வியாழன், 22 செப்டம்பர், 2011

நடிகர் தியாகு: நான் திமுகவில் இருந்து விலகுகிறேன் : கலைஞருக்கு கடிதம்



பிரபல நடிகர் தியாகு,   தி.மு.க.வில் இணைந்து அக்கட்சியின் முன்னணி பேச்சாளராக செயல்பட்டு வந்தார்.    இவர் தற்போது தி.மு.க.வில் இருந்து  திடீரென விலகியுள்ளார்.
தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கட்சியின் தலைவர் கலைஞருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தியாகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,தி.மு.க.வில் 1984-ல் இணைந்தேன். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்காக பம்பரமாய் சுற்றி பிரசாரம் செய்துள்ளேன். ஆனால் என் உழைப்புக்கு இன்று வரை எந்த வித அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை.

எனக்கு பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இல்லாமல் துதிபாடியும் பலர் பயன் அடைந்துள்ளனர்.

ஆனால் நான் ஆரம்பத்தில் இருந்த அதே நிலையில்தான் இருக்கிறேன். இது எனக்கு மனவேதனையை அளித்த காரணத்தால் தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்தேன்.
நான் 33 ஆண்டுகளாக நடிகனாக இருக்கிறேன். என் சொந்த முயற்சியால் சினிமாவில் பெயரும் புகழும் சம்பாதித்தேன்.

நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வரவில்லை. எனது தாத்தா சங்கீத கலாநிதி, இசை பேரறிஞர் கும்ப கோணம் வயலின் ராஜ மாணிக்கம் பிள்ளை ஆவார்.

எங்கள் வீட்டுக்கு தாத்தாவை பார்க்க பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், மூப்பனார் போன்றோரெல்லாம் வந்துள்ளனர். அப்படிப்பட்ட நான் கருணாநிதியின் வசனத்திலும், பேச்சிலும் ஈர்க்கப்பட்டு தி.மு.க.வில் இணைந்தேன்.
என் தாத்தா ராஜ மாணிக்கம் பிள்ளையின் தபால் தலையை வெளியிட்டு கும்பகோணத்தில் ஒரு தெருவிற்கு அவர் பெயர் சூட்ட வேண்டுமென முதல்வராக இருந்த கருணாநிதியிடம் மூப்பனார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அரசு ஏற்பாடு செய்யும் என கருணாநிதி உறுதிமொழியும் அளித்தார். அந்த வாக்குறுதியை பிறகு மறந்து விட்டார். இதனால் நான் விம்மி அழுதேன்.

சினிமாவில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என எல்லோரும் மனம் காயம் பட்டுதான் வெளியே சென்றார்கள்.
சமீபத்தில் வந்த வடிவேலுவும் படங்கள் இன்றி நடுத்தெருவில் நிற்கிறார்.   அ.தி.மு.க.விலோ ராதாரவி எம்.எல்.ஏ., ஆனார். ராமராஜன் எம்.பி. ஆக்கப்பட்டார்.

ஐசரிவேலனுக்கு மந்திரி பதவி கிடைத்தது. இன்று சி.ஆர்.சரஸ்வதி வாரிய தலைவராக இருக்கிறார். திருச்சி சவுந்தரராஜன் அமைச்சரானார். அந்த கட்சியில்தான் சினிமாகாரர்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது’’என்று கூறினார்.
இப்படி பேசிய அவரிடம்,அப்படி என்றால் நீங்கள் அதிமுகவில் சேரப்போகிறீர்களா?’ என்ற கேள்விக்கு, ’’பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று பதிலளித்துள்ளார்.
few comments
MP யாக இருந்த சரத், இப்போது மத்திய அமைச்சராக நெப்போலியன்,MP யாக இருக்கும் ரித்தேஷ் எல்லாம் திமுகவில் பதவி பெறவில்லேயா, தியாகு சொல்லு காரணம் ஏற்புடையது அல்ல, ஆதாயம் அடைய வேண்டும் என்று சொல்லப்படும் காரணம், திமுகா ஆட்சி காலத்தில் நீங்கள் எல்லாம் ஒரு பயனும் பெறவில்லேயா, போங்க அம்மாகிட்டே பெருசா கிடைக்கும்,

திமுகவில் மக்களோடு மக்களாக கலந்து உழைப்பவர்களுக்கும், மக்களுக்காக நடக்கும் போராட்டங்களில் முன்னணியில் இருப்பவர்களுக்கும்தான் முன்னுரிமை. இது அனைவரும் தெரிந்ததே. அதிமுக கூத்தாடிகளின் கட்சி. அங்கு கூத்தாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் ஆச்சரியம் இல்லை. நீங்கள் 1984 ல் திமுகவில் சேர்ந்த போதே இது உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும், ஏனெனில் பல சினிமா துறையினர் எம்ஜியார் ஆட்சியிலேயே பதவிகளை பெற்றுள்ளனர். வடிவேலு திமுக உறுப்பினர் அல்ல. அவருக்கு ஏன் வாய்ப்புக் கொடுக்க தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள் என்று உங்கள் சினிமா துறையினரையே கேளுங்கள்.

இவருக்கு சாதாரண குடும்பம் என்றால் இளக்காரமா''? பதவி' பணத்துக்கு ஆசைப்பட்டு கட்சியில் இணைந்து இருக்கின்றார் என்பது இவரின் பேச்சில் இருந்து புரிகின்றது' கட்சியில் பேச்சாளர் என்றால்' மாரிகால தவளை என்பதை இவர் மறந்து விட்டார் போலும்''' எடுப்படியோ' நிருபர் கேட்ட கேள்வி பிழை' அவர் அதிமுகவை கூறியது' மந்திரி பதவிக்காகவே' ஆனால்' அவர் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளின் பெயர்களைக் கேட்டாலே புரிகின்றது' இவர் கூடிய சீக்கிரம் காங்கிரசில் சிக்கப் போகின்றார் என'' இருந்து பாருங்கள் புரியும்' நான் முன்பே கூறி உள்ளேன்' தமிழர்களுக்கு உள்ள ஒரே தேர்வு' காட்டிக்கொடுப்பு' துரோகம்' சூழ்சி வஞ்சகம்' இப்படி இன்னோரன்ன' எம் மறவர் முவருக்காகவும் இவர்' உண்ணாநோன்பு இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை'''??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக