்தல் கணேசன் 2.வீரம்பல்  பன்னீர் 3. மஞ்சூர் ஜெயபால், 4. சடையனரி முத்துக்குமார் 5. கீழகொடுமலூர் தீர்ப்புக்கனி 6. காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர்கள் கொல்லப்பட்டனர்இளையான்குடி துப்பாக்கிச் சூட்டில் ஆனந்த் என்ற மாணவன் குண்டடிபட்டான். மதுரையிலும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 1. ஜெயப் பிரகாஷ், 2. பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமுற்றனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு சார்பில் உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உண்மைகளை கண்டறிந்தது.

குழு உறுப்பினர்கள்

1.            சி. ராஜு, வழக்கறிஞர், மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உ
ரிமை பாதுகாப்பு மையம். தமிழ்நாடு.
2.            சே. வாஞ்சிநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை
3.            திருமுருகன், வழக்கறிஞர் உயர்நீதிமன்றம், மதுரை
4.            சுப.ராமச்சந்திரன், வழக்கறிஞர்,
5.            ரிராகவன், வழக்கறிஞர்,
6.            ப. நடராஜன், வழக்கறிஞர்,
7.            சி. ராஜசேகர், வழக்கறிஞர்,
8.            ம. லயனல் அந்தோணிராஜ்
____________________________________________________

முள்ளிவாய்க்கால் அழிவு பற்றி முன்கூட்டியே சொன்னவர் அமிர்!

1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ்ப்பாண எம்.பி.யான வி.யோகேஸ்வரனும் கொல்லப்பட்டனர். கூட்டணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சிவசிதம்பரம் படுகாயங்களுக்கு இலக்கானார். புலிகளின் இயக்கப் பெயர்களைக் கொண்ட விசு, அலோசியஸ், அறிவு ஆகியோரைக் கொண்ட குழுவே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது. விசு என்பவரின் இயற்பெயர் இராசையா அரவிந்தராஜ். இவர் வவுனியாவில் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவராவார். கூட்டணித் தலைவர்களின் மெய்ப் பாதுகாவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் புலி இயக்க உறுப்பினர்கள் மூவருமே ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். கொழும்பு, பௌத்தலோக மாவத்தையிலுள்ள 342/2ஆம் இலக்க இல்லத்தில் கூட்டணித் தலைவர்கள் அக்காலத்தில் தங்கியிருந்தனர். இங்குதான் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அல்பிரட் துரையப்பாவினால் சங்கிலியன் சிலை 1974இல்

சங்கிலியன் சிலையை 1974இல் அமைத்தவர் முன்னாள் யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா! –

சங்கிலியன் என்ற மன்னன் யாழ்ப்பாணத்தை கடைசியாக ஆட்சி செய்தான்.

சங்கிலியன் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியவன். சங்கிலிய மன்னனை பெருமைப்படுத்தி சிலை வைத்தவர் அல்பிரட் துரையப்பா. அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தவர். அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் யாழ் மாநகர முதல்வராக இருந்த காலத்தில், 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் பிரபல சிற்பியான சிவப்பிரகாசம் அவர்களால் சங்கிலிய மன்னன் சிலை வடிவமைத்து ஸ்தாபிக்கப்பட்டது.

TNA குற்றம் சாட்டிவிட்டுத் தான் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது

ltte-bamabimaduகடினமான சூழலை எதிர்நோக்கும் போரினாற் பாதிக்கப்பட்ட மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களும்.
- கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
மிகக் கடினமான சூழலை இலங்கைத் தீவில் எதிர்கொள்வோராக போரினாற் பாதிக்கப்பட்ட மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களுமே இருக்கின்றனர்.
இவர்களைப் பொறுத்தவரை மிகத் துயரமான – கடினமான நிலைமையே தொடர்கிறது. அதாவது போருக்குப் பின்னும். இதை இன்னும் சற்று அழுத்தமாக - அல்லது தெளிவாகச் சொன்னால், இப்பொழுது இன்னொரு போரை – போரின் நெருக்கடியை இவர்கள் எதிர்கொண்டவாறிருக்கின்றனர்.
கத்தியின் முன்னே நிறுத்தப்பட்டதைப் போல, கம்பியில் நடப்பதைப் போல, முள்ளிலே வீழ்ந்த சீலையைப்போல என்றெல்லாம் சொல்வார்களே! அந்த  நிலையில், அவலங்களின் மத்தியிலும் அபாயங்களின் மத்தியிலும் இவர்களுடைய வாழ்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.
முதலில் போரினாற் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பாக..

விவேகத்தின் அடிப்படையிலான நிதானமான சிந்தனைகள் நிலவவேண்டிய காலம்

jaffna-19ஸ்ரீலங்காவின் சமூகத் தொடர்பு வரலாறு
   -  கலாநிதி ராஜசிங்கம் நரேந்திரன்
இதுதான் இப்போதைய எங்களின் நிலை. எதிர்காலத்துக்கு எப்படி நாங்கள் முன்னேறப் போகிறோம்? சிங்களவர் மற்றும் தமிழர் ஆகிய இருபகுதியினராகிய எங்கள்  அணுகுமுறைகளில் ஏதாவது மாற்றம் நிகழுமா?
சுதந்திரத்துக்கு பின்னான வருடங்களில் யாழ்ப்பாணத் தமிழர்களில் ஒரு பகுதியினரின் பிரச்சினைகள் அந்நாட்களிலிருந்த அதே பகுதியினரைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளால் அனைத்து தமிழருக்குமான பிரச்சினையாகச் சித்தரித்துக் காட்டப்பட்டது. இது மகத்தான விகிதாச்சரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வரலாற்றுத் தவறு.
இதன் வெளிப்பாடுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானம்
 அவ்வாறு சித்தரிக்கப்பட்டதின் பயனாக ஏற்பட்ட அனுகூலங்கள்தான் அவர்களுக்கு கிடைத்த உயர்தரத்திலான பாடசாலைகள். இயற்கையாகவே அமைந்த கடின வேலை செய்யும் மனப்பாங்குள்ள அவர்களின் பெற்றோர்களின் தியாகத்தால் கல்வியில் செய்யப்பட்ட முதலீடு, யாழ்ப்பாணத்திலுள்ள அதிக சன நெருக்கம் மற்றும் வாய்ப்புகளின் பற்றாக்குறை போன்ற  நிலமைகள் காரணமாக அவர்களை பின்னுக்கு தள்ளியிருக்க வேண்டும்

சொத்துக்களை முடக்க சட்டம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயங்கரவாதத்துக்கு உதவுவோரின்

பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்
* உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சொத்துக்களை முடக்க அதிகாரம்
இலங்கைப் பிரஜை ஒருவர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினால் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பயங்கரவாதத்துக்காக நிதிதிரட்டினால் அவரும் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்த) சட்டமூலம், நிதி தொழில் சட்டமூலம், பணத்தூய்தாக்கல் தடை திருத்தச்சட்டமூலம் என்பவற்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச்சட்டத்தின் படி பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உதவும் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் குற்றவாளியாகக் கருதப்படுவார். இந்த சட்டத்திற்குள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுபவர்களின் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களை முடக்க முடியும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கனடா இலங்கைக்கு எதிரான பிரேரணையை கைவிட்டது

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று கனடா சமர்ப்பிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நேற்றுமாலை ஜெனிவாவில் நடத்தியதாகவும், இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஐரோப்பிய நேரம் ஒருமணிவரை இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரியவருகிறது.

ஐ.நா.மனித உரிமை பேரவை உத்தியோகபூர்வமாக இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற வேளை இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, போலந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து வரவேற்றிருந்தன. இந்தியா , மாலைதீவு அச்சமயம் மௌனமாக இருந்தன.ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான், உட்பட ஆசிய நாடுகள் எதிர்த்திருந்தன.
இந்நிலையில் கனடா இப்பிரேரணையை சமர்ப்பிப்பதில் பின்வாங்கியிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

தகவல் பெறும் உரிமைச்சட்டம் ஜெயலலிதாவின் காட்டு தர்பாருக்கு கடிவாளம் போடும்


அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக, 2005ம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் அமலாக்கத்துக்காக, தமிழகத்தில் 2006ம் ஆண்டு மாநிலத் தகவல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. தலைமை தகவல் கமிஷனராக கே.எஸ். ஸ்ரீபதி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. பு.ஏ. ராமையா, சி. மனோகரன், ஏ. ஆறுமுக நயினார் ஆகியோரை கமிஷனர்களாக நியமித்து, சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முந்தையநாள், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சட்டப்படியான வழிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்று கூறி, இந்த நியமனங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் புதிய கமிஷனர்கள் நியமன உத்தரவுக்கு கோர்ட், இடைக்கால தடை விதித்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., தற்போது ஆளுங்கட்சியாக உள்ளதால், கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்குகளில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது இதுவரை தெளிவாகவில்லை.

யார் எதை விசாரிப்பது?: மாநில தகவல் ஆணையத்தில் தலைமை கமிஷனர் கே.எஸ்.ஸ்ரீபதி, பெருமாள் சாமி, சீனிவாசன் ஆகியோர் இடையே, மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது தொடர்பாக பணிப்பகிர்வுகள் அண்மையில் முடிவு செய்யப்பட்டன. இதன்படி, காவல்துறை, நீதித்துறை, தேர்தல்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகள் தொடர்பான, மேல்முறையீட்டு மனுக்களை தலைமை தகவல் கமிஷனர் ஸ்ரீபதி விசாரிப்பார் என்றும், பிற மாவட்டங்களில் இருந்து வரும் மற்ற துறைகள் தொடர்பான மனுக்களை பெருமாள்சாமியும், சீனிவாசனும் விசாரிப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.

55 வயது பெண்ணை கொன்று நகை திருடிய மூதாட்டி கைது !

  விக்ரோலியில், வீட்டில் தனியாக இருந்த 55 வயது பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு இருந்த நகை, மொபைலை திருடிய 61 வயது  மூதாட்டியை போலீசார் நேற்று கைது செய்தனர். விக்ரோலி கிழக்கு, கண்ணம்வார் நகரை சேர்ந்த பெண் லத்திகா கிருஷ்ணா காம்ப்ளே(55). கடந்த 14ம் தேதியன்று  பிற்பகலில் லத்திகா வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த ஒரு மொபைல் போன்  உட்பட பீ56 ஆயிரம் மதிப்பு பொருட்கள் திருடப்பட்டது.
லத்திகாவுடன் சேர்த்து மும்பையில் கடந்த ஒரு மாத காலத்தில் 6 மூதாட்டிகள் இதே மாதிரி கொலை செய்யப்பட்டு நகை, பணம் திருடப்பட்டது. இது  பொதுமக்களிடையே, குறிப்பாக மும்பையில் வசிக்கும் முதியவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியது.

திமுக வேட்பாளர் பட்டியல்- சென்னை மேயர் பதவிக்கு மீண்டும் மா.சுப்ரமணியம் போட்டி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் திமுக தனது முதல் வேட்பாளர் பட்டியலை இன்று மாலை வெளியிட்டது. சென்னை மேயர் பதவிக்கு தற்போதைய மேயர் மா.சுப்ரமணியம் மீண்டும் போட்டியிடுகிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக திமுக ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் நட்டாற்றில் விடப்பட்ட காங்கிரஸ் கட்சி என்ன செய்வது என்று தெரியாமல் பல கோஷ்டிகளாகப் பிரிந்து கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.

நடிகர் தியாகு: நான் திமுகவில் இருந்து விலகுகிறேன் : கலைஞருக்கு கடிதம்



பிரபல நடிகர் தியாகு,   தி.மு.க.வில் இணைந்து அக்கட்சியின் முன்னணி பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.    இவர் தற்போது தி.மு.க.வில் இருந்து  திடீரென விலகியுள்ளார்.
தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கட்சியின் தலைவர் கலைஞருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தியாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,தி.மு.க.வில் 1984-ல் இணைந்தேன். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்காக பம்பரமாய் சுற்றி பிரசாரம் செய்துள்ளேன். ஆனால் என் உழைப்புக்கு இன்று வரை எந்த வித அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை.

எனக்கு பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இல்லாமல் துதிபாடியும் பலர் பயன் அடைந்துள்ளனர்.

ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்த அதே நிலையில்தான் இருக்கிறேன். இது எனக்கு மனவேதனையை அளித்த காரணத்தால் தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்தேன்.

திமுக: சில கட்சிகளுக்கு சில இடங்களை விட்டுத் தருவோம்


Karunanidhi
சென்னை: பிரணாப் முகர்ஜியின் கடிதத்தைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதா, இல்லையா என்பதை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதலாவது திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கருணாநிதி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டி பிரணாப் முகர்ஜி புகார் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த கருணாநிதி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையையும், பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தவறாமல் தெரிவித்து வந்தார் ராசா.

2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப்

P Chidambaram and Pranab Mukherjee
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.

அம்மா!!!!!!!!! தேம்பித் ததும்பும் கேப்டனும் ‘காம்ரேடு’களும்!

சட்டமன்றத்தில் அம்மாவின் அடிமையாக கருணாநிதியை அடுக்கு மொழியில் பழித்து பேசி அம்மாவை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்து பதவிசாக காலத்தை ஓட்டி வந்தவர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் ஆப்பு விரைவாக செருகப்பட்டுள்ளது 

ழை பெய்ததும் உழுது, நாற்று நட்டு, களை பறித்து, நீர் பாய்ச்சி, பின் அறுவடை செய்யும் விவசாயிகளோடு ஒப்பிடும் போது ஓட்டுக் கட்சிகளின் தேர்தல் வெற்றிகளை என்னவென்று சொல்வது?
ஐந்தாண்டுகள் கொட நாட்டில் படுத்துக் கொண்டே எழுதிக் கொடுக்கப்படும் அறிக்கைகளை வெளியிட்டு, இறுதி ஆண்டில் ஈர்த்து வரப்படும் கூட்டத்தை வைத்து ஹெலிகாப்டரில் பறந்து ஆர்ப்பாட்டம் செய்த ‘புரட்சித் தலைவி’ தி.மு.க அரசாங்கம் மீது மக்கள் கொண்ட வெறுப்பினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கரையொதுங்கினார்.
அது உழைத்துப் பெற்ற வெற்றியல்ல, உட்கார்ந்து பிடித்த வெற்றி என்றாலும் அம்மாவின் ஆணவத்தை தேர்தலுக்கு முன்பேயே நாம் மட்டுமல்ல அம்மாவின் நிழலை வணங்கி கரையேறிய கூட்டணிக் கட்சிகளும் உணர்ந்திருந்தார்கள். பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த போதே வேட்பார்களை வெளியிட்டதாக இருக்கட்டும், பிரச்சாரத்தில் அவர்களை வேண்டாத விருந்தாளியாக பந்தாடியதாக இருக்கட்டும் எதுவும் மறக்கக் கூடிய ஒன்றல்ல.

இலவச LapTop. உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்

காணக்கிடைக்காத அரிய பொருள் ஒன்று, தங்கள் கைகளில், தங்களுக்கே உரியதாய் இருக்கும் அந்த மகிழ்ச்சியை, உற்சாகத்துடன் வர்ணிக்கின்றனர், அந்த மாணவியர். அவர்களது கண்களில், ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்; முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் பிரகாசிக்கப் பேசுகின்றனர், அவர்கள்.

""என் கைகளிலும் லேப்-டாப் தவழும் என்று, நான் கனவிலும் நினைத்ததில்லை,'' என்றார், ஒரு மாணவி. ""என் வாழ்க்கையிலேயே இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்ததே இல்லை,'' என்றார், மற்றொருவர். ""உலகமே எங்கள் கைகளில் வந்தது போல் இருந்தது,''

மாநில தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவின் கைப்பாவை



கடலூர் : ஜெயலலிதாவின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. இதற்கு சட்டரீதியாக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். நில அபகரிப்பு வழக்கு, முதல்வரை அவதூறாக பேசிய வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் நேரு ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.
பின்னர், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கே.என்.நேரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜெயலலிதாவின் சர்வாதிகார, அராஜக ஆட்சிக்கு திருச்சி இடைத்தேர்தல் மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் பாடம் புகட்டுவர். ஜெயலலிதாவின் கைப்பாவையாக மாநில தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.