சனி, 18 ஜூலை, 2020

திருச்செந்தூர் வீதிகளில் குடும்பம் குடும்பமாக திரண்டு கந்த சஷ்டி கவசம் பாடிய மக்கள்

திருச்செந்தூர் வீதிகளில் குடும்பம் குடும்பமாக திரண்டு கந்த சஷ்டி கவசம் பாடிய மக்கள்மாலைமலர் : கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வெளியான வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருச்செந்தூரில் மக்கள் கந்த சஷ்டி கவசம் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க கந்த சஷ்டி கவசத்தின் மகிமை குறித்து ஆன்மீக தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். இந்துக்கள் கந்த சஷ்டி கவசத்தை படித்து முருகன் அருளைப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நிலையில், திருச்செந்தூர் வீதிகளில் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு நின்று கந்த சஷ்டி கவசம் பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் தங்கள் குரூப்களில் பகிர்ந்து வருகின்றனர்.  கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ 2 நிமிடம் ஓடுகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் நின்றபடி கந்த சஷ்டி கவசம் பாடுகின்றனர். 

இந்த வீடியோவை பார்த்த பலரும் கறுப்பர் கூட்டம் சேனலுக்கு தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் நாளுக்கு நாள் இந்து விரோத போக்கு அதிகமாகி விட்டதாகவும் சிலர் கூறி உள்ளனர். கறுப்பர் கூட்டத்துக்கு நல்ல பதிலடி மக்கள் கொடுத்துள்ளார்கள் என்றும், எத்தனை பேர் வந்தாலும் இறை நம்பிக்கையை தொட முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

சிலர் அரசியல் ரீதியிலான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிக்கும் போது மறக்காமல் எதிர்வினையாற்றுவது நல்லது என்ற கருத்தும் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்ர்ந்து வருகின்றனர். 

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு கண்டனம் வலுத்து வரும் நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ 2 நிமிடம் ஓடுகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் நின்றபடி கந்த சஷ்டி கவசம் பாடுகின்றனர். 

இந்த வீடியோவை பார்த்த பலரும் கறுப்பர் கூட்டம் சேனலுக்கு தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் நாளுக்கு நாள் இந்து விரோத போக்கு அதிகமாகி விட்டதாகவும் சிலர் கூறி உள்ளனர். கறுப்பர் கூட்டத்துக்கு நல்ல பதிலடி மக்கள் கொடுத்துள்ளார்கள் என்றும், எத்தனை பேர் வந்தாலும் இறை நம்பிக்கையை தொட முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 

சிலர் அரசியல் ரீதியிலான கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர். தேர்தலில் வாக்களிக்கும் போது மறக்காமல் எதிர்வினையாற்றுவது நல்லது என்ற கருத்தும் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக