புதன், 15 ஜூலை, 2020

அவாள் குடும்பத்தில் ஐஏஎஸ் ஐ பி எஸ் ஆவது எல்லாம் பெரிய மேட்டர் இல்லை

Balasubramanian Ponnuswami :  இந்திரா காந்தியும்
மார்கரெட் தாட்சரும் சமூக நீதி பிறழாத வரலாறும்
நானும் என் நண்பர்களும் ICRISAT Technical Assistant post க்கு இண்டர்வியூவுக்கு ஹைதராபாத்துக்கு நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் செல்லப் பயணமானோம், எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான். நான் அப்போது (1980) முதலாம் ஆண்டு PhD, ICRISAT செலவில் ஹைதராபாத் எல்லாம் சுத்திப் பார்த்து விட்டு வரலாமே என்பதுதான் ஐடீயா.
சென்னையில் இருந்து ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் அடுத்த நாள் காலையில் பிடிக்க வேண்டும். Blue Mountain ரயில் ஃபுல். அன்று TNAU வில் Science Day Function, அதில் உரையாற்ற Adyar Labour institute இயக்குநர் வரவழைக்கப்பட்டார். அந்த விழா முடிந்ததும், அவர் எங்களுடன் அதே sleeper பெட்டியில் சென்னை வந்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டபின் அன்றைய காலை The Hindu தலைப்புச் செய்தி பற்றிப் பேச்சு வந்தது.
"பாத்தேளா, கிரிஜா வைத்யநாதன்ன்ற பொண்ணு பிரசிடென்சிக் காலேஜூல வெறும் BSc Physics தான் படிச்சிருக்குறா, National Level ல IASல First வந்துருக்குறா. இந்தச் சின்ன வயசுல என்ன ஒரு உழைப்பு, எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா" என்றார், இயக்குநர்.
"ஆமாம், சார். உண்மையிலேயே சாதனைதான். கிரிஜாவுக்குப் பாராட்டுகள்" என்றனர், என் நண்பர்கள்.

நான் தொடர்ந்தேன், "இந்தியாவிலேயே Services Exam இல் எங்கள் TNAU மாணவர்கள்தான் அதிகமாக Clear செய்கிறார்கள். சென்ற ஆண்டு இறுதியில் நானும் மற்றும் சில நண்பர்களும் எங்கள் மாணவர் ஒருவருக்கு Mock interview நடத்தி உண்மையான IAS Interviewக்கு அனுப்பி வைத்தோம். அவர் பெயர் விஜயகுமார். சுக்கிரவாரப் பேட்டையில் ஒரு பெட்டிக் கடை வைத்திருப்பவரின் மகன்" என்றேன்.

"என்ன ரேங்க் வந்தது, அவருக்கு" என்று கேட்டார் இயக்குநர்.
"All India Rankings ல 21வது rank வந்தது, " என்றேன்.
அதற்கு அவர், "பரவாயில்லையே, ஆனால், எந்த பேப்பரிலும் வந்த மாதிரி தெரியவில்லையே" என்றார்.
"ஆமாம் சார், வரவில்லைதான்" என்றேன்.
"எப்பவுமே போட மாட்டாங்க. எங்கள் வகுப்பு நண்பன், விஜயகுமார், அக்ரானமி படித்தவர், சுக்ரவாரப்பேட்டையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் மகன், சிவில் தேர்வில் 21 ஆம் இடத்தில் வந்தார். தமிழகத்தில் முதலிடம் மட்டுமல்ல இந்தியாவிலேயே முதலிடம் (முதல் 20 UPSC இடங்கள் சாதாரணமாக IFS ஆகிவிடுவார்கள்)."
"ஒரு தினத்தந்தி, மாலைமுரசு கூடச் சீந்தவில்லை இந்த மகிழ்வுச் செய்தியை!"
"ஆனால் அதே ஆண்டு UPSCத் தேர்வில் ஒரு பெண், அதுவும் BSc Physics படித்து விட்டு, முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் முதலாவதாக வந்தார் என்று ஒரு பத்திரிகை விடாமல் எழுதித் தீர்த்து ஒரு வழியாக ஒய்ந்து போயின."
"இதில் என்ன தமாஷ் என்றால், அந்த பிராம்மணப் பெண்ணின் அப்பா ஐஏஎஸ், ரிசர்வ் பேங்க் கவர்னராக ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்துப் போட்டவர் (யார்யாரென்று புரிந்தவர்களுக்கு ஒரு சல்யூட்!) குடும்பத்தில், அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சித்தப்பா, பெரியப்பா உள்பட பல பேர் ஐஏஎஸ். அந்தக் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் ஐஏஎஸ் ஆவது பெரிய மேட்டர் இல்லை என்று இந்தப் ப்ராம்மண பத்திரிகைகளுக்குத் தெரியாது, புரியாது."

"பிரதமர் ஜவாஹர்லால் நேரு புதல்வி இந்திரா காந்தி இந்தியப்பிரதமராவது சாதனையன்று. சாதாரண குடும்பத்தில் பிறந்து தெருவோரப் பலசரக்குக்கடை வைத்திருந்தவரின் மகளான மார்க்கரெட் தாட்சர் பிரிட்டீஷ் பிரதமரானதுதான் அழகு, சமூகநீதி பிறழாத வரலாறு."
"இந்த உண்மை நம் ப்ராம்மணப் பத்திரிகைகளுக்கு என்றும் உரைக்கப் போவதில்லை!" என்றேன். அந்த ப்ராம்மண இயக்குநரின் முகத்தில் அசடு லிட்டர் லிட்டராக வழிந்தது, பாவம்.
ஹைதராபாத் போன நாங்கள் யாரும் interview வில் செலக்ட் ஆகவில்லை! சலார் ஜங் மியூசியம், கோல்கொண்டாக்கோட்டை பாத்ததுதான், மிச்சம்.
அந்த National First IAS தமிழ்நாட்டை ஆண்ட லட்சணத்தைதான் சமீபத்தில் பார்த்தோமே!
 IAS இல் பாஸ் பண்ணியது மாதிரியே IITM இலும் ஒரு PhD ஐ வாங்கித்தன் வீட்டு ஷெல்ஃபில் வைத்துக் கொண்டது அந்த அம்மணி என்று கேள்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக