சனி, 18 ஜூலை, 2020

மருத்துவ மேற்படிப்புகளில் ஒபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை - மத்திய அரசு வாதம்

tamil.news18.com :மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திராவிடர் கழகம், திமுக, அதிமுக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது

திருப்பதி கோயிலில் 140 பேருக்கு கொரோனா.. அர்ச்சகர்கள் உட்பட...

மின்னம்பலம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கொரோனா பாதிப்பு ஊரடங்கால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.
சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி தெளித்தல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜீயர்கள், 14 அர்ச்சகர்கள், லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள், சமையலறை ஊழியர்கள் என ஏழுமலையான் கோயிலில் வேலை செய்து வரும் 140க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், ஏழுமலையான் கோயிலின் சடகோப ராமானுஜ பெரிய ஜீயருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உள்ள ஸ்ரீ பத்மாவதி மாநில கோவிட் மருத்துவமனையில் இன்று (ஜூலை 18) அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைஷ்ணவ சம்பிரதாய அடிப்படையில் செயல்படும் ஏழுமலையான் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நடை அடைக்கப்படும் வரை நடைபெறும் கோயில் சடங்குகளை மேற்கொள்ளும் ஜீயருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கைங்கரியங்களை யார் மேற்கொள்வது என்று கேள்வி எழுந்தது.

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது

மாலைமலர் : இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்து விட்டது என்பதுதான் முதல் மைல்கல். நாட்டிலேயே மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக மகாராஷ்டிராவும், தமிழகமும் திகழ்வது இரு மாநிலங்களுக்கும் சற்றே கவலை தரக்கூடிய ஒன்றுதான்.
இவ்விரு மாநிலங்களை தொடர்ந்து இப்போது கர்நாடகத்திலும், பீகாரிலும் தினமும் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு புதிதாய் பாதிப்பு. மொத்த பாதிப்பு, 10 லட்சத்து 3 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.
இப்படியே கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டே சென்றால் தடுத்து நிறுத்துவது எப்படி என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.
இதற்கு ஒரே பதில் தடுப்பூசிதான்.
அந்த வகையில் இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ஒரு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் இரட்டை கொலைகளில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்பு?

சாத்தான்குளம் வழக்கு- பெண் காவலர் கைது?மாலைமலர் : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம்:சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்தனர். சிபிசிஐடி அதிகாரிகளுடன் சிபிஐ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் ஆலோசனை செய்தனர். சிபிசிஐடி விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை சிபிஐ விசாரணையுடன் ஒப்பிட்டும் ஆய்வு செய்யப்பட்டதுஇந்நிலையில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக பெண் காவலர் அளித்த தகவல்களில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ விசாரணையில் சாத்தான்குளம் காவல்நிலைய பெண்  காவலர் முரண்பட்ட தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெண் காவலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவா?: திமுக விளக்கம்!

 மின்னம்பலம் :  முருகனை இழித்துப் பழித்துப் பேசிய கறுப்பர் கூட்டத்துக்கு திமுக சட்ட ரீதியான ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் வெளியிட்டிருக்கிறார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இன்று (ஜூலை 18) திமுக தலைமையகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி,
“திமுக மீதும் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் அவதூறான பிரச்சாரங்களை செய்ய திட்டமிட்டு ஒரு கூட்டம் அண்மைக் காலமாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் பேராதரவை தாங்கிக் கொள்ளமுடியாத அவ்வயிற்றெரிச்சல் காரர்கள் இப்படிப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதில் ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கைத் தயாரித்து அதன் மூலமாக, ‘முருகனை இழிவுபடுத்திப் பேசியிருக்கிற கறுப்பர் கூட்டத்துக்கு சட்ட ரீதியாக திமுக ஆதரவு தெரிவிக்கும்’ என்று போலியான பொய்யான பித்தலாட்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.

வீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது மாணவிக்கு சிறைத்தண்டனை…: நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

வீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது மாணவிக்கு சிறைத்தண்டனை…: நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்    மாலைமலர் :   மிச்சிகன்: அமெரிக்காவில் வீட்டுப்பாடம் முடிக்காத 15 வயது சிறுமிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க – ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கிரேஸ் என்ற 15 வயது சிறுமி வீட்டுப் பாடத்தை முடிக்கவில்லை எனக் கூறி கடந்த மே மாதம் அவரை சிறையில் அடைக்க நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் ;கிரேஸ் என அறியப்படும் அந்த சிறுமிக்கு ஆதரவாக பள்ளி மற்றும் நீதிமன்ற வாசலில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

பாரத் பயோடெக் கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை: எந்த எதிர்மறை விளைவும் இல்லை

bharat-biotech-starts-human-trial-of-its-anti-covid-vaccine-at-pgi-rohtak-minister-vijhindutamil.in/ : உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் செலுத்தி நேற்று பரிசோதிக்கப்பட்டது, இதில் முதல்கட்டமாக எந்த பக்கவிளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனையை பாரத் பயோடெக் நிறுவனம், சண்டிகரின் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்துஅறிவியல் கல்வி நிறுவனத்தில் பரிசோதித்து வருகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற பெயரில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தாகும். இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி இரு கட்டங்களாகத் தொடங்கப்பட்டுள்ளது.

ராஜாஜியின் அத்தனை தடைகளையும் தாண்டி வெளியான பாராசக்தி ..( 1952 அக்டோபர் 17ல் )

Rebel Ravi : பராசக்தியும் Barppana சதியும்...
காந்திஜி,நேருஜி வரிசையில் 'ராஜாஜி' என்று அழைக்கத்தேவையில்லை.
'சி.ராஜகோபாலாச்சாரி' என்று அரசு ஆவணத்தில் அழைக்கப்பட்டது போல் அழைத்தால் போதுமானது.
'ராஜகோபாலாச்சாரி' என்பவர் 'பார்ப்பனிய வெறியர்' என்பது 'குலக்கல்வி' திட்டத்தை செயல்படுத்த முனைந்ததன் மூலம் நாடறியும்.
நாடறிந்த பூணுலுக்கு புது விளக்கம் கொடுத்து எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து விஷ விதைகளை விதைத்து வருவதை பழைய கட்டுரை ஒன்றின் மூலம் அறிந்தேன்.
பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கல்வி கற்பதை தடை செய்யும் நோக்கில் பள்ளிகளை மூடியதற்கு மூளையை தோண்டி திருகி கற்பனைகளை கட்டவிழ்த்து இருக்கிறார்.
'ராஜகோபாலாச்சாரி' படிக்காத பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் திரைப்படங்கள் மூலம் வரலாறை, சமூக நீதியை அறிந்து பகுத்தறிவு பெறுகிறார்கள் என்பதால் 'மதுவைப்போல் திரைப்படமும் ஒழிக்கப்பட வேண்டியது' என்று மொழிந்து இருக்கிறார்.
திரையரங்குகளில் சாதி பேதமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருப்பது ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனிய வெறியர்களுக்கு வெறியேற்றி இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கும் பாஜகவை அம்பலப்படுத்த நடக்கும் Twitter பிரச்சாரத்தில் தோழர்கள் இணைந்து

Manoj Kumar  /: பிற்படுத்தப்பட்ட இந்துக்களை வஞ்சிக்கும் பாஜகவை அம்பலப்படுத்த நடக்கும் Twitter பிரச்சாரத்தில் தோழர்கள் இணைந்து அதிகப்படியான Twitt செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்!
முகநூல், வாட்சப் வழியும் பரப்பவும்!
கீழே கொடுக்கப்படுள்ள Linkயை click செய்தாலே Twittசெய்து_கொள்ளலாம்
• தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களான வெள்ளாள கவுண்டர்களுக்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது கவுண்டர் விரோத பாஜக !!#SaveOBCReservationFromBrahmanism
https://ctt.ac/gck14
• தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களான வன்னியர்களுக்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது வன்னியர் விரோத பாஜக !!#SaveOBCReservationFromBrahmanism
https://ctt.ac/kQx06
• தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களான படையாச்சிகளுக்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது படையாச்சி விரோத பாஜக !!#SaveOBCReservationFromBrahmanism
https://ctt.ac/8cySd
• தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களான நாடார் சமூகத்திற்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது நாடார் விரோத பாஜக !!#SaveOBCReservationFromBrahmanism
https://ctt.ac/7GVnN
• தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களான சேர்வை சமூகத்திற்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது சேர்வை விரோத பாஜக !!#SaveOBCReservationFromBrahmanism
https://ctt.ac/uEo06
• தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர்களான கோனார் சமூகத்திற்கு வர வேண்டிய மருத்துவ இட ஒதுக்கீட்டை பறித்துள்ளது கோனார் விரோத பாஜக

என் சாவுக்கு காரணமானவங்கள! தற்கொலைக்கு முன்.. ஐடி ஊழியரின் மனைவி பேசிய வீடியோ


  நக்கீரன் " கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் ஐ.டி ஊழியராக இருந்தவருமான விஜயகுமாருக்கும் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விஜயகுமார் தன் ஐ.டி வேலையை இழந்து சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளார். அப்போது அவர் உறங்கிக்கொண்டிருக்கும்போது, வந்த போன் அழைப்பை எடுத்து பேசிய ஷோபனாவிடம் யாரோ ஒரு பெண், தான் விஜயகுமாரின் காதலி என கூறியதால், அதிர்ந்த ஷோபனா இதுகுறித்து கணவரிடம் கேட்க, அவரோ வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி, தன் தவறை திசை மாற்றியுள்ளார்.
இதனால் ஷோபனா வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அந்த விடியோவில் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், வீடியோ எடுத்தபடி பேசிய ஷோபனா,  “இதான் என் கடைசி வீடியோனு நெனைக்கிறேன்.

வரவர ராவ்: தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர் வர வர ராவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளதுBBC : உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செயற்பாட்டாளர் வரவர ராவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றும்படி தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் சிறப்பு கண்காணிப்பாளரான மஜா தருவாலா புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் வரவர ராவ் சிறையில்பட்ட துன்பங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். 80 வயதான செயற்பாட்டாளரான வரவர ராவ், மும்பையில் உள்ள தலோஜா சிறையில் பல உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டதாகவும், அவரது உடல்நலன் மோசமாகிக் கொண்டே வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவரால் நடக்கக்கூட முடியாத சூழலில் சிறை அதிகாரிகள் வரவர ராவுக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்ய முன்வரவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டிருந்தது.

ஐஸ்வர்யா ராய்க்கு திடீர் மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில்.. கொரோனா தொற்று.. வீடியோ

மாலைமலர் : கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின்னம்பலம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலிவுட்டின் மெகா ஸ்டார் எனப் போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஜூலை 11ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது. அமிதாப் பச்சனின் வயதைக் கருத்தில் கொண்டும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதாலும் அவர்கள் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் வீட்டில் இருந்த வேலையாட்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ராஜேந்திரபாலாஜியை பற்றி இரவு 12 மணி வரை விசாரணை நடத்திய வேலுமணி

ராஜேந்திரபாலாஜி: இரவு 12 மணி வரை விசாரணை நடத்திய வேலுமணிமின்னமபலம் : அதிமுகவின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மார்ச் 23 ஆம் தேதி நீக்கப்பட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீண்டும் கடந்த ஜூலை 3 ஆம் தேதி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
மீண்டும் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளரான பிறகும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் ராஜேந்திர பாலாஜியை மரியாதை நிமித்தமாக சென்று சந்திக்கவில்லை. ஆனால் மாவட்டத்தின் அத்தனை நிர்வாகிகளும் சேர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன் தினம் (ஜூலை 16) சேலத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்திருக்கிறார்கள்.

கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு, தாகம் தீர்த்த அணில்... இதயம் தொட்ட வீடியோ

தினக்குரல் : அணில் ஒன்று தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றவரிடம் கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு வாங்கி மனிதர்களை போல் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பல ஆச்சரியம் நிறைந்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத வகையிலான வீடியோக்கள் வெளிவருவதுண்டு. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில், ஒரு சிறுமியும், நபர் ஒருவரும் நடந்து செல்கின்றனர். அந்த நபர் தனது கையில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைத்திருக்கிறார். இதனை கவனித்த அணில் ஒன்று அவரை பின்தொடர்ந்து சென்றது. தனது முன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பதுபோல் அந்த நபரை நெருங்கியது.
இந்த காட்சி நாம் கைகளை உயர்த்தி ஒருவரிடம் ஏதேனும் கேட்பதுபோல் அமைந்திருந்தது. அந்த நபர் திரும்பி இரக்கத்துடன், தண்ணீர் பாட்டிலை திறந்து அதன் அருகே கொண்டு செல்கிறார். அந்த அணில் அழகாக தனது முன்னங்கால்களால் அதனை வாங்கி தண்ணீர் குடித்தது. பாட்டில் முழுவதும் காலியான பின் சற்று ஓய்வெடுப்பதுபோல் தயக்கத்துடன் நின்றது. இதயம் தொட்ட இந்த வீடியோ காட்சி டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெரியார் சிலை மீது காவிச்சாயம் - அட்டூழியம் வீடியோ

தினகரன் : கோவை: கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய  சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அதற்குள், தி.மு.க., தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெரியார் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சிலை முன்பு குவிந்தனர். அப்போது, ‘சிலை மீது காவி சாயம் பூசி பெரியாரை அவமதித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்’ என கோஷங்கள் எழுப்பினர்.

உ.பி.: நேபாள நபரை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீ ராம் என வலுக்கட்டாயமாக சொல்ல வைத்த கும்பல்


உ.பி.: நேபாள நபரை மொட்டையடித்து, ஜெய் ஸ்ரீ ராம் என வலுக்கட்டாயமாக சொல்ல வைத்த கும்பல்
மாலைமலர் :மொட்டை அடிக்கப்பட்ட நேபாள நபர். இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் தற்போது தன் நிலைப்பாட்டில் இருந்து மாறி வருகிறது. குறிப்பாக அந்நாட்டு பிரதமரான கேபி சர்மா ஒலி எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். மேலும், இவர் சீன ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
நேபாளத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்தது. நேபாள மக்களிடையே இந்தியா குறித்து எதிர்மறை கருத்துக்களை பிரதமர் கேபி சர்மா ஒலி விதைத்து வருகிறார். உச்சக்கட்டமாக‘‘உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை, நேபாளத்தில்தான் உள்ளது. கடவுள் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல’’ எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியாவில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் தனது கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்.

ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

தினகரன் : ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜூலை 21ம் தேதி மாலை 5 மணி வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட், 18 எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் வீதிகளில் குடும்பம் குடும்பமாக திரண்டு கந்த சஷ்டி கவசம் பாடிய மக்கள்

திருச்செந்தூர் வீதிகளில் குடும்பம் குடும்பமாக திரண்டு கந்த சஷ்டி கவசம் பாடிய மக்கள்மாலைமலர் : கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியான வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருச்செந்தூரில் மக்கள் கந்த சஷ்டி கவசம் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க கந்த சஷ்டி கவசத்தின் மகிமை குறித்து ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். இந்துக்கள் கந்த சஷ்டி கவசத்தை படித்து முருகன் அருளைப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெள்ளி, 17 ஜூலை, 2020

பிரதமர் இந்திரா காந்தி மறைவு! .இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 8

பிரதமர் இந்திரா காந்தி  (November 19, 1917 - October 31, 1984  -

(அமிர்தலிங்கம் August 26, 1927 - July 13, 1989).
திரு அ .அமிர்தலிங்கம் :அப்போதே நாம் சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்யப் போவதாக இந்தியாவிற்கு தெரிவித்தோம். தொடர்ந்து  முயற்சி செய்யுமாறு திரு. பார்த்தசாரதி கேட்டுக் கொண்டபடி நாம் அங்கு தொடர்ந்தோம். தீர்வுகாண வேறு திட்டங்களைத் திருமதி காந்தி யோசித்துக் கொண்டிருந்த போது பஞ்சாப் பிரச்சனை வெடித்தது. திருமதி இந்திரா காந்தியின் உயிரைக் குடித்தது. விதிகெட்ட தமிழன் கதியற்றுப் போனான். இந்தப் பயங்கரப்படுகொலை நடந்திராவிட்டால் வரலாறே வேறுவிதமாக இருந்திருக்கும்.
அன்னை இந்திராவின் மரணச் சடங்கின் அடுத்த நாளே திரு. ராஜீவ் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
எனது அன்னை உங்கள் பிரச்சனையில் என்ன கொள்கையைக் கொண்டிருந்தாரோ அதையே நானும் பின்பற்றுவேன், உங்களைக் கைவிடமாட்டேன்" என்று உறுதி கூறினார். சர்வ கட்சிக் கூட்டத்தில் தொடர்ந்து பங்கு பெறுமாறு அவரும் திரு. பார்த்தசாரதியும் கேட்டுக் கொண்டபடி தொடர்ந்து கலந்து கொண்டோம். நாம் ஏற்கமுடியாத திட் டத்தை திரு. ஜயவர்த்தனா முன் வைத்தபோது அதை நிராகரித்தோம். சர்வகட்சிக் கூட்டமும் முடிவுக்கு வந்தது. எமது முயற்சிகளை முதலிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியப் பொதுத் தேர்தல்:
பிரதமர் பதவியை ஏற்றவுடன் திரு. ராஜீவ் காந்தி மக்கள் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகப் பொதுத் தேர்தல் நடத்தினார். அமோக வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்த சில நாட்களில் மீண்டும் பிரதமரைச் சந்தித்தோம். எமது விடையத்தில் இந்திய அரசாங்கதின் கொள்கையில் மாற்றம் இருக்க மாட்டாது என்று உறுதியளித்ததோடு ஆக்கப்பூர்வமான சில யோசனைகளையும் திரு. ராஜீவ் காந்தி தெரிவித்தார். அச்சந்திப்பைத் தொடர்ந்து தமிழ் இன விடுதலைக்காக உழைக்கும் எல்லா இயக்கங்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். ஒரு இயக்கம் தவிர ஏனைய இயக்கங்களை 1985 பிப்ரவரி 28-ஆம் திகதி ஓர் இணைப்புக் குழுவில் ஒன்றுபடுத்திச் சேராதிருந்த இயக்கத்திற்கு எல்லோரும் கையொப்பமிட்டு ஒரு வேண்டுகோள் அனுப்பினோம். அந்த முயற்சி தோல்வி கண்டது

வியாழன், 16 ஜூலை, 2020

அமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் கவிஞர் மனுஷ புத்திரன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி

 Mathivanan Maran  -  tamil.oneindia.com:  சென்னை: தமிழக அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இதனையடுத்து சென்னையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் கூடி வருகிறது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவுக்கு முதல் எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.
 அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஆம்பூரில் அமைச்சர் நிலோபர் கபீல் மகன், மருமகள் உட்பட 15 பேருக்கு கொரோனா இதேபோல் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி. அன்பழகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது 4-வது  அமைச்சராக நிலோபர் கபீலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கோயில்களின் noise pollution .. மனிதரை சிந்திக்க விடாமல் துரத்தும் சத்தங்கள

பார்ப்பனர்களுக்கு ஏனையோர் சிந்திப்பது பிடிக்காது . கெட்டகோபம் வரும் .கோயிலகள தேவாரங்கள் புராணங்கள் மந்திரங்கள் எல்லாமே
சிந்திக்கவிடாமல் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்க விடப்படும் Noise pollution தான்.
கோயில்களில் எக்கச்சக்கமாக மணிகள் மேளங்கள் கூக்குரல்கள் உரத்த குரலில் எல்லோரும் அரோகரா  போன்ற சத்தங்கள் ஒலிக்கும்.
இந்த கடூர சத்தங்கள் எல்லாமே அங்குள்ள மனிதர்களை எள்ளளவும் சிந்திக்கவோ எதையும் ஒழுங்காக கிரகிக்கவோ விட கூடாது என்ற நோக்கத்தில் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.
ஆனால் இந்த ரகசியம் எவருக்கும் தெரியாது .  இது தான் பார்ப்பனர்களின் குள்ள நரித்தனம்.
அங்கு அவர்கள் மந்திரம் சொல்வது மட்டும் மிகவும் கவனமாக மக்கள் கேட்கவேண்டும் என்ற நடைமுறையை ஒரளவு வலியுறுத்துகிறார்கள் .
அதாவது எல்லா சத்தங்களும் உங்கள் பாவங்களை போக்கும் ..
அதிலும் பார்ப்பன முணுமுணுப்புக்கள் மகா புனிதமானவை .
இந்த சத்தங்களுக்கு பழக்கப்பட்டால் நாளடைவில் அவர்கள் சொந்தமாக சிந்திக்கும் தன்மையை பெரிதும் இழந்து விடுவார்கள் ..
இந்த சத்தங்கள் எதிர்காலத்தில் நிச்சயம் அரசுகளால் தடை செய்யப்படும் . ஏனெனில் இவை மனிதரின் சிந்தனைக்கும் உளவியலுக்கும் பெரும் தீங்கை விளைவிக்கின்றன

தங்கையை காக்க நாயிடம் கடி வாங்கிய அண்ணன் … முகம் முழுவதும் 90 தையல்கள்!

தன் தங்கையுடன் ப்ரிட்ஜர் Bridger Walker,
நாய் தாக்குதலில் ஒருவர் இறக்க நேரிடும் என்றால் அது நானாக தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் - 6 வயது பாசக்கார அண்ணன்
 tamil.indianexpress.com :  6-year-old boy rescued his sister from a dog attack : அமெரிக்காவின் வையோமிங் பகுதியில் வசித்து வரும் ப்ரிட்ஜர் வாக்கருக்கு 6 வயது. இவருடைய தங்கையை கடிக்க வந்த நாயிடம் இருந்து தங்கையை காக்க இவர் செய்த வீர சாகசம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 வயதான தங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வாக்கரின் 4 வயது தங்கையை தாக்க வந்துள்ளது. சிறிது நேரம் கூட தாமதிக்காமல் உடனே ஓடி வந்து தன்னுடைய தங்கையை காப்பாற்றியுள்ளார். தங்கையை காப்பாற்றிய போது, வெறித்தனமாக ஓடி வந்த நாய் ப்ரிட்ஜரின் கன்னத்தை பலமாக கடித்துள்ளது.
அவருடைய முகத்தில் ஏற்பட்ட காயத்தை பார்க்கும் போது நமக்கே முகம் பதைபதைக்கிறது. நாயிடம் கடி வாங்கிய வாக்கருக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவருடைய இடது பக்க கன்னத்தில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளது.

9 வயது சிறுமி கொடூரக்கொலை - சாத்தான்குளம் .. வீடியோ


மாலைமலர் :சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ளது கல்விளை கிராமம். இங்குள்ள ஓடை பாலம் அருகே நேற்று சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமி கழுத்து, உதடுகளில் காயங்களுடன் பிணமாக கிடந்தாள். அவள் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்ததுஇதுகுறித்து உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சாத்தான்குளம் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகுதி நீக்கமா? நீதிமன்றம் சென்ற பைலட்

 மின்னம்பலம் : ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் ஜூலை 14 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இருமுறை நடந்தபோதும் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்ததால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் கட்சி விரோத நடவடிக்கைகள், கொறடா உத்தரவு மீறல் குறித்து வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சச்சின் பைலட்டுக்குப் பின்னால் பாஜக இருக்கிறது என்று காங்கிரஸார் கூறி வரும் நிலையில் இந்த வழக்கில் பைலட்டுக்காக முகுல் ரோஹத்கி ஆஜராகிறார். 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் முகுல் ரோஹத்கி என்பது குறிப்பிடத் தக்கது.

அடித்து உதைத்த போலீஸ்... பூச்சி மருந்தை குடித்த ஏழை தம்பதி... வீடியோ

nakkeeran : மத்திய பிரதேச மாநிலத்தின் குணா மாவட்ட புறநகர்ப்பகுதியில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகக்கூறி ஒரு தம்பதியை போலீஸார் அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் குணா மாவட்ட புறநகர்ப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒரு குடும்பத்தினர் அபகரித்துள்ளதாக அம்மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் அங்கு சென்றபோது, உண்மையான நில ஆக்கிரமிப்பாளரான கப்பு பரிதி என்ற நபர் சம்பவ இடத்திலிருந்து தலைமறைவானார். ஆனால், அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீஸார், அப்பகுதியிலிருந்த ராம்குமார் ஆஹிர்வார் (38), சாவித்ரி தேவி (35) ஆகியோர் கடுமையாக தாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஒருபுறமும் போலீஸார் அவர்களைத் தாக்கும்போது, மறுபுறம் அதனைப் பார்த்த அவர்களது குழந்தைகள் கதறி அழுத காட்சி இணையத்தில் பரவியது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீஸார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அடக்குமுறையைப் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்தனர்.

கந்தசஷ்டி கவசம்.. கறுப்பர் கூட்டம் யூடியூப் நிர்வாகி அதிரடி கைது

கந்த சஷ்டி கவசத்தில் இடம்பெற்ற சொற்கள் பலவும் ஆபாசாமான சொற்கள் என்ற குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே உள்ளது தெரிந்ததே .. இந்த ஆபாசத்தை கறுப்பர் கூட்டம் என்ற youtube தளத்தில் விமர்சித்து ஒரு காணொளி வெளியானது . இது இந்துத்வாக்களுக்கு ஏற்புடையது இல்லையாம் .. எல்லோராலும் பாடப்பட்டு கொண்டிருக்கும் பாட்டின் பொருளை ஒருவர் சொன்னால் அது எப்படி சட்டவிரோதம் ஆகும் ? இது பாஜக . அதிமுக ஆட்சியின் பாசிச போக்கை காட்டுகிறது



Devi Somasundaram : · கந்தர் சஷ்டி கவசத்தில் "சண்டாளர்களும் என் பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட" என்ற ஒரு வரி வருகிறது.
சண்டாளர்கள் என்பவர்கள் பார்ப்பனப் பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கும் பிறந்தவர்கள் என்கிறது மனுஸ்மிருதி. (10.16. From a Sudra spring in the inverse order (by females of the higher castes) three base-born (sons, apasada), an Ayogava, a Kshattri, and a candala, the lowest of men; ) கந்தர் சஷ்டி கவச விருத்தி உரையில் சண்டாளங்கள் என்பதற்கு "புலைத் தன்மை பொருந்திய பேய்கள்" என்கிறார் திரு அமிர்தம் சுந்தரநாதபிள்ளை அவர்கள்.
புலையர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் ஒரு பட்டியல் இன மக்கள்.
அரசமைப்புச் சட்ட பிரிவு 17 தீண்டாமையை கடைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது. ( Article 17 of our Indian Constitution says "Abolition of Untouchability Untouchability is abolished and its practice in any form is forbidden The enforcement of any disability arising out of Untouchability shall be an offence punishable in accordance with law" ) இப்போது கந்த சஷ்டி கவசம் பாடுவது தீண்டாமையை கடைபிடிப்பது ஆகுமா! சட்ட நிபுணர்கள் கருத்து என்ன?
குறைந்த பட்சம் இதை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்." தோழர் திருநாவுக்கரசன். #BanKanthaShastiKavasam

அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி

அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை: முகேஷ் அம்பானிமின்னம்பலம் : இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் 43ஆவது வருடாந்திர பொதுக் குழுக் கூட்டம் (ஏஜிஎம்) நேற்று (ஜூலை 15) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஓடிடி தளமான ஜியோ டிவி+ அறிமுகப்படுத்தப்பட்டது. அதை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இறுதியாக பங்குதாரர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உரையாற்றிய நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

நேபாள் - இந்திய உறவு சரிந்தது எப்படி... 2015 முதல் 2020 வரை நடந்தது என்ன?

Nepalகே.பி.ஷர்மா - நரேந்திர மோடிvikatan.com - ஜெனிஃபர்.ம.ஆ - கே.பி.ஷர்மா: - நேபாள் - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே தற்போது சுமுக உறவு இல்லை. இந்தியாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த நேபாளம் தற்போது முரண்பட்டு நிற்கிறது. இந்தியா - நேபாளம் பல ஆண்டுகளாக நெருக்கமான நல்லுறவை கொண்டிருந்த நாடுகள். நேபாளுடன் திறந்த எல்லைகளைக் கொண்ட நாடு இந்தியா. அதாவது எந்தவித எல்லைத்தடைகளும் இன்றி, இரு நாட்டு மக்களும் வர்த்தக பொருள்களும் எல்லைகள் தாண்டி சுதந்திரமாகப் பயணிக்க முடியும். அந்தளவுக்கு இந்தியாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த நேபாளம் தற்போது முரண்பட்டு நிற்கிறது.
2008-ம் ஆண்டு மன்னராட்சியை ஒழித்து மதச்சார்பற்ற குடியரசாக மாறியது நேபாளம். அதன் அரசியலமைப்பு வரைவு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2015-ம் ஆண்டுதான் அந்நாட்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அப்போதே நேபாளத்தின் புதிய அரசியலமைப்பில், மாற்றங்களைச் செய்ய வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக சில இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானது.

கம்போடியா...... யார் இந்த தேவர்கள்?! மது அருந்துவோர் தேவர் ... அருந்தாதோர் அசுரர் ...

Dhinakaran Chelliah : யார் இந்த தேவதை.. . இல்லை இல்லை யார் இந்த
தேவர்கள்?! சுராபானம்  அருந்தாதவர்கள் அ+சுரர்கள், அதாவது அசுரர்கள், ஆனால் அவர்களை இதிகாச புராணங்களில் கொடியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.மதுபானம் அருந்திய தேவர்கள் நல்லவர்களாக இதிகாச புராணங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். அசுரர்கள் தங்கள்  மக்களுக்கு நல்லதையே செய்திருக்கிறார்கள், அதற்கு நல்ல உதாரணம் மகாபலி சக்ரவர்த்தி.அதனால்தான் கேரள மக்கள் இப்போதும் மகாபலியை தங்கள் மன்னனாகப் பாவிக்கிறார்கள், அவர்கள் தங்கள் மன்னனை அவமதித்த விஷ்ணுவின் வாமன அவதாரத்தைப் போற்றுவதில்லை.
பிரமணர்களுக்கு நல்லவன் எனும் அர்த்தத்தில் உள்ள பெயர்தான் சு+பிராமணியன், அதாவது சுப்பிரமணியன். வைதீக பிராமணீயத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் இவர் கடவுளாகிவிட்டார்.
வட மொழியில் சுத்தம் என்ற சொல்லுக்கு முன் “அ” சேர்க்கப் படும் போது அதன் எதிர் பதமாகிவிடுகிறது. உதாரணத்திற்கு,
சுத்தம் என்பதற்கு முன்பு “அ”சேர்கப் படும் போது அசுத்தமாகிவிடுகிறது.அதே போன்று நியாயம் என்பதற்கு முன்பு “அ” சேர்க்கப் படும்போது அநியாயம் ஆகிவிடுகிறது. அப்படித்தான் அ+சுரா வும்.
இதே போன்று வடமொழியில் “சு” என்றால் நல்ல என்று பொருள்,

புதன், 15 ஜூலை, 2020

கவிஞர் வைரமுத்து .. ஆர் எஸ் எஸ் கோணியில் புலிப்பாணியும் தலித்தாணியும் யாழ்ப்பாணியும் .. சமுகவலை விவாதங்கள் ..

George RC : · Poetic licence என்பதை... Self-proclaimed கவிப்பேரரசு James Bondன் Licence to kill மாதிரி... தப்பாக விளங்கிக் கொண்டிருப்பாரோ?
 Kalai Selvi தமிழுக்கு ஆற்றுப்படை கண்ட கவிஞர் - கவியரசாகி, கவிப்பேரரசு ஆன கதை.
விகடன் நேர்கணால்
கேள்வி -
“கவிஞர் என்ற பொதுவான அடையாளங்களைத் தாண்டி, கவியரசு, கவிப்பேரரசு, கவிக்கோ போன்று பெயருக்கு முன் இட்டுக்கொள்ளும் அடையாளங்கள் எல்லாம் முடியாட்சிக் காலப் பழைமைகளின் எச்சங்கள். இவை ஜனநாயக காலத்துக்குத் தேவை என்று நினைக்கிறீர்களா?”

பதில்-
“ஜனாதிபதி சாரட் வண்டியில் வருவதுகூட முடியாட்சியின் எச்சம்தான். மாற்றிவிடலாமா? தமிழ்நாட்டில் கலைஞர்கள்மீது ஒரு கொஞ்சுதல் உண்டு. இதுதான் இங்கு அடிப்படையான விஷயம். தமிழர்கள் கலைகளைக் கொஞ்சிக் கொஞ்சி வளர்ப்பார்கள். தங்களுக்குப் பிடித்தமானவர்களைக் கொஞ்சுவார்கள் அந்தக் கொஞ்சுதல் என்பதுதான் கலைஞர்களுக்கான ஊக்கம். இந்தப் பட்டங்கள் எல்லாம் நாங்கள் தேடிப்போனதல்ல. ‘கவியரசு’ என்பது தமிழ் வளர்ச்சி மன்றம் என்னைக் கொஞ்சிக் கொடுத்தது. ‘ ‘கவியரசு’ என்ற பட்டம் கண்ணதாசனுக்குத்தான் உரியது, நீ எப்படி இட்டுக்கொள்ளலாம்?’ என்று கேட்டார்கள். ‘ஐந்தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் என்று சொல்வதுபோல நான் இரண்டாம் கவியரசாக இருந்துவிட்டுப் போகிறேன்’ என்று வேடிக்கையாகச் சொன்னேன்.

அவாள் குடும்பத்தில் ஐஏஎஸ் ஐ பி எஸ் ஆவது எல்லாம் பெரிய மேட்டர் இல்லை

Balasubramanian Ponnuswami :  இந்திரா காந்தியும்
மார்கரெட் தாட்சரும் சமூக நீதி பிறழாத வரலாறும்
நானும் என் நண்பர்களும் ICRISAT Technical Assistant post க்கு இண்டர்வியூவுக்கு ஹைதராபாத்துக்கு நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் செல்லப் பயணமானோம், எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான். நான் அப்போது (1980) முதலாம் ஆண்டு PhD, ICRISAT செலவில் ஹைதராபாத் எல்லாம் சுத்திப் பார்த்து விட்டு வரலாமே என்பதுதான் ஐடீயா.
சென்னையில் இருந்து ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலையில் பிடிக்க வேண்டும். Blue Mountain ரயில் ஃபுல். அன்று TNAU வில் Science Day Function, அதில் உரையாற்ற Adyar Labour institute இயக்குநர் வரவழைக்கப்பட்டார். அந்த விழா முடிந்ததும், அவர் எங்களுடன் அதே sleeper பெட்டியில் சென்னை வந்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டபின் அன்றைய காலை The Hindu தலைப்புச் செய்தி பற்றிப் பேச்சு வந்தது.
"பாத்தேளா, கிரிஜா வைத்யநாதன்ன்ற பொண்ணு பிரசிடென்சிக் காலேஜூல வெறும் BSc Physics தான் படிச்சிருக்குறா, National Level ல IASல First வந்துருக்குறா. இந்தச் சின்ன வயசுல என்ன ஒரு உழைப்பு, எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா" என்றார், இயக்குநர்.
"ஆமாம், சார். உண்மையிலேயே சாதனைதான். கிரிஜாவுக்குப் பாராட்டுகள்" என்றனர், என் நண்பர்கள்.

நிர்வாணமாக ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. பீகாரில்

Muzaffarpur shocker: Woman stripped, thrashed and paraded in village; cops refuse to register complaint பெண்ணை  நிர்வாணப்படுத்தி.. ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. பீகாரில்  அட்டூழியம்!
tamil.oneindia.com - hemavandhana : முசாபர்பூர், பீகார்: தன் மீதுபோலீஸில் போய் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தின் அந்தரதாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பெண். அவரை ஒரு அங்கன்வாடி ஊழியரும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடி அடித்து உதைத்துள்ளனர். அங்கன்வாடி ஊழியரின் பெயர் லீலா தேவி. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
இந்த நிலையில் போலீஸில் தன்னைப் பற்றி அப்பெண் புகார் கொடுத்தது குறித்து ஆத்திரமடைந்தார் லீலா. உடனே தனது கணவர் மோத்தி மொஹதோ என்பவரிடம் இதுகுறித்துக் கூறினார்.  

ஊரடங்கால் கடன் - மனைவி குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலை மும்பை

ஊரடங்கால் கடன் தொல்லை - மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து ஓட்டல் அதிபர் தற்கொலைமாலைமலர் :
மாலைமலர் : மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பாய் . மராட்டிய மாநிலம் சோலாப்பூரை  சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல் அதிகளவில் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்த முடியாமல் திணறி வந்தார்.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டலை திறக்காததால் தொழிலும் நஷ்டம் அடைந்தது.இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அமோல் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது உறவினர்களுக்கு போன் செய்து கூறினார்.

கொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி- உயிரிழந்த குழந்தை சவுதியில்...

Coronavirus: Saudi Arabian child dies after COVID-19 test swab breaks in his nose
கொரோனா பரிசோதனையின் போது உடைந்த குச்சி- பரிதாபமாக உயிரிழந்த குழந்தைசவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
சவுதிஅரேபியாவில் அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தை ஒன்றை அவரின் பெற்றோர்கள் அங்கிருக்கும் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது மாதிரிகளை எடுக்க மூக்கினுள் விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது குச்சி உடைந்துள்ளது.இந்தக் குச்சியை வெளியில் எடுக்க குழந்தைக்கு மயக்க மருந்தை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். ஆனால், குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

திலகன் என்னும் மகாநடிகன்- இன்று பிறந்த தினம்..

.hindutamil.in : 85 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் நடிகர் திலகன் பிறந்தார். இயற்பெயர் சுரேந்திரநாத திலகன்(1935-2012) . அவர் மறைந்து எட்டு வருடங்களாகிறது. இந்த நெடிய பயணத்தில், நடிகன் என்பதற்கு மேலாக எந்த அடையாளத்தையும் போர்த்திக் கொள்ளாத கலைஞனாக திலகன் இருந்தார். பிரபலமான ஒருவரது மறைவுக்குப் பின் அவர் குறித்து எழுதப்படும் புகழுரைகளுக்கு அவர் தகுதியானவர்தானா என்ற சஞ்சலம் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால், திலகன் விஷயத்தில் எந்த ஊடாட்டமும் இல்லை. உலகின் எந்தவொரு நடிகருடன் ஒப்பிடக்கூடிய தகுதியும் திறமையும் கொண்ட மகாநடிகன் திலகன்.
திலகன் பிறவிக் கலைஞன். நடிப்புதான் தனது வாழ்க்கை என படிக்கிற காலத்திலேயே வரித்துக் கொண்வர்.. பள்ளி நாடகங்களில் தொடங்கி, நண்பர்களுடன் ஆரம்பித்த முண்டகயம் நாடக சமிதி, அதிலிருந்து படிப்படியாக கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் கிளப், காளிதாஸ் கலா கேந்திரா என முன்னேறி திரைத்துறைக்கு வந்தவர். அவரின் முதல் படம் பி.ஜே.ஆண்டனியின் பெரியார். 1973ல் வெளியான இந்தப் படத்தில் மிகச்சிறிய வேடத்தில் தோன்றிய திலகனை பெரிதாக யாரும் அடையாளம் காணவில்லை. அவரை முன்னிலைப்படுத்திய திரைப்படம் 1979ல் வெளிவந்த கே.ஜி.ஜார்ஜின் உள்கடல். அதன் பிறகு திலகன் என்ற நடிகன் மக்களின் மனதை மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். 1981ல் யவனிகா திரைப்படத்துக்காக திலகன் தனது முதல் மாநில விருதை பெற்றார்.

ஜெயமோகன் மீது இந்து தமிழ் திசை அவதூறு வழக்கு தொடுக்க முடியும்.

சாவித்திரி கண்ணன் : அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது…!
 பாரம்பரியமிக்க குழுமத்திலிருந்து வரும் பத்திரிகையை ’’நாயும் நாணும் இந்தப் பிழைப்பு!’’ என்ற தலைப்பிட்டு,’ ’பிஸ்கட்டுக்கு  வாலாட்டும் நாய்கள்’’ என்றும், அதன் சிறப்பு கட்டுரையாளர்களை, ’’கவிதைகள் குறித்தோ, கவிஞர்கள் குறித்தோ எழுத தகுதியற்ற மொண்ணைகள்’’என்றும் பொதுவெளியில் நாடறிந்த ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மிகத்தரக் குறைவாக விளாசித் தள்ளுகிறார்.
ஆனால்,இது குறித்த எந்த எதிர்ப்புமின்றி,அந்த பத்திரிக்கை மவுனம் சாதிக்கிறது. வைரமுத்து புகழ்பாடும் கட்டுரைகளை பிரசுரித்தற்கு வந்த எதிர்ப்புகளுக்கு ’’மனமார வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று எதிர்வினையாற்றுவதில் காட்டிய வேகத்தை தன் மீதான இழிவான விமர்சனத்திற்கு உங்களால் வெளிப்படுத்த முடியாமல் போனது ஏன்?
காதில் எதுவுமே விழாதது போன்றும்,கண்ணில் எதுவுமே படாதது போன்றும் எப்படி ஒரு பத்திரிகை நிர்வாகத்தால் இருக்க முடிகிறது….? அப் பத்திரிகையின் அங்கமாகவுள்ள சிறப்பு கட்டுரையாளர்கள் ஆசைத் தம்பியும்,செல்வ புவியரசனும் தாக்கப்பட்டிருப்பது குறித்து அந்த நிர்வாகம் மவுனம் சாதித்தால் – தங்கள் நிர்வாகமே தங்களுக்கு பாதுகாப்பளிக்கத் தவறினால் - நாளைக்கு ஒரு பத்திரிகையாளனுக்கு எந்த ஒரு விஷயத்தையும் எழுதும் துணிச்சல் எப்படி வரும்?

உங்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்.. எப்படியாவது என்னை அந்த ரோலில் நடிக்க

Rebel Ravi : பாலியல் சீண்டலும்...என் கருத்தும்...
நான் பல செக்சுவல் ஹராஸ்மெண்ட் வழக்குகளில் பெண்கள் பக்கம் நின்று போராடுகையில்...வழக்கு முன்னேறும் போது... அவர்கள் ஹராஸ் செய்தவரோடு சமாதானமாய்ப் போனதைப் பார்த்துக் கொதித்திருக்கிறேன்.
90% செ ஹ வழக்குகள் உள்நோக்கம் கருதிப் போடப்படுபவையே.
அப்படி வழக்கும் போடாமல் வைரமுத்துவைத் தூக்கில் போடு என்பதெல்லாம் படு போங்கு.
வழக்குப் போடுங்கள். குற்றவாளி என நிரூபியுங்கள்..என்ன தண்டனையோ கிடைக்கட்டும்.
அது வரையிலும்..அவர் ஒரு காமக்கொடூரன் செக்ஸ் மேனியாக் என்பதெல்லாம் டூ மச்.

பல உச்ச நடிகர்கள் என்ன வெல்லாம் செய்வார்கள் எந்தெந்த ஹோட்டலில் எப்படியெப்படி நடந்து கொள்வார்கள் என்பதெல்லாம் என் காதுக்கு வரும்..நான் அவற்றை எழுதியதில்லை. நடிகனின் நடிப்பை மட்டுமே விமர்சிப்பேன்..லக்‌ஷ்மிகாந்தன் அல்ல நான்.
சினிமாவில் என்னவெல்லாம் நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. அங்கேயே கொட்டை போட்ட எனக்கு நன்றாகத் தெரியும்.
நான் பெரும் படங்களில்.. நாயகியைத் தேர்வு செய்யும் இடத்தில் இருந்த போது...உங்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்.. எப்படியாவது என்னை அந்த ரோலில் நடிக்க வையுங்கள் எனப்..பிற்காலத்தில் பிரபலமான பல நடிகைகள் என்னிடத்தில் கூறியதுண்டு..சிரித்துக் கொண்டே அவர்களிடம் சொல்வேன்.

பெரியாரின் குடி அரசு இதழுக்கு விளம்பர முகவராக இருந்த எஸ் எஸ் வாசன் ..

பாண்டியன் சுந்தரம் : ஆனந்த விகடன் எஸ்.எஸ். வாசனிடம் 'உங்களிடமிருந்து நான், மாதந்தோறும் ஒரு பச்சைத் தாளை
எதிர்பார்க்கிறேன்...' என்று கடிதம் எழுதினார், பெரியார்!
அந்தக் காலத்தில் விளம்பரங்களில் கோலோச்சி வந்தவை பத்திரிக்கைகள் தான். அவை பற்றிய ஒரு சுவையான தொகுப்பு இது...
1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான். அவன் அருகில் சில பாட்டில்கள் இருக்கின்றன. ‘இனி உங்களுக்குக் கவலை வேண்டாம், இதோ’ என்று கூறி அந்த ஆணிடம் ஒரு மருந்துப் புட்டியைக் காண்பிக்கிறாள் அவன் மனைவி.
அந்த மருந்து ‘மன்மதக் குளிகை.’ ‘இது தாது புஷ்டியைக் கொடுப்பதில் சிறந்தது’ என்கிறது இந்த விளம்பரம். இந்த மருந்தை அந்த ஆணுக்குப் பரிந்துரை செய்வது சக நண்பனோ அல்லது மருத்துவரோ இல்லை. அவன் மனைவி. பெண் சுதந்திரம் உச்சத்தில் இருப்பதாக நம்பப்படும் இன்றைக்குக் கூட இம்மாதிரி ‘தைரியமான’ விளம்பரங்கள் பத்திரிகைகளில் வருவதாகத் தெரியவில்லை. சரி, இதன் விலை? அதிகமில்லை, 20 குளிகை ரூபாய் இரண்டுதான். அணுக வேண்டிய முகவரி : மலையப்பசாமி வைத்தியசாலை, பழனி!

உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் ஒரு நேபாளி: நேபாள் பிரதமர்....!

தமிழ் இந்து : உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் கடவுள் ஒரு நேபாளி: நேபாள் பிரதமர்....!
உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, கடவுள் ராமர் ஒரு
நேபாளி என்று நேபாள் பிரதமர் சர்மா ஒலி சர்ச்சையைக் கிளப்பும் விதமாகப் பேசியுள்ளார்.தெற்கு நேபாளில் தோரியில்தான் ராமர் பிறந்தார் என்கிறார் சர்மா ஒலி.
இதனையடுத்து ஒலிக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசியச் செய்தித் தொடர்பாளர் பிஜய் சங்கர் சாஸ்திரி, இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் மக்களின் நம்பிக்கையோடு விளையாடினர், மக்கள் இவர்களை ஓரங்கட்டினர், இதே கதிதான் நேபாள கம்யூனிஸ்ட்களுக்கும் ஏற்படும் என்று சாடினார்.
“கடவுள் ராமர் எங்கள் நம்பிக்கைக்கு உரியவர். ஆகவே நேபாள் பிரதமர் மட்டுமல்ல, வேறு ஒருவரும் இந்த நம்பிக்கையோடு விளையாட மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார் சங்கர் சாஸ்திரி.
நேபாளக் கவிஞர் பானுபக்தாவின் பிறந்த தின கொண்டாட்டத்தின் போது நேபாளப் பிரதமர் சர்மா ஒலி, “நேபாளம் பண்பாட்டு ஆக்ரமிப்பில் சிக்கியுள்ளது, இதன் வரலாறு திரிக்கப்படுகிறது” என்றார்.
கவி பானுபக்தா 1814-ல் பிறந்தவர். ராமாயணத்தை நேபாளி மொழியில் ஆக்கம் செய்தவர் பானுபக்தா. இவர் 1868-ல் இறந்தார்.

செவ்வாய், 14 ஜூலை, 2020

இலங்கேஸ்வரன் இராவணனின் மகள்தான் சீதை .. ஆர் எஸ் மனோகரின் நாடகம்


Susairaj Babu : சீதையை, இலங்கையில் பிறந்தவர், என்று சொன்ன ""இலங்கேஸ்வரன்" நாடகம்.
ஆர்.எஸ். மனோகர். அவரது நேஷனல் தியேட்டர்ஸ் மேடை நாடகங்களில் அவர்தான் ஹீரோ. புராணங்களில் தேடித்துருவி, எதிர்மறையான ாயகனாக நடிக்க சற்றும் எதிர்பாராத வகையில் வாய்ப்புக் கிடைத்தது., அதைத்தொடர்ந்து
அவர் மேடையேற்றிய முதல் இரண்டு நாடகங்கள் சமூக நாடகங்கள்தான்.(இன்ப நாள், உலகம் சிரிக்கிறது) மூன்றாவதுதான் இலங்கேஸ்வரன்.
‘நம் கலாசாரம் ராமனை ஹீரோவாகவும், ராவணனை வில்லனாகவும் பார்த்துப் பழகியதாயிற்றே!. அப்படி இருக்கும்போது, ராவணனுக்கு ஹீரோவாக முகம் கொடுத்து நாடகம் போட எப்படித் துணிந்தீர்கள்? அதை மக்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டார்களா?” என்று கேட்டபோது, “ராமாயணத்தில் அசுரனாக சித்தரிக்கப்பட்ட ராவணனை நல்லவனாகக் காட்டியதையும், சீதை ராவணனது மகள் என்று சொன்னதையும் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தனைக்கும், வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், பௌத்த ராமாயணம் என்று இந்தியாவின் பல்பேறு பகுதிகளிலும் இருக்கும் ராமாயணங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்துதான் இலங்கேஸ்வரன் நாடகத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது. மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. .சீக்கிரமே அவரது கவலை தீர வழி பிறந்தது.

ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து வெற்றி? வீடியோ

உலகின்    BBC :முதல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்தாண்டு இறுதியில் முதல் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்படும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் தற்போது உலகம் முழுவதும் 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 5.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக அந்த நாட்டை சேர்ந்த செய்தி முகமையான ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை இன்ஸ்டிடியூட் ஃபார் ட்ரான்ஸ்லேஸ்னல் மெடிசன் அண்ட் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் வாடிம் டாரசோவ் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்மநாபசுவாமி கோயில் தீர்ப்பு : அரசுக்கு பின்னடைவா?

பத்மநாபசுவாமி கோயில் தீர்ப்பு : அரசுக்கு பின்னடைவா? மின்னம்பலம் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக கிட்டதட்ட 9ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கை நேற்று உச்ச நீதிமன்றம் முடிவுக்குக் கொண்டு வந்தது. பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை, திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இது அரசுக்கு பெரும் பின்னடைவு என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயில் 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது. ஆனால் தற்போதைய கட்டமைப்பு 18 ஆம் நூற்றாண்டில் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவால் கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த கோயில் தனித்துவமான சேர பாணியிலான கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இந்தியாவில் வைணவத்துடன் தொடர்புடைய 108 புனித கோயில்களில் இதுவும் ஒன்று என அறியப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தம்!

 மின்னம்பலம் : கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஒரு குறுஞ்செய்தியை அனைத்து மாவட்ட மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில் தமிழகத்தில் உள்ள மாநில தலைமை கூட்டுறவு வங்கி, 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 128 நகர கூட்டுறவு வங்கிகள், 4250 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் நகை கடன் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் சூழலில், அடகு கடைகளை விட குறைந்த வட்டி என்பதால் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்று அன்றாட செலவுகளை கவனித்து வருகின்றனர். இவ்வாறான ஒரு அறிவிப்பு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ சேர்க்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு!

நக்கீரன் :  சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 7.5 சதவீதம் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.5000 கோடியில் முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

காங்கிரஸில் இருந்து தூக்கி எறியப்பட்ட சச்சின் பைலட்: அடுத்து யார்?

  வெப்துனியா : ராஜஸ்தான் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம்.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள்  உள்ளதாக கூறி வருகிறார்.கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக இருந்தது. எனவே, நேற்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாரிதாஸ் எச்ச ராஜா .. என்ன நடக்கிறது ?

Anbe Selva : மாரிதாஸ் நாவிதர் சமூ கத்தை சேர்ந்தவர், ஆனால் அவர் சார்ந்த நாவிதர் சமூகம் சந்திக்கும் ஒடுக்குமுறைகளுக்காக ஒரு வீடியோகூட போடாதவர்?.
பார்ப்பான் எவ்வளவு சுயநலவாதி?
அவன்னால மாரித்தாசையும் பார்பானுக்காக பேச வைக்க முடியுது
கிருஷ்ணசாமியையும் பேச வைக்க முடியுது.
OBC இட ஒதுக்கீட்டுக்காக வாய் திறக்காத அத்தனை இடைநிலை சாதி சங்கங்களையும் பேச வைக்க முடிகிறது.
இந்த இடத்தில்தான் பெரியார் மாஸ்டர், பெரியாரின் மீதான மதிப்பு உயர்ந்து நிற்கிறது.
ஏனென்றால் அவர்தான் இந்த அத்தனை சாதிகளில் இருந்தும் பார்ப்பனர்களை பிரித்துக்காட்டி அம்பலப்படுத்தியவர்.
அத்தனை சாதிகளுக்குள்ளும் பார்ப்பன எதிர்ப்பை ஒருமுகப்படுத்தி வளர்த்தரடுத்தவர்.
இந்த அத்தனை சாதிகளின் உரிமைக்காகவும் பார்ப்பானோடு சண்டை நடத்தியவர்..

தூக்கில் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ... அடித்து கொலை என குடும்பத்தினர் புகார்...


நக்கீரன் : தூக்கில் தொங்கிய நிலையில் எம்.எல்.ஏ. உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் ஹேம்தாபாத் சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் தேவேந்திரநாத் ரே. நள்ளிரவு ஒரு மணிக்கு யாரோ செல்போனில் அழைத்ததையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. வெளியே சென்ற தேவேந்திரநாத் ரே வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அவரை காணவில்லை என்பதால் தேடியுள்ளனர். அப்போது அருகே உள்ள டீக்கடை ஒன்றில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தது.
இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது கொலைதான், யாரோ அடித்து கொலை செய்துள்ளனர் என்று அவரது குடும்பத்தினரும், பாஜகவினரும் கூறுகின்றனர். மேலும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளன

மக்கள் கையில் பணம்: ஸ்டாலினின் ஏழு ஆலோசனைகள்!

மக்கள் கையில் பணம்: ஸ்டாலினின் ஏழு ஆலோசனைகள்!மின்னம்பலம் : தமிழக அரசுக்கு ஏழு ஆலோசனைகளை திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அதே நேரம், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் தற்போது உள் மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா மற்றும் ஊரடங்கு பாதிப்புகள் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று (ஜூலை 13) மருத்துவம், பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டியவை, தொலைநோக்காக நிறைவேற்ற வேண்டியவை என்ற அடிப்படையில் பொருளாதார வல்லுநர்கள் அளித்த சில முக்கிய ஆலோசனைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

அதிமுகவில் எதிரொலிக்கும் திமுக - ஐபேக் சர்வே முடிவுகள்!

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவில் எதிரொலிக்கும் திமுக - ஐபேக் சர்வே முடிவுகள்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராகச் செயல்படும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் சமீபத்தில் எடுத்த சர்வே பற்றியும் அதன் முடிவுகளை திமுக தலைமையிடம் அளித்தது பற்றியும் மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ‘ஐபேக் சர்வே முடிவுகள்: ஸ்டாலின் ஷாக்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி தற்போதைய நிலையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் 180 இடங்கள் வரை திமுக கைப்பற்றும் என்று பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் சர்வே முடிவுகளை திமுக தலைவர் ஸ்டாலினிடம் அளித்துள்ளது என்றும், இதனால் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

கடவுள் ராமர் இந்தியர் அல்ல நேபாளி; இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபடுகிறது- நேபாள பிரதமர் சர்ச்சை கருத்து

கடவுள் ராமர் இந்தியர் அல்ல நேபாளி; இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபடுகிறது- நேபாள பிரதமர் சர்ச்சை கருத்துதினத்தந்தி : ராமர் நேபாளத்தைச்
சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாச்சார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம்  லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது. தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயர்ஸி செய்வதாக குற்றம்சாட்டினார் . தற்போது புதிய சர்ச்சை  கருத்தை வெளியிட்டு உள்ளார். தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் பிர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம் ஆகும்.(காட்மாண்டுவில் இருந்து 135 கீமீ தூரத்தில் உள்ளது)

வைரமுத்துவும் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும்

சாவித்திரி கண்ணன் : பார்ப்பனிய குசும்பு எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள்!
இந்து தமிழ் திசையில் வைரமுத்து குறித்த புகழ் கட்டுரைகள்
பெண்ணியவாதிகளை கொந்தளிக்க வைத்திருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது! அதில் இருக்கும் அறச்சீற்றத்திற்கு தலை வணங்குகிறேன்!
ஆனால்,மாலன் நாராயணனும்,காலச்சுவடு கண்ணனும் செய்யும் குசும்பு இருக்கிறதே! அந்த வைரமுத்து எதிர்ப்பு பதிவுகளுக்குள் நுழைந்து பின்னூட்டம் இட்டும்,அந்தப் பதிவுகளை தங்கள் முகநூல் பக்கங்களில் பகிர்ந்தும், முடிவில் இந்து நிர்வாகத்தையே ’’வைரமுத்து பற்றிய சிறப்பு பகுதி வெளியிட்டது பெரும் பிழை,இதை நேர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ பதிவிடச் செய்து அதை தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டும் அலப்பறை செய்வதற்கு என்ன காரணம்?
வைரமுத்துவின் திராவிட இயக்க சார்பு அரசியல் தானே உங்களை கொந்தளிக்கச் செய்கிறது?

திங்கள், 13 ஜூலை, 2020

யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்- அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம் வீடியோ வைரல்


மலைமலர் : குஜராத் மாநில சுகாதாரத்துறை மந்திரியின் மகன் பிரகாஷ் கனானி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண் காவலர் சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்-
அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம் .
அமைச்சரின் மகனை கண்டித்த பெண் காவலர் சூரத்: குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. ஊரடங்கை மீறி பிரகாஷ் கனானியின் நண்பர்கள் சூரத் நகரில் இரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது. அவர்களை பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தி உள்ளார். இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சுனிதா, ‘கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? யாரா இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’ என கடுமையாக கண்டித்துள்ளார். அதன்பின்னர் அமைச்சரின் மகனும் பதிலுக்கு காவலரை எச்சரிக்க, காவலர் உரிய பதிலை அளித்துள்ளார்.

கேரள தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது திடுக்கிடும் தகவல்

கேரள தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது திடுக்கிடும் தகவல்தினத்தந்தி :   கேரள தங்கக்கடத்தல் மூலம் கிடைத்த பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டது என என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர்.
இந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற, மாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியர் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாயினர். இவர்கள் 3 பேர் மட்டுமின்றி எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் ஆகிய 4 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது-.. உச்சா நீதி மன்றம்

   நக்கீரன் :புதுடெல்லி: நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்குப்பின் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. மேலும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய அறையை திறப்பது தொடர்பான வழக்கிலும் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- பத்மநாப சுவாமி கோவில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த மன்னர் குடும்பத்தின் மேல்முறையிட்டு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் பத்மநாப சுவாமி கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட தலைமையின் கீழ் இடைக்கால குழு அமைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி இன்னொரு மாநிலத்தை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை...

இன்னொரு மாநிலத்தை இழக்க காங்கிரஸ் விரும்பவில்லை... சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி கொடுக்க உள்ளதாக தகவல்மாலைமலர் : உட்கட்சி பூசல் காரணமாக கர்நாடகா, மத்திய பிரதேசத்தைப் போன்று இன்னொரு மாநிலத்திலும் ஆட்சியை இழக்க காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளது. தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், முதல்வர் தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் எனவும் அறிவித்தார்.
மாநில அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக முதல்-மந்திரி அசோக் கெலாட் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், இதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடப்பதாக கூறிய அவர், இந்த சதியின் பின்னணியில் பா.ஜனதா தேசிய தலைமை இருப்பதாகவும் புகார் கூறினார்.
அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சச்சின் பைலட்டை ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்துள்ளார்.

தமிழகத்தில் 2 ஆயிரத்தை கடந்த கரோனா உயிரிழப்பு!!! -இதுவரை இல்லாத அளவிற்கு பிற மாவட்டங்களில் பாதிப்பு!!

tamilnadu:corona impacts on other districts நக்கீரன் - கலைமோகன்:  தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,548 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த எண்ணிக்கை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று நான்காயிரம் என்ற எண்ணிக்கையிலிருந்த கரோனா பாதிப்பு, தற்பொழுது இன்றும் தொடர்ந்து நான்காயிரம் என்ற எண்ணிக்கையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பத்தாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை 78,573 பேருக்கு கரோனா  இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை 1,42,798 பேருக்கு கரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவமனைகளில் 48,196 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.