சனி, 24 செப்டம்பர், 2011

மனைவி, மச்சினி, மாமியாருடன் பிரேசில் பெருசு ‘ஜாலி’ வாழ்க்கை!.

பிரேசிலியா: தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்ட் நார்ட் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் கோஸ்டா ஒலிவரா (90). விவசாய பண்ணையில் வேலை பார்த்து வந்தவர். வயதாகிவிட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார். இவருக்கு 2 மனைவிகள், 50 பிள்ளைகள், 100-க்கும் அதிகமான பேரக் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவி பெயர் பிரான்சிஸ்கா. அவருக்கு 17 குழந்தைகள் பிறந்தன. உடல்நலம் பாதிக்கப்பட்டு பிரான்சிஸ்கா இறந்த பிறகு, மரியா சில்வா என்பவரை ஒலிவரா 2-வது திருமணம் செய்தார். அவர் மூலமாக 17 குழந்தைகள்.இதற்கு நடுவே, அக்காவுக்கு ஒத்தாசையாக இருப்பதற்காக மரியாவின் தங்கை ஒசலிட்டா அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்துபோனார். குழந்தைகளை குளிப்பாட்டுவது, பத்துப் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற உதவிகளை செய்து வந்தார். மச்சினி செய்யும் பணிவிடைகள் ஒலிவராவுக்கு ரொம்ப பிடித்துப்போனது. அவரையும் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். அவர் மூலம் 15 குழந்தைகள்.

2 மகளும் வாழ்க்கை நடத்துவதை பார்க்க, அவர்களது அம்மா வந்தார். அவரையும் ஒலிவரா விடவில்லை. அவர் மூலமாகவும் ஒரு குழந்தை பிறந்துவிட்டது. 17+17+15+1 என்று மொத்தம் 50 குழந்தைகள். கூட்டம் அதிகமானதால் இரண்டு வீட்டில் ஜாம்ஜாம் என்று குடித்தனம் நடத்தி வருகிறார் ஒலிவரா. பெண்கள் பற்றிய பேச்சு எடுத்தாலே புல்லரிக்கிறார். ‘‘கடவுள் படைப்பிலேயே மிகமிக சூப்பரானது பெண்கள்தான். விவசாயம், வேலை என்று நான் கழித்த நாட்கள் வீண் என்று இப்போது புரிகிறது. இவர்கள் 4 பேர் தவிர மேலும் பலருடன் ஜாலியாக இருந்திருக்கிறேன்.

அனேகமாக என் குழந்தைகள் இந்த ஏரியாவில் மேலும் பலர் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் பலரது பெயர்கூட எனக்கு ஞாபகம் இல்லை. கடந்த 40 ஆண்டுகளாக தம் அடிப்பதில்லை. மது குடிக்கவில்லை. தலைவலி, முதுகுவலி என எந்த வலியும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். மனைவிகள்தான் என் சந்தோஷத்துக்கு காரணம்’’ என்கிறார் கில்லாடி தாத்தா ஒலிவரா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக