வெள்ளி, 23 செப்டம்பர், 2011

மெக்சிகோ சாலையில் எறியப்பட்ட 35 மனித உடல்கள்


மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் மர்ம நபர்களால் நெடுஞ்சாலை ஒன்றில் ஏறியப்பட்ட 35 மனித உடல்களை மீட்ட போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெக்சிகோ நாட்டின் விராகுரூஸ் நகரில் உள்ள பரபரப்பான நெஞ்சாலை ஒன்றில் 2 டிராக்குகளில் வந்த ஒரு கும்பல் 35 பேரின் உடல்களை சாலையின் நடுவே குவித்து வைத்துவிட்டு தப்பி சென்றுவி்ட்டனர். உடல்கள் குவிக்கப்பட்ட பகுதியில் ஒரு பாலம் இருந்ததால், அங்கு சில நிமிடங்களுக்கு போக்குவரத்தை மறித்து நிறுத்திவிட்டு இந்த கொடுமை அரங்கேறி உள்ளது.இதுகுறித்து மெக்சிகோ நாட்டு அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் மற்றும் மொபைல்போன்களின் வீடியோக்கள் மூலம், 2 டிரக்குகளில் உடல்கள் கொண்டு வரப்பட்டது தெளிவாக தெரிகிறது. அந்த வழியாக நடந்து சென்றவர்கள் சாலையில் மேலாடை இல்லாத மனித உடல்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இறந்தவர்களில் 12 பெண் மற்றும் 23 ஆண் உடல்கள் இருந்தன. இந்த சம்பவ குறித்து கிடைத்த ஒரு வீடியோவில், மனித உடல்கள் கொண்டு வரப்பட்ட டிரக்குகளை சூழ்ந்த வண்ணம், சில கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது தெரிகிறது. சாலையில் ஏறிப்பட்டவர்களில் 2 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனவர்கள்.

மேலும் ஒரு போலீஸ்காரரின் உடலும் உள்ளது. அனைவரும் கடத்தல், போதைப் பொருள் வைத்திருத்தல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

சாலையில் கொண்டு வந்து போடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அனைவரும் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர், என்றார்.

விராகுரூஸ் நகரின் அட்டர்னி ஜெனரல் கூறியதாவது, நெடுஞ்சாலையின் நடுவே சென்ற 2 டிராக்குகளின் பின்கதவுகள் திறந்த நிலையில் உடல்கள் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. பின்னர் அந்த டிரக்குகள் சம்பவ இடத்தில் இருந்து விரைவாக நகர்ந்து சென்றுவிட்டன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக