ஏறக்குறைய சகல கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளன. சவடால் அரசியல் பேசிய ராமதாஸ் வைகோ விஜயகாந்த் மற்றும் கம்முனிஸ்ட் கட்சிகள் ஆடை இழந்த அலங்காரிகளாக நிற்கின்றனர்.காங்கிரசின் நிலைமை சற்று பரவாயில்லை ஏனெனில் அவர்கள் ஏற்கனவே நிர்வாணிகள் தான். பல கோஷ்டிகள் இருப்பதால் அவர்களின் வாக்குகளை அவர்களே பல கட்சிகளுக்கும் வாங்கி கொடுப்பார்கள். மேலும் பாராளுமன்ற தேர்தலில் தான் அவர்களின் வாக்கு வங்கி உதவும்.
நீண்ட காலமாகவே அங்கும் இங்கும் பிச்சு பிச்சு காலம் ஒட்டி வந்த ராமதாசுதான் மிகவும் கலவரமாகி உள்ளர்போல தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.அதே நேரத்தில் அ.தி.மு.க. வுடனான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக இரு கட்சிகளும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக