வியாழன், 22 செப்டம்பர், 2011

கனடா இலங்கைக்கு எதிரான பிரேரணையை கைவிட்டது

இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று கனடா சமர்ப்பிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நேற்றுமாலை ஜெனிவாவில் நடத்தியதாகவும், இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஐரோப்பிய நேரம் ஒருமணிவரை இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படவில்லை என தெரியவருகிறது.

ஐ.நா.மனித உரிமை பேரவை உத்தியோகபூர்வமாக இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற வேளை இப்பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா, போலந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து வரவேற்றிருந்தன. இந்தியா , மாலைதீவு அச்சமயம் மௌனமாக இருந்தன.ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான், உட்பட ஆசிய நாடுகள் எதிர்த்திருந்தன.
இந்நிலையில் கனடா இப்பிரேரணையை சமர்ப்பிப்பதில் பின்வாங்கியிருப்பதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா என்பது தொடர்பாக இன்று நண்பகல்வரை மனித உரிமை பேரவை இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.
மனித உரிமை பேரவையின் 18ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும் காலக்கெடு இன்று ஐரோப்பிய நேரம் நண்பகல் ஒருமணியுடன் நிறைவடைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக