வியாழன், 16 ஜூலை, 2020

அமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் கவிஞர் மனுஷ புத்திரன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி

 Mathivanan Maran  -  tamil.oneindia.com:  சென்னை: தமிழக அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இதனையடுத்து சென்னையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையும் கூடி வருகிறது இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவுக்கு முதல் எம்.எல்.ஏ. உயிரிழந்தார்.
 அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. ஆம்பூரில் அமைச்சர் நிலோபர் கபீல் மகன், மருமகள் உட்பட 15 பேருக்கு கொரோனா இதேபோல் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி. அன்பழகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது 4-வது  அமைச்சராக நிலோபர் கபீலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அவர் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார். முன்னதாக ஆம்பூரில் நிலோபர் கபீல் மகன், மருமகள் உட்பட 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக