தமிழ்ப்பற்று காரணமாக...:
மீண்டும் தமிழ்ப் படம் எடுக்க வந்தேன்.சூர்யா நடிக்கும் '7 ஆம் அறிவு' படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.விழாவில் பேசிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்,
இந்தி கஜினிக்கு பின் இந்திப் பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் தமிழ்ப்பற்று காரணமாக மீண்டும் தமிழ்ப் படம் எடுக்க வந்தேன். 7 ஆம் அறிவு படத்தில் சினிமாவை தாண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு. ஆரம்பத்தில் 15 நிமிட காட்சிகள் மிரட்டலாக இருக்கும். அதில் ஒரு நிமிட காட்சிக்கு மட்டும் ரூ.1 கோடி செலவாகி உள்ளது. 15 நிமிடத்துக்கும் 15 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினால் அது சாத்தியமானது. கிளைமாக்சில் சிக்ஸ் பேக்கில் உடம்பை மாற்றி சூர்யா கஷ்டப்பட்டு நடித்தார். இப்படம் உலகம் முழுவதும் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தி தரும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக