செவ்வாய், 14 ஜூலை, 2020

இலங்கேஸ்வரன் இராவணனின் மகள்தான் சீதை .. ஆர் எஸ் மனோகரின் நாடகம்


Susairaj Babu : சீதையை, இலங்கையில் பிறந்தவர், என்று சொன்ன ""இலங்கேஸ்வரன்" நாடகம்.
ஆர்.எஸ். மனோகர். அவரது நேஷனல் தியேட்டர்ஸ் மேடை நாடகங்களில் அவர்தான் ஹீரோ. புராணங்களில் தேடித்துருவி, எதிர்மறையான ாயகனாக நடிக்க சற்றும் எதிர்பாராத வகையில் வாய்ப்புக் கிடைத்தது., அதைத்தொடர்ந்து
அவர் மேடையேற்றிய முதல் இரண்டு நாடகங்கள் சமூக நாடகங்கள்தான்.(இன்ப நாள், உலகம் சிரிக்கிறது) மூன்றாவதுதான் இலங்கேஸ்வரன்.
‘நம் கலாசாரம் ராமனை ஹீரோவாகவும், ராவணனை வில்லனாகவும் பார்த்துப் பழகியதாயிற்றே!. அப்படி இருக்கும்போது, ராவணனுக்கு ஹீரோவாக முகம் கொடுத்து நாடகம் போட எப்படித் துணிந்தீர்கள்? அதை மக்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டார்களா?” என்று கேட்டபோது, “ராமாயணத்தில் அசுரனாக சித்தரிக்கப்பட்ட ராவணனை நல்லவனாகக் காட்டியதையும், சீதை ராவணனது மகள் என்று சொன்னதையும் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இத்தனைக்கும், வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், ஆனந்த ராமாயணம், பௌத்த ராமாயணம் என்று இந்தியாவின் பல்பேறு பகுதிகளிலும் இருக்கும் ராமாயணங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்துதான் இலங்கேஸ்வரன் நாடகத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டது. மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. .சீக்கிரமே அவரது கவலை தீர வழி பிறந்தது.

ஸ்ரீலங்காவிலிருந்து கொழும்பு நகரில் ஒரே அரங்கத்தில் 21 நாட்கள் இலங்கேஸ்வரன் நாடகத்தை நடத்த அழைப்பு வந்தது. நாடகம் பார்த்துவிட்டு, ஸ்ரீலங்கா மக்கள் மனோகரைப் பாராட்டினது மட்டுமில்லாமல், அவருக்கு ‘இலங்கேஸ்வரன்’என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவித்தார்கள். மனோகரது நாடகங்களிலேயே மிக அதிக தடவைகள் மேடையேறிய பெருமையும் இலங்கேஸ்வரனுக்குத்தான் உண்டு. ஆயிரத்து எண்ணூறு தடவைகளுக்கு மேல் அந்த நாடகத்தைப் மேடையேற்றி இருக்கிறார் மனோகர். ம.பொ.சி., சி.சுப்ரமணியன், ஆர், வெங்கடராமன் போன்றவர்கள் மட்டுமின்றி தந்தை பெரியார் கூட அந்த நாடகத்தைப் பார்த்து, ரசித்து மனோகரைப் பாராட்டி இருக்கிறார்.
இலங்கேஸ்வரனில் சீதை ராவணனின் மகள் என்று சொல்லி பரபரப்பு, ஏற்பட்டாலும் அவருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, சொன்னவர் பிராமணராக இருந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

கதாபாத்திரங்களுக்கும் புதுப்பரிமாணம் கொடுத்து ஹீரோவாக்கி அந்தப் பாத்திரங்களில் பிரகாசித்தவர் அவர். மனோகரது இயற்பெயர் லட்சுமி நாராயணன். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, மனோகர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.சமஸ்கிருதம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ‘மிருச்சிகடிகா’ என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாந

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக