புதன், 15 ஜூலை, 2020

உங்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்.. எப்படியாவது என்னை அந்த ரோலில் நடிக்க

Rebel Ravi : பாலியல் சீண்டலும்...என் கருத்தும்...
நான் பல செக்சுவல் ஹராஸ்மெண்ட் வழக்குகளில் பெண்கள் பக்கம் நின்று போராடுகையில்...வழக்கு முன்னேறும் போது... அவர்கள் ஹராஸ் செய்தவரோடு சமாதானமாய்ப் போனதைப் பார்த்துக் கொதித்திருக்கிறேன்.
90% செ ஹ வழக்குகள் உள்நோக்கம் கருதிப் போடப்படுபவையே.
அப்படி வழக்கும் போடாமல் வைரமுத்துவைத் தூக்கில் போடு என்பதெல்லாம் படு போங்கு.
வழக்குப் போடுங்கள். குற்றவாளி என நிரூபியுங்கள்..என்ன தண்டனையோ கிடைக்கட்டும்.
அது வரையிலும்..அவர் ஒரு காமக்கொடூரன் செக்ஸ் மேனியாக் என்பதெல்லாம் டூ மச்.

பல உச்ச நடிகர்கள் என்ன வெல்லாம் செய்வார்கள் எந்தெந்த ஹோட்டலில் எப்படியெப்படி நடந்து கொள்வார்கள் என்பதெல்லாம் என் காதுக்கு வரும்..நான் அவற்றை எழுதியதில்லை. நடிகனின் நடிப்பை மட்டுமே விமர்சிப்பேன்..லக்‌ஷ்மிகாந்தன் அல்ல நான்.
சினிமாவில் என்னவெல்லாம் நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. அங்கேயே கொட்டை போட்ட எனக்கு நன்றாகத் தெரியும்.
நான் பெரும் படங்களில்.. நாயகியைத் தேர்வு செய்யும் இடத்தில் இருந்த போது...உங்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன்.. எப்படியாவது என்னை அந்த ரோலில் நடிக்க வையுங்கள் எனப்..பிற்காலத்தில் பிரபலமான பல நடிகைகள் என்னிடத்தில் கூறியதுண்டு..சிரித்துக் கொண்டே அவர்களிடம் சொல்வேன்.

உன்னுடைய சொத்தே உன் தன்மானம் தான்..அதை இழந்து விடாதே..அப்றம்..போற வர நாயெல்லாம் உன்ன விடாது என.
எந்த விதத் தொடர்பும் இன்றி..Just as a professional சிம்ரன், லைலா, பூஜாகுமார், ஜெயா சீல், ஷ்வேதா ஷெட்டி( மாளவிகா) போன்றோர் நாயகிகள் ஆகக் காரணமாய் இருந்தவன் நான்..
நடிக்க வந்த புதிதில் டிஸ்கோ சாந்தி, பபிதாவுக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்தவன்.. எந்த எதிர்பார்ப்பும் இன்றி.
மரியாதை மனதில் இருந்தால் போதும்..
நன்றியைக் கூட எதிர்பார்க்காதவன் நான்...
கத்தி மேல் நடக்கும் வாழ்க்கை அது.கொஞ்சமும் பிசகாமல் நடப்பவன் நான்..
என்னுடைய பொறுப்பை என்றும் துஷ்பிரயோகம் செய்ததில்லை..
கொஞ்சம் சபலப் பட்டிருந்தாலும் Trap செய்து மீடூ என்பார்கள்...
நாம் நெருப்பாய் இருந்தால்...அண்ட மாட்டார்கள்.
செருப்பாய் இருந்தால்...மிதிக்கத்தான் செய்வார்கள்.
ரெபெல்ரவி
13/07/2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக