வெள்ளி, 23 செப்டம்பர், 2011

பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தும் பிரேரணை தோற்கடிப்பு


பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தி வைப்பதென்று அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டாக இதனைத் தோற்கடித்துள்ளன.அவுஸ்திரேலிய கியன் கட்சியின் செனட்டர் லீ. ரியானன் இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்தார்.
நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட்டர் லீ. ரியானின் பிரேரணை மீது உரையாற்றிய அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதி இது போன்ற பிரேரணைகள் மூலம் ஒரு நாட்டின் சிக்கல் வாய்ந்த வெளிநாட்டு கொள்கையை தீர்த்து வைக்க முடியாது என்று கூறினார்.செனட்டர் லீ. ரியானன் இரகசியமாக கடந்த வாரம் நடைபெற்ற வட்ட மேசை கலந்துரையாடலிலும் இலங்கையின் யுத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்த ஒரு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இந்த கலந்துரையாட லில் எல்.ரீ.ரீ.ஈ ஐ ஆதரிக்கும் பிரதிநிதிகள் குழுவொன்றும் கலந்து கொண்டது.இலங்கை அரசாங்கத்தின் பிரதி நிதிகள் எவருக்கும் இதில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப் படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக