வெள்ளி, 23 செப்டம்பர், 2011

கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி நவாப் மரணம்

Mansoor Ali Khan

டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பட்டோடி நவாப்களில் கடைசி நவாபுமான மன்சூர் அலி கான் பட்டோடி நுரையூரல் பாதிப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி மருத்துவமனையில் பட்டோடி சேர்க்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகலில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. நுரையீரல் பாதிப்பு முற்றியதைத் தொடர்ந்து இன்று மாலை அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

பட்டோடி நவாப் பரம்பரையைச் சேர்ந்தவர் மன்சூர் அலிகான். பட்டோடியின் 9வது மற்றும் கடைசி நவாப் இவர். இவரது தந்தை பெயர் இப்திகார் அலி கான் பட்டோடி. தாயார் சஜிதா சுல்தான்.

டேராடூனில் பள்ளிப் படிப்பை முடித்த மன்சூர் அலிகான் பட்டோடி, ஆக்ஸ்போர்டில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

1952ம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் பட்டோடியின் நவாபாக அறிவிக்கப்பட்டார் மன்சூர் அலிகான். அப்போது அவருக்கு வயது 11தான். டைகர் என்ற செல்லப் பெயரைக் கொண்ட மன்சூர் அலிகான் பட்டோடி, கிரிக்கெட்டில் சிறந்து விளங்கியவர். வலது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்த இவர் வேகப் பந்து வீச்சிலும் ஜொலித்தவர். 46 டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆடியுள்ளார். 1961ல் கிரிக்கெட் ஆட ஆரம்பித்த இவர் 1975ல் ஒரு விபத்து காரணமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை விட நேரிட்டது. அந்த விபத்தில் இவரது வலது கண் பார்வையை இழந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக 1962ம் ஆண்டு பணியாற்றியுள்ளார் மன்சூர் அலிகான். இந்திய அணியின் கேப்டனாக 40 போட்டிகளில் இவர் ஆடியுள்ளார். இதில் 9 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது.

பிரபல இந்தி நடிகை ஷர்மிளா தாகூர், மன்சூர் அலிகானின் மனைவி ஆவார். இவர்களுக்கு நடிகர் சைப் அலி கான், நடிகை சோனம் அலி கான், டிசைனர் சபா அலிகான் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

1964ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1967ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார் மன்சூர் அலிகான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக