சனி, 24 செப்டம்பர், 2011

செல்வம் அடைக்கலநாதன் பிணையில் செல்ல அனுமதி!:Sun TV வழக்கில்

புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த சன் தொலைக்காட்சி: வழக்கில் செல்வம் அடைக்கலநாதன் பிணையில் செல்ல அனுமதி!

புலிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கத்துக்கு எதிரான வகையிலும் வவுனியாவில் செயற்பட்டு வந்த சன் தொலைக்காட்சி சேவையை நடத்தினார்கள் என்ற அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் (சட்டமா அதிபதியின் இலக்கம் (ERR/76/2009) குற்றம் சுமத்தப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான (அமிர்தநாதன் அடைக்கலநாதன்) செல்வம் அடைக்கலநாதனை 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல வவுனியா மேல் நீதிமன்றம் அனுமதியளித்தது.இதேவேளை, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேலும் ஒரு நபரான குறிப்பிட்ட தொலைக்காட்சி நிலையத்தில் பணியாற்றிய அந்தோனிப் பிள்ளை மரியசீலன் என்ற ஊழியரைத் தொடர்ந்தும் விளக்கமறிலில் வைக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர் ஏலவே கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.இந்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் எட்டாம் திகதி இடம்பெறவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக