சனி, 18 ஜூலை, 2020

என் சாவுக்கு காரணமானவங்கள! தற்கொலைக்கு முன்.. ஐடி ஊழியரின் மனைவி பேசிய வீடியோ


  நக்கீரன் " கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் ஐ.டி ஊழியராக இருந்தவருமான விஜயகுமாருக்கும் கள்ளக்குறிச்சி நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனாவுக்கு இடையே 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், 85 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விஜயகுமார் தன் ஐ.டி வேலையை இழந்து சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளார். அப்போது அவர் உறங்கிக்கொண்டிருக்கும்போது, வந்த போன் அழைப்பை எடுத்து பேசிய ஷோபனாவிடம் யாரோ ஒரு பெண், தான் விஜயகுமாரின் காதலி என கூறியதால், அதிர்ந்த ஷோபனா இதுகுறித்து கணவரிடம் கேட்க, அவரோ வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி, தன் தவறை திசை மாற்றியுள்ளார்.
இதனால் ஷோபனா வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அந்த விடியோவில் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில், வீடியோ எடுத்தபடி பேசிய ஷோபனா,  “இதான் என் கடைசி வீடியோனு நெனைக்கிறேன்.

இவ்ளோ பவுன் போட்டுட்டு வந்ததுக்கு ஒன்னும் இல்லாதவன கட்டியிருக்கலாம்லனு என் மாமியார் கேக்குறாங்க.
என் புள்ளைய மட்டும் நல்லபடியா பாத்துக்கங்க. என் பொணத்த எங்கப்பா கல்லறை பக்கத்துல பொதைங்க போதும்.
என் சாவுக்கு காரணமானவங்க யாரையும் சும்மா விடாதீங்க. சண்டையில கூட என்னதான் அடிக்க வந்தாங்க.

என்னோட ஜி-மெயில் அக்கவுண்ட்ல இருந்து இந்த வீடியோ, புகைப்பட ஆதாரங்களை எடுத்துக்கங்க. அப்ப தெரியும், ஏன் இந்த பிரச்சனைலாம்னு.
சாகப்போற நான்தான் யாருக்கும் பிரயோஜனப்படல. என் அப்பாவோட ஆசைப்படி, என் உடலை தானம் பண்ணிடுங்க! நான் போறேன்” என்று கூறி மெயில் ஐடி பாஸ்வேர்டுகளை குறிப்பிட்டு கதறி அழுதுள்ளார்.
மேலும், “என் பிரச்சனைகளை கேக்க யாருமில்ல. நான் எதையும் யாருகிட்டயும் சொல்லல. இங்க நடக்குற எல்லாத்தையும் எனக்குள்ளதான் வெச்சிருக்கேன்.
சிலர்கிட்ட சொல்லியும் எனக்காக யாரும் பேசல. கேக்கல. நான் தனியாதான் இருக்கேன். நேத்து கூட அடிக்கும்போது, அவங்க அம்மாகிட்ட கேளுங்கனு சொன்னேன், அவங்க குழந்தையை தூக்கிக்கிட்டு, கதவ சாத்திகிட்டு உள்ள விட்டு அடிடானு சொல்லிட்டு போறாங்க.
எப்படி இந்த வீட்ல இருக்க முடியும். தம்பிக்காகதான் (மகன்) இவ்ளோ நாளா பாத்துகிட்டு இருந்தேன். கஷ்டமா இருக்கு.
அவன தூக்கிட்டு போயிடுங்கம்மா. அவன பாத்துக்காங்க.. நான் விட்டுட்டு போறேன். என்னோட நகைகளையும் பொருளையும் எடுத்துக்கங்க.
மகனுக்கு உதவும்.” என தன் அம்மாவுக்கும் ஒரு வீடியோ பதிவினை பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக