வியாழன், 16 ஜூலை, 2020

தங்கையை காக்க நாயிடம் கடி வாங்கிய அண்ணன் … முகம் முழுவதும் 90 தையல்கள்!

தன் தங்கையுடன் ப்ரிட்ஜர் Bridger Walker,
நாய் தாக்குதலில் ஒருவர் இறக்க நேரிடும் என்றால் அது நானாக தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் - 6 வயது பாசக்கார அண்ணன்
 tamil.indianexpress.com :  6-year-old boy rescued his sister from a dog attack : அமெரிக்காவின் வையோமிங் பகுதியில் வசித்து வரும் ப்ரிட்ஜர் வாக்கருக்கு 6 வயது. இவருடைய தங்கையை கடிக்க வந்த நாயிடம் இருந்து தங்கையை காக்க இவர் செய்த வீர சாகசம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
1 வயதான தங்கள் வீட்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வாக்கரின் 4 வயது தங்கையை தாக்க வந்துள்ளது. சிறிது நேரம் கூட தாமதிக்காமல் உடனே ஓடி வந்து தன்னுடைய தங்கையை காப்பாற்றியுள்ளார். தங்கையை காப்பாற்றிய போது, வெறித்தனமாக ஓடி வந்த நாய் ப்ரிட்ஜரின் கன்னத்தை பலமாக கடித்துள்ளது.
அவருடைய முகத்தில் ஏற்பட்ட காயத்தை பார்க்கும் போது நமக்கே முகம் பதைபதைக்கிறது. நாயிடம் கடி வாங்கிய வாக்கருக்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவருடைய இடது பக்க கன்னத்தில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளது.

தங்கைக்கும் நாய்க்கும் நீ ஏன் நடுவில் சென்றாய் என்று அவருடைய தந்தை கேட்ட போது. “யாரேனும் இறக்க நேர்ந்தால் அது நானாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று வாக்கர் கூறியுள்ளார். இப்படி ஒரு வீரனை இதுவரை நான் பார்த்ததே இல்லை. என் வயதில், உனக்கு இருக்கும் துணிச்சலில் பாதி கூட இல்லை என்று பிரபல ஹாலிவுட் நடிகை  அன்னா ஹாத்வே இன்ஸ்டகிராமில் இந்த  நிகழ்வு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக