சனி, 24 செப்டம்பர், 2011

யாழில் முகமூடித் திருடர்களின் அட்டகாசம், நால்வருக்கு காயம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் நடைபெற்ற திருட்டு முயற்சியின் போது யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரண்டு வைத்தியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி கருவப்புலம் வீதியைச் சேர்ந்த இந்த மருத்துவர்களின் வீட்டினுள் நுழைந்த திருடர்கள் இவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு பணம், நகை போன்ற பெறுமதியான பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் வி .கனேஸ்வரன் மற்றும் அவரது மனைவியான க. ராணி ஆகிய இருவரும் காயமடைந்து போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொக்குவில் கோணவளை வீதியிலுள்ள வங்கி ஊழியர் வீட்டுக்குச் சென்ற திருடர்கள் ஊழியரைத் தாக்கி விட்டு பணம், நகை போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இந்தத் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டவர்கள் தங்கள் முகத்தினை முகம் மூடியினால் மறைத்துக்கொண்டு வந்ததாக பாதிக்கப்பட்டவர்களால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக