சனி, 16 பிப்ரவரி, 2019

போர் - வெளிநாடு வாழ் பார்ப்பனர்களின் பலகோடி ரூபாய் சதி.. இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்க.... ?

நந்தா குமார் : சமீபத்திய தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா,
பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என செய்திகள் பரவுவதை கவனித்திருப்பீர்கள். இது சாதாரண விசயமாக தெரியலாம். ஆனால் இதன் பின் வெளிநாடு வாழ் பார்ப்பனர்களின் பல லட்சம் கோடி சதித்திட்டம் உள்ளது.
தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக உள்ளது. போர் ஏற்பட்டால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து 120ஐத் தொடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். அப்படி ஆனால் இப்போது 75 ரூபாய்க்கு விற்கிற பெட்ரோல் விலை 150 ரூபாய் ஆகும். அனைத்துப் பொருட்களும் விலை உயரும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். மக்கள் ஒருவேளை உணவிற்கே சிரமப்படுவர்
ஆனால் ஒரு கும்பலுக்கு மட்டும் அதிக நன்மை ஏற்படும். அவர்கள் அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள். அமெரிக்காவின் ட்ரம்ப் மண்ணின் மைந்தன் கொள்கையை பின்பற்றுபவர். இதனால் அங்குள்ள பார்ப்பனர்களுக்கு தற்போது வேலை கிடைப்பது இல்லை. அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வர யோசிக்கின்றனர். அவர்கள் இத்தனை காலம் சேர்த்து வைத்த சொத்துக்கள் அமெரிக்க டாலரின் மதிப்பில் உள்ளன. அவர்கள் இந்தியா திரும்பும் போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும். உதாரணமாக பத்து மில்லியன் டாலரை தற்போதைய மதிப்பில் இந்தியாவிற்கு கொண்டு வந்தால் 70 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் போருக்கு பிறகு கொண்டு வந்தால் 120 கோடி ரூபாய் கிடைக்கும். ஒரு போரினால் ஒரு ஆளுக்கு எத்தனை கோடி இலாபம் பாருங்கள். இது போல எழுபது லட்சம் பேருக்கு எத்தனை கோடிகள் கிடைக்கும்? இவர்களுக்கு இங்கு வேலை கிடைக்க வசதியாக பல்கலைக்கழக சட்டம் கூட சமீபத்தில் மாற்றப்பட்டது.

டி.கே ராஜேந்திரன்- பழனிசாமி கூட்டணி" .. முதல்வர்-டிஜிபி ஊழல் கூட்டணி: ஸ்டாலின்

முதல்வர்-டிஜிபி ஊழல் கூட்டணி: ஸ்டாலின்சென்னையிலும், திருச்சியிலும் காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் உருவாக்கும் 88 கோடி ரூபாய் டெண்டரில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக இன்று (பிப்ரவரி 16) டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியானது. இதை மேற்கோள் காட்டி தமிழகத்தில் முதல்வர் -டிஜிபி ஊழல் கூட்டணி அமைத்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இதுபற்றி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆப்கோ பிராஜெக்ட்' என்ற பெயரில் காவல்துறையை நவீனமயமாக்கும் நிதியில் இருந்தும் மாநில அரசின் நிதியிலிருந்தும் செயல்படுத்தும் இந்தத் திட்டத்திற்கான டெண்டர் முறைகேடுகள் அ.தி.மு.க அரசின் கரி பூசிய ஊழல் முகத்தை மீண்டும் காட்டியிருக்கிறது. 2012ல் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் 38 கோடி ரூபாயில் முடித்திருக்க வேண்டியது. ஆனால், அ.தி.மு.க அரசின் கஜானாவில் கொள்ளையடிக்கும் கலையால் இந்தத் திட்டத்தின் மதிப்பு இன்றைக்கு 88 கோடி என்று உயர்ந்து அதிலும் மாபெரும் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளது.

காஷ்மீர் .. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகின்றனர் ..ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை?”

புல்வாமா படுகொலை: வருந்தும் அதில் அகமது தந்தை!மின்னம்பலம் : தீர்க்கப்படாத பிரச்சினைகள்தான் இருதரப்பிலும் இரத்தக்களரி ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளதாகவும், காஷ்மீர் பிரச்சினை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய அதில் அகமதுவின் தந்தை கூறியுள்ளார்.
பிப்ரவரி 14ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர் துறந்தனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த காஷ்மீர் இளைஞர் அதில் அகமது (20) இந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டார்.
40க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை எண்ணி வருத்தமடைவதாக அதில் அகமதுவின் தந்தை குலாம் ஹாசன் தார் தெரிவித்துள்ளார். தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் இதுகுறித்து அவர் பேசுகையில், “தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்சினைகள்தான் இருதரப்பிலும் ரத்தக்களரி ஏற்படுவதற்குக் காரணமாக உள்ளது. அரசியல்வாதிகள்தான் இவை எல்லாவற்றுக்கும் காரணம். அவர்கள் தங்கள் குடும்பத்துக்கு எந்தத் தீங்கும் வரவில்லை என்பதால் எதுவும் செய்ய மாட்டார்கள். இறுதியில் இப்போது இருதரப்புக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் போன்ற இடத்தில், என் மகன் ஆயுதம் எடுத்த நாளிலிருந்து மரணம் என்பது தடுக்க முடியாதது” என்றார்.

அதிமுகவுக்கு 25, பா.ம.க.வுக்கு 4 , தே.மு.தி. க.வுக்கு 3 மீதம் உள்ள 8 தொகுதிகளில் பாஜக

மாலைமலர் :தமிழகம் - புதுவையில் மொத்தம் உள்ள 40 இடங்களில் அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 15 தொகுதிகள் என முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி உருவாகி உள்ளது. ரகசியமாக நடந்து வந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடந்து வருகிறது.
பா.ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று முன்தினம் சென்னை வந்து அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்தினார். பா.ஜனதா சார்பில் மத்திய மந்திரியுடன் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

குறளரசன் மதம் மாறினார் காதல் காரணம் .. வீடியோ ..ராஜேந்தரின் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு ..

குறளரசன் ஒரு இஸ்லாம் மதப்பெண்ணைக் காதலித்து வருவதாகவும் அவரை மணக்க அந்தப் பெண்ணின் பெற்றோர் விதித்த நிபந்தனைகளாலேயே இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

tamil.samayam.com :சென்னை: இயக்குநர் டி. ராஜேந்திரனின் மகனும், நடிகர் சிம்புவின் இளைய சகோதரருமான குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஆர். பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிலம்பரசனின் சகோதரர் குறளரசன்
இஸ்லாம் மதத்தை தழுவினார். இதுதொடர்பாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். நடிகர் சிம்புவின் இளைய சகோதரர், குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதை அவரது தந்தை டி. ராஜேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், 80-களில் வெளியான பல படங்கள் வெள்ளி விழா கண்டது. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன் இருந்து வருகிறார்.

ஜம்முவில் இஸ்லாமியர் சொத்துக்களை நாசம் செய்து பாஜக வன்முறை! Goons Attack Muslim Localities in Jammu

ஆதனூர் சோழன் நக்கீரன் : இந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டாலும், அவருடைய கட்சியைச் சேர்ந்த குண்டர்கள் சிலர் ஜம்மு பிரதேசத்தில் இஸ்லாமியர் குடியிருக்கும் பகுதிகளில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். bjp இத்தனைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதே, இஸ்லாமியர்களின் சொத்துக்களுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்து வெறியாட்டத்தை ஆடித் தீர்க்கிறார்கள். இதையடுத்து இஸ்லாமியர்கள் மசூதிகளில் தஞ்சம் புகுகின்றனர். பல இஸ்லாமியக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை சீக்கியர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் படுகொலையை தேர்தலுக்காகப் பயன்படுத்தும் நோக்கத்தில் பாஜக முனைப்போடு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்
By Beyond Headlines BSince morning, hundreds of rightwing goons and thugs are on streets in Jammu city, vandalizing property and burning vehicles belonging to Muslim community despite having a “curfew” in place. Four hours ago, a handful of right-wingers set one of my relative’s car on fire and damaged another one near Gujjar Nagar with security forces watching them as mute spectators.
Fearing for their lives, some of my relatives fled and took refuge in a local mosque, while two of my friends from the Sikh community safely evacuated my siblings. Various incidents of violence by the rightwing goons were reported from different Muslim pockets of Jammu city. It is terrorism, pure and simple.

மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ் பாதியில் நின்றது .. இயந்திர கோளாறு

பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுதுதினத்தந்தி :பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி, இந்தியாவின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை (டெல்லி–வாரணாசி) நேற்று டெல்லியில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ரெயில் தொடக்க ஓட்டத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சாதனை புரிந்தது. இந்த ரயில், வர்த்தக ரீதியிலான பயணத்தை நாளை துவங்குகிறது.
வாரணாசியில் இருந்து இந்த ரயில் திரும்பி வந்து கொண்டிருந்த போது பழுதாகி நின்றது. தனது முதல் பயணத்திலேயே ரயில் பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்தம்பி யானை முகாமுக்கு .. இது வரையில் எவரையும் தாக்கவில்லை

முகாமிற்கு கொண்டு செல்வதற்காக பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது. சின்னத்தம்பி யானையை காயமின்றி பிடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த‌தை தொடர்ந்து நேற்று முதல் யானையை பிடிக்க வனத்துறையினர் கும்கி யானைகளுடன் முயற்சித்து வந்தனர். இதனையடுத்து வனத்துறையினரும், மயக்க ஊசிகளுடன் மருத்துவர் குழுவினரும் , சின்னத்தம்பியை பிடிக்க களம் இறங்கினர். நான்கு மயக்க ஊசிகள் செலுத்தியும் சற்றும் அசராமல், வாழை தோட்டத்திற்குள் புகுந்த சின்னத்தம்பி யானை, வனத்துறையினரையும் கும்கி யானைகளையும் திணறடித்த‌து. பின்னர் சிறிது சிறிதாக மயக்க நிலையை அடைந்த சின்னத்தம்பி யானையை கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் லாவகமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பட்டியல்!.. பாமக வந்தால் விசிக வெளியேறுமா?

மின்னம்பலம் : திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பட்டியல்!இன்னும் சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில், தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து அறிவிக்கும் தருவாய்க்கு வந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக ஆகிய கட்சிகள் உறுதியாக உள்ள நிலையில், இதில் பாமகவும் இடம்பெறலாம் என்ற நிலையே சில நாட்களாக நிலவுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என்பதுதான் தற்போது அரசியல் அரங்கில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனையும் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியிருந்தார். சந்திப்பில் திருச்சியில் போட்டியிடும் தனது விருப்பத்தையும், கட்சி அங்கீகாரம் உள்ளிட்ட விவகாரங்களைக் கூறி குறைந்தபட்சம் 2 இடங்களிலாவது மதிமுக போட்டியிட வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் வைகோ அழுத்தமாக கூறினாராம். காதர் மொய்தீன் எங்களுக்கு ஒரு தொகுதி வேண்டும், அது எது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள சின்னங்கள் அல்ல.. 2ம் 3ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழ் பெளத்தம் இருந்தது .. சுமந்திரன் .. மனோ கணேசன்

“வரலாற்றை திரிக்க
வேண்டாம்” தொல்பொருளாராய்ச்சி திணைக்கள
பணிப்பாளர்-நாயகத்திடம் அமைச்சர் மனோ, பாஉ சுமந்திரன் சாரமாரியாக கேள்விக்கணைகள்"
யாழ்ப்பாணம் கந்தரோடை தொல்லியல்
வட கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே , சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம். 2ம் 3ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும், வடகிழக்கிலும் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி விரவி இருந்தது என்பது வரலாறு.
ஆகவே இந்நாட்டின் வரலாறு ஒரு இனமதத்துக்கு மாத்திரம் சொந்தமானது என தீர்மானிக்க வேண்டாம்.
அப்படியானால் இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை என்னால் முன்னெடுக்க முடியாது” என தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர்-நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம், பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்க தெரிவுக்குழு கூட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

காஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடம் ஒரு போர் நடகுமோ என்ற எண்ணம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களுக்கு மத்தியில் வெட்குண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி திவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறபப்டுகிறது.
ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க பரவலாக மக்களிடமே உருவாகி இருந்தாலும், தேசிய ஊடகங்கள் எனப்படும் பாஜக ஊடகங்கள் போர் வெறியை உருவாக்கி வருகிறது.
மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான பிரமாண்டமான இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் எப்படி சாத்தியம்?
இந்தியாவிலேயே அதி உச்ச பாதுகாப்பு வலயமைப்பு பகுதி காஷ்மீர். அதுவும் தேசிய நெடுஞ்சாலை அதி உச்ச எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புகள் நிறைந்த பகுதி, இந்த பகுதிக்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஒருவர் கொண்டு வந்து மோதுகிறார் என்றால் அது இராணுவத்தினர் தரப்பில் இருந்து உதவி இல்லாமல் இப்படி ஒரு தாக்குதலை திவீரவாதிகளால் நடத்த முடியுமா?

மோடி : ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளோம் ... மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டிவரும்

மோடி ஆவேசம் tamil.oneindia.com - veerakumaran :
 டெல்லி: மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள்.. தக்க விலை கொடுத்தாக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பகிரங்கமாக எச்சரிக்கைவிடுத்தார்.
காஷ்மீரில் நேற்று, சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றி இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகு, டெல்லியில் நடைபெற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் துவக்க விழாவில் நரேந்திர மோடி பங்கேற்றார். 2 நிமிட மவுன அஞ்சலிக்கு பிறகு மோடி உரையை துவக்கினார். அவரது உரை முழுக்க பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கைவிடுப்பதை போல இருந்தது.

திமுகவில் அமமுக ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் இணைந்தார்

THE HINDU TAMIL : அமமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி திமுகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைந்தார். இதையடுத்து, அமமுகவின் திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வி.வேட்டையன்,மாவட்ட விவசாய அணி, துணை அமைப்பாளர் பி.முத்துசமி, நிலையூர் கிளைச்செயலாளர் முருகன் ஆகியோரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தனர்.

கனடா இந்திய வம்சாவளி சிறுமி கொலை .. தந்தை ரூபேஷ் ராஜ்குமார் கொலை செய்தார்...


டொரோண்டோ செய்தி : கனடா - பிராம்டன் நகரில், ரியா ராஜ்குமார் என்ற 11 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தந்தையான 41 வயதுடைய ரூபேஷ் ராஜ்குமார் என்பவரே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கனடா - பிராம்டன் நகரில், ரியா ராஜ்குமார் என்ற 11 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தந்தையான 41 வயதுடைய ரூபேஷ் ராஜ்குமார் என்பவரே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடாக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காஷ்மீருக்கு செல்லாதீர்கள்; 13 ஆம் தேதியே அமெரிக்கா மக்களுக்கு எச்சிரிக்கை விடுத்தது .

gfdfgfசுதந்திர காஷ்மீருக்கு செல்லாதீர்கள்; 13 ஆம் தேதியே எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
.nakkheeran.in - kirubahar : ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா தனது நாடு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில் சுதந்திர காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என அறிவுறுத்தியுள்ளது. வழக்கமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே அமெரிக்கா தனது அறிவிப்புகளில் பாகிஸ்தானை குறிப்பிடும்.
ஆனால் இந்தியா அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தக போர் காரணமாக தற்போது காஷ்மீரை சுதந்திர காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு தாயும் பிரசவ காலத்தில் ஒரு மரண பள்ளத்தாக்கை கடந்து வருகின்றனர் .

அழகோவியம் : ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணரின் வேதனையான பதிவு!
இன்று என் வாழ்வின் மிக சோகமான நாள். ஒரு மகப்பேற்று டாக்டராக, நான் பல கர்ப்பிணி பெண்களை மருத்துவ பரிசோதனையின் போது கையாண்டிருக்கிறேன். மற்றும் ஒவ்வொரு முறையும் குழந்தைகள் எந்தவித பிரச்சினையில்லாமல் பிறக்க வேண்டும் என்று நான் எப்போதும் தாய்மார்களுக்காக என்னையும் மீறி கடவுளிடம் மன்றாடி இருக்கிறேன்.
டெலிவரி(பிரசவ) அறையில் வலியால் துடிக்கும் பெண்களின் உணர்வை வேதனையை துடிப்பை யாராளும் விவரிக்க முடியாது அது ஒரு மறு பிறவிக்கான போராட்டம்.
இது தனது குழந்தைக்காக 9 மாதங்கள் அவர்கள் தாங்கியது. தமக்காக இதில் ஒரு நாளைக்கூட அவர்கள் செலவழித்ததில்லை.
இன்று நான் வேதனையுடன் அழுதேன், ஏனெனில் நான் ஒரு பெண்மணியை (கர்ப்பிணியை) இழந்துவிட்டேன், இது போன்ற நேரங்களில் வாழ்க்கை வெறுத்துவிடுகிறது. கடவுள் வேறுமாதிரி முடிவு எடுத்துவிடுகிறான். தாங்க முடியவில்லை காரணம்
இந்த பெண்ணின் கதை மிகவும் வேதனையாக இருக்கிறது? 14 வருடங்களாக அவள் மலடிஎன்று தூற்றப்பட்டு குழந்தை இன்றி இருந்தாள்! நாம் IVF முயற்சி மற்றும் பல நவீன முறை என நிறைய வழியாக முயற்ச்சி செய்து இறுதியாக கடவுளின் அருளால் அவர் கர்ப்பம் தரித்தாள் இதை விஞ்ஞானம் மற்றும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று தான் நான் கூறுவேன் ஏனென்றாள்
அவர் கருப்பை நீர்க்கட்டி மற்றும் மாதவிடாய் என பல தாக்கத்தை கொண்டிருந்த போதிலும், அவள் கர்ப்பமாக இருந்தாள்,

இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை!' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்

அந்த நெடுஞ்சாலையில் இப்படி ஒரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்தையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ வெடிப் பொருள்களைக் கொண்டுவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையேல், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது.
vikatan.com - sathya-gopalan : காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், நேற்று ஸ்ரீநகர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடிபொருகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்த கார், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வந்த பேருந்தின்மீது மோதியது. இந்தத் தாக்குதலில், இதுவரை 44 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா கூறும்போது, “ நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஜம்மு-வில் உள்ள சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பில் ( Channi Rama transit camp) இருந்து 78 பேருந்துகளில், சுமார் 2,500 ஜவான்கள், ஸ்ரீநகரில் உள்ள பக்‌ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்புக்கு ( Bakshi Stadium transit camp) செல்வதற்காகப் புறப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த வீரர்களில் பலர் தங்களின் விடுப்பை முடித்துக்கொண்டு மீண்டும் பணியில் இணைய வந்தவர்கள்.  மொத்தம் 350 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணத்தை அவர்கள் நேற்று மேற்கொண்டிருந்தனர். 

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

தனுஷுக்கு தந்தை என்று கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு

tamil.thehindu.com/tamilnadu : நடிகர் தனுஷுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள முதியவர் போலீஸ் பாதுகாப்புக் கேட்டு திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் ஆர்.கதிரேசன் (70). இவர், நடிகர் தனுஷ் தனது வாரிசு என வழக்குத் தொடர்ந்தார்.இவரது வழக்கை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நேற்று திருப்புவனம் காவல் நிலையத்தில் தனக்கும், தனது மனைவிக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் அளித்தார். அந்த மனுவில் கூறி யுள் ளதாவது:
திருப்புவனம் பழையூர் காசி நகரில் உள்ள மகள் தனம் வீட்டில் ஓராண்டாக வசித்து வருகிறேன். இதற்கு முன் என் குடும்பத்துடன் மேலூரில் வசித்து வந்தேன். என் மகன் கலைச்செல்வன் என்ற தனுஷ் தற்சமயம் தனுஷ் என பெயர் மாற்றம் செய்து நடிகராக உள்ளார். அவர் 16 வயதில் பிளஸ் 1 படித்தபோது வீட்டை விட்டுச் சென்றார்.

போலியோ சொட்டு மருந்து வாங்க 100 கோடி கடன் கேட்கும் மோடி அரசு! பட்டேல் சிலைக்கு 3000 கோடியை இறைத்த குஜராத் மோடி

நக்கீரன் ஆதனூர் சோழன் :    பணம் இல்லாததால்
இந்த ஆண்டு போலியோ
சொட்டு மருந்து கொள்முதல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சி அலை பரவியது.
உடனே சுகாதார திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்தான், போலியோ தடுப்பு மருந்து வாங்குவதற்காக சர்வதேச அமைப்பிடம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை 100 கோடி ரூபாய் கடன் கேட்டிருக்கும் செய்தி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏழை நாடுகளில் நோய் தடுப்பு திட்டங்களுக்காக உதவும் சர்வதேச அமைப்பான, குளோபல் வேசின் அல்லையன்ஸ் என்ற நிறுவனத்திடம்தான் மத்திய அரசு இந்த உதவியைக் கேட்டிருப்பதாக சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினி சவ்பே தெரிவித்தார்.

சிறுமி கொலை: இளைஞருக்கு தூக்குத் தண்டனை! திருப்போரூர் ..

சிறுமி கொலை: இளைஞருக்கு தூக்குத் தண்டனை!மின்னம்பலம் : திருப்போரூரில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்.
2017ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி கொலை செய்யப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, ஆலத்தூரைச் சேர்ந்த அசோக்குமார் என்ற இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, பின்பு கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இது குறித்து விசாரணை நடத்திய திருப்போரூர் போலீசார், அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மலக்குழி மரங்கள் ..தமிழகம் முதலிடத்தில் ! உயிரிழப்போரின் எண்ணிக்கையில்..

துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகம்!மின்னம்பலம் : கழிவுநீர் சுத்தம் செய்யும்போது உயிரிழப்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 14) கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பதிலளித்தார். அப்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவுநீரைச் சுத்தப்படுத்தும்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 144ஆக உள்ளது. இதற்கடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 71 ஆக உள்ளது. தமிழகத்தில் 144 பேர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ...ஜெயாவின் தடைகளை உடைத்து ஸ்டாலின் கொண்டுவந்த திட்டம் Flashback

don vetrio selvini : மெட்ரோ ரயிலை ஜெயலலிதா கொண்டு வந்தார் எனவும்,
அவர் தான் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு நிறைவேற்றினார் எனவும் ஜெயலலிதா பக்தர்கள் வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
சென்னை மெட்ரோ திட்டம் என்பது தளபதி மு.க.ஸ்டாலின் சிந்தனையில் உருவான திட்டம். மத்திய அரசின் ஒப்புதலை பெறுவது முதல் , ஜப்பான் நாட்டு நிதி நிறுவனத்துடன் கடனுதவி பெறும் ஒப்பந்தம் போடுவது வரை செயலாற்றியவர் அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், இந்த திட்டம் ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இன்று மோடி திறந்து வைத்திருக்கும் பகுதிகள் முதல் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பகுதிகள் வரை, சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் மற்றும் ஆலந்தூர் வரையிலான 45 கி.மீ மெட்ரோ திட்டத்திற்கு(Chennai Metro Phase I) நிதியை ஏற்பாடு செய்தவர் மு.க.ஸ்டாலின்.
ஸ்டாலினின் திட்டம் என்பதாலும், திமுக அரசு நடைமுறைப்படுத்திய திட்டம் என்பதாலும், ஜெயலலிதா போட்ட முட்டுக்கட்டைகள் ஏராளம். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது 30% மேற்பட்ட பணிகள் முடித்துவிட்ட காரணத்தால், மெட்ரோ திட்டம் தப்பித்தது.இல்லையெனில் மதுரவாயில் சாலைத் திட்டத்திற்கு நேர்ந்த கெதிதான் சென்னை மெட்ரோ திட்டத்திற்கும் நிகழ்ந்திருக்கும்.

அதிமுக-பாஜக கூட்டணி இழுபறி ஏன்? விஜயகாந்துக்கு ஒரு தொகுதிதான் அதிமுக கண்டிப்பு .. 4 தொகுதி கேட்டு கெஞ்சல் ...

புறப்பட்ட பியூஷ் கோயல் நள்ளிரவு பேச்சுவார்த்தை tamil.oneindia.com veerakumaran.: விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி ஏன்?- வீடியோ சென்னை: அதிமுகவுடன் பாஜக நடத்திய 3 மணி நேரத்திற்கும் மேலான கூட்டணியில் முடிவு எட்டப்படவில்லை. இதற்கான பின்னணி காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.
பாமகவிற்கு 4 தொகுதிகள் தேமுதிகதான் காரணம் சென்னையில் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் வைத்து நேற்று இரவு, தமிழக, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் இந்த அமைச்சர்கள்.
இரவு 10 மணிக்கு மேல் ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு தாண்டியும் சென்றது.

கோவில் நிலங்கள் எப்படி பறிபோயின? - பகுதி 8 #SaveTNHRCE

தமிழ்நாடு முழுவதும் இறைவனின் பெயரிலேயே கோவில் நிலங்கள் இருக்கும். ஆகவே, பதிவாளர்கள், உள்ளூர் வட்டாட்சியர்களைக் கைக்குள்போட்டுக்கொண்டு, இறைவனின் பெயரைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பெயரில்தான் அந்த நிலங்கள் இருக்கின்றன என்று பட்டா போட்டுக்கொண்டார்கள்.
Muralidharan Kasi Viswanathan : கோவில் நிலங்கள் எப்படி பறிபோயின? - பகுதி 8
#SaveTNHRCE. 
தமிழ்நாட்டுக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் கொள்ளை போகின்றன என்பது நீண்டகாலமாக சொல்லப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு. தமிழகக் கோவில்களுக்கு நிலங்கள் எப்படி வந்தன, அவை எப்படி பராமரிக்கப்பட்டன, பறிபோன நிலங்கள் எப்படி பறிபோயின, மீட்கும் முயற்சிகள் எப்படி நடக்கின்றன என்னபதெல்லாம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கோவில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. கோவிலைச் சுற்றி வழிபாடு தவிர்த்து மிகப் பெரிய வாழ்க்கை இருந்தது. இலக்கியம், இசை, நடனம், பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாமே அந்தந்த ஊரின் கோவில்களைச் சார்ந்தவை. இப்போதும் மதுரை மக்களின் ஆழ்மனதில் மீனாட்சி அம்மன் கோவில் என்பது எப்போதும் நிலைகொண்டிருக்கும், அவர் எந்த மதத்தவராயினும் சரி. மீனாட்சி கோவிலின் திருவிழாக்களை ஒட்டியே, மக்கள் தங்கள் திட்டங்களை, நல்லது - கெட்டதுகளை வகுத்துக்கொள்வார்கள்.
ஆகவே, இம்மாதிரி கோவில்கள் நல்ல முறையில் செயல்பட, அவை தோன்றிய காலம்தொட்டே மன்னர்களும் ஆட்சியாளர்களும் அந்தக் கோவில்களுக்கு நிலங்களையும் செல்வங்களையும் பெரும் அளவில் அளித்தனர். அப்படி அளிக்கப்பட்ட நிலங்களுக்கு வரி கிடையாது. ஆகவே அவை 'இறையிலி நிலங்கள்' என்று அழைக்கப்பட்டன. மன்னர்கள் இப்படி கோவில்களுக்கு வழங்கிய நிலங்களும் செல்வங்களும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தவை. ஆகவே இந்தச் செல்வங்களை மக்கள் தந்ததாகவே கொள்ள வேண்டும்.

பேரா .நிர்மலதேவியின் உயிருக்கு ஆபத்து? கொடுமை படுத்திய காவலர்கள் பத்திரிக்கை நிருபர்களையும் தாக்கினர்


வெப்துனியா :கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை பேட்டியெடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த முறை நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது,
 'போலீசார் தன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக குற்றஞ்சாட்டினார். அதனால் இன்று அவரிடம் இருந்து ஏதாவது தகவல் கிடைக்கும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். இதனால் நிர்மலாதேவியை பத்திரிகையாளர்கள் நெருங்கவிடாமல் போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இருப்பினும் ஒருசில பத்திரிகையாளர்கள் நிர்மலாதேவியிடம் பேட்டியெடுக்க முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்தனர்.
இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.

பாமக, சிறுத்தைகள் இரண்டுமே திமுக அணியில் ? திமுக தரப்பில்....

பாமக - சிறுத்தை: ஸ்டாலின் போடும் கணக்கு!மின்னம்பலம் : தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சு சூடு பிடித்திருக்கிறது. தமிழ்நாடு பாஜகவுக்கான பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று (பிப்ரவரி 14) இரவு சென்னை வந்தார். அதிமுகவோடும், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளோடும் புரபோஸ் செய்வதற்காகக் காதலர் தினத்தன்று அவர் சென்னை வந்திருக்கிறார்.
அதேநேரம், அதிமுக அணியில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் பாமகவின் ரகசிய காய்நகர்த்தல்கள் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, அக்கட்சியின் நிர்வாகிகளுக்கிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. கூட்டணி பற்றி ஊடகங்கள் பலவிதமாக எழுதுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திசைகளில் பாமக நடத்தும் பேச்சுவார்த்தைகள் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
இந்த வகையில் கடந்த வாரம் அதிமுகவோடு பாமகவின் டீல் முடிந்துவிட்டது என்று ரகசியத் தகவல் கிடைத்த நிலையில், இன்னொரு பக்கம் திமுகவுக்கும் கூட்டணிக் கதவைத் திறந்தே வைத்திருந்தது பாமக.

அதிமுக குழுவுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

கூட்டணி: அதிமுக குழுவுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!மின்னம்பலம் : சென்னை வந்துள்ள தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், நேற்றிரவு தங்கமணி உள்ளிட்ட அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எந்நேரமும் வெளியிடப்படலாம் என்ற நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவும், தொகுதி பங்கீட்டில் மட்டுமே இழுபறி நீடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கூட்டணி குறித்துப் பேச பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்றிரவு (பிப்ரவரி 14) டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் வரவேற்றனர். அவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கல்லூரி மாணவரின் தள்ளுவண்டியை அடித்து உடைத்து சேதப்படுத்திய காவலர்கள் CCTV காட்சிகள்


தள்ளுவண்டியை உடைக்கும் போலீஸார்-சிசிடிவி காட்சி
THE HINDU TAMIL : தனது வறுமையான சூழ்நிலையிலும் கல்விப் பயில மாலை நேரத்தில் தள்ளு வண்டியில் சாப்பாட்டுக்கடை நடத்திவந்த மாணவரின் வண்டியை போலீஸார் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து உதவி கேட்டு மாணவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, போதைப்பழக்கத்தால் இளம்பருவத்தினரின் ஒரு பகுதியினர் வாழ்வை சீரழித்துக்கொண்டிருப்பதை தடுக்க காவல்துறையும் சமூக அக்கறை உள்ளவர்களும்போராடி வருகின்றனர்.
மறுபுறம் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கிடைத்தவேலையை செய்யும் நிலையில் உள்ளனர். ஸ்விக்கி, உபேர், சொமெட்டோ போன்ற உணவு கொண்டுச்செல்லும் பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சொந்த மோட்டார் சைக்கிளில் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர்.

தமிழகத்தில் பாஜக காலூன்ற மிகப்பெரிய கலவரங்களை இனி தூண்டும் ...

அதிமுக - பாஜக கூட்டு*
நாம் மிகவும் அச்சப்படவேண்டிய விஷயத்தை எப்படி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் என்று தெரியவில்லை.
அதிமுக-பாஜக கூட்டு உறுதியாவது வெறும் தேர்தல் அரசியல் விவகாரம் மட்டுமல்ல. பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு மிகப்பெரிய அளவுக்கு உதவும்.
அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் போட்டியிடாத தொகுதிகள் என எல்லா இடங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்த்துவரும் தங்கள் கட்சியை ஆழமாக காலூன்றச் செய்துவிடுவார்கள்.
பல மாநிலங்களில் பாஜக மாநிலக்கட்சிகளோடு கூட்டணி வைத்திருக்கிறது. வைக்கிறது. ஆனால் அந்தக் கட்சிகள் சமரசக் கட்சிகளாக இருக்கின்றனவே ஒழிய பாஜகவின் அடிமைகளாக இல்லை. இங்கே கூட்டணி சேர்வற்கு முன்பே அதிமுக பாஜக அடிமையாக ஆகிவிட்டது. பாஜகவோடு தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைப்பதா அல்லது தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைப்பதா என்பது மட்டும்தான் அதிமுகவின் யோசனை.
இன்று அதிமுகவுக்கு பலம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து பல கருத்துகள் நிலவுகின்றன. இந்தக் கூட்டணி வெற்றிபெறாமலும் போகலாம். ஆனால் பாஜக மிக வலுவாக தமிழ்நாட்டில் காலூன்றும்.
கடந்தகாலத்தில் தமிழ்நாட்டில் முதலில் பாஜகவுக்கு இடமளித்தது அதிமுக, அதற்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைக்க உதவியது திமுகவுடனான கூட்டணி. அதனால் தமிழ்நாட்டில், அதன் முன்னாள் தலைவரான இல கணேசன் சொன்னது போல பாஜக நெகட்டிவிலிருந்து ஜீரோவுக்கு வந்தது. இப்போது ஜீரோவிலிருந்து பாசிட்டிவ் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது.
குறைந்தபட்சம் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக ஆகவேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக இப்போது இருக்கலாம்.

வியாழன், 14 பிப்ரவரி, 2019

சாதி சான்றிதழில் "சாதியற்றவர்" ஒடுக்கப்பட்ட சமூகத்தை மேலும் இழிவுபடுத்தும்..

Shalin Maria Lawrence : கையால் மலம் அள்ளுபவர் "சாதியற்றவர்" என்று
சான்றிதழ் வைத்துக்கொண்டாலும் அவர் யார் என்று கண்டுபிடிப்பது பெரிய விஷயம் அல்ல.
ஊர் ,சேரி காலனி இருக்கும் வரை "சாதியற்றவர்" என்று சான்றிதழ் வைத்துக்கொண்டாலும் சாதியை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியும்.
"சாதியற்றவர் " என்று முன்னூறு சான்றிதழ் வாங்கி வைத்து கொண்டாலும் "ஏம்மா உங்க தாத்தா பாட்டி ஊரு எது?" என்று கேட்டே சடாரென்று சாதியை சொல்லிவிட முடியும்.
கோவிலுக்கு போனால் சாமிக்கு பூசை செய்பவனை வைத்து சாதியை சொல்லிவிட முடியும். அங்கே யாரும் சான்றிதழ் கேட்பதில்லை.
சுடுகாட்டில் பிணம் எரிப்பவர் "சாதி சான்றிதழ் " பார்க்காமல் அவர் யார் என்று சொல்லிவிட முடியும்.
ஆக இங்கே சாதியை கண்டுபிடிக்க ஓராயிரம் வழி முறைகள் இருக்க வெறும் பேப்பரில் சாதி ஒழிப்பது என்பது என்பது கண்ணை மூடி உலகம் இருண்ட கதை.
இங்கே தலித்துக்கள் தங்கள் உரிமைகளுக்காக சமூக சான்றிதழில் தங்கள் சமுக பெயர்களை போட வேண்டிய அவசியம் உள்ள நிலையில் சாதி சான்றிதழில் "சாதியற்றவர்" என்று போட்டு கொள்ளுவது ஒடுக்கப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விஷயமாகும்.
இது காந்தி சொன்ன "அடுத்த ஜென்மத்தில் நான் தலித்தாக பிறக்க வேண்டும் " என்பதை போன்று அபத்தமானது.

காஷ்மீரில் 350 கிலோ வெடிபொருளுடன் நடந்த தீவிரவாத தாக்குதல் – புதிய தகவல்

350 கிலோ வெடிபொருளுடன் நடந்த தீவிரவாத தாக்குதல் – திடுக்கிடும் புதிய தகவல்ndtv.com/tamil: புல்வாமா தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதி அதில் அகமத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அதில் அகமது என்பவர், ஸ்கார்பியோ காரில் 350 கிலோ எடைகொண்ட வெடி பொருட்களை நிரப்பியுள்ளார். பின்னர் ரிசர்ப் போலீசார் சென்ற பஸ் மீது வேகமாக மோதி பஸ்ஸை வெடிக்கச் செய்துள்ளார்.
அந்த பேருந்துக்குள் சுமார் 40 ரிசர்வ் போலீசார் இருந்தனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பலி எண்ணிக்கை முதலில் 8-ஆக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 18 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகை யாஷிகா தற்கொலைக்கு முன்பு வீடியோ பதிவு .காதலன் மோகன் பாவுக்கு தண்டனை வேண்டும் .


tamil.indianexpress.com :நடிகை யாஷிகா தற்கொலை!
இறப்பதற்கு முன் அனுப்பிய உருக்கமான வாட்ஸ்-அப் பதிவு
காதலன் மோகன்பாபுவுக்கு, நான் இறந்த பிறகு தக்க தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்< திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா ஜெபராணி என்ற யாஷிகா(வயது 21). சினிமாவில் துணை நடிகையாகவும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து உள்ளார்.
விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.
சென்னை வடபழனியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த யாஷிகாவுக்கு, செல்போன் சர்வீஸ் கடையில் வேலை செய்துவந்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்ற மோகன்பாபுவை காதலித்து வந்ததாக தெரிகிறது.
திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் கடந்த 4 மாதங்களாக பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 22-வது தெருவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக யாஷிகாவிடம் கோபித்துக்கொண்டு மோகன்பாபு, பெரம்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

விஜய பிரபாகரன் : கூட்டணிக்காக காலில் விழுந்தாக ... . கதவை சாத்திய கட்சிகள்

Mahalaxmi : கதை இப்டி இருக்க கூட்டணிக்காக காலில் விழுந்தார்கள் னு புளுகினானே  விஜயபிரபாகரன்
இது மட்டும்தான்.. அதெல்லாம் கேட்கப்படாது.. மூச்.. கதவைச் சாத்திய அதிமுக.. அதிர்ச்சியில் தேமுதிக!
சென்னை: ஜெயலலிதாவிடம் கூட அடித்துப் பேசி அலேக்காக லட்டு போல சீட்டுகளை வாங்கி வந்தார் விஜயகாந்த். ஆனால் தற்போது லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு சீட்டுக்காக கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாம் அவரது கட்சி.
ஆனால் இந்த ஒரு சீட் என்பது ராஜ்யசபா சீட்டாகும். என்ன குழப்புதா.. அதாங்க, லோக்சபா சீட்டோடு, ராஜ்யசபாவுக்கும் சேர்த்து துண்டு போட நினைத்தது தேமுதிக. ஆனால் முடியவே முடியாது என்று அதிமுக கண்டிஷனாக சொல்லி விட்டதாம்.ீ
இதனால் அதிருப்தி அடைந்துள்ள தேமுதிக தற்போது பாஜகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறதாம். ஏதாவது செய்து ஒரு ராஜ்யசபா சீட்டை எப்படியாவது வாங்கிக் கொடுங்க என்று.

புதுச்சேரி ..அரிசியால் வந்த முதல்வர் – ஆளுநர் மோதல்!

அரிசியால் வந்த முதல்வர் – ஆளுநர் மோதல்!
மின்னம்பலம் : புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் நாளையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர வேண்டுமென்று கூறி, புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு ஒரு கடிதம் எழுதினார். இலவச அரிசித் திட்டத்துக்காக, ஆண்டுக்கு 88 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இது, முதல்வர் நாராயணசாமி மூலமாகத் துணை நிலை ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த கிரண் பேடி, புதுச்சேரியில் எத்தனை பேர் ரேஷன் அட்டை வைத்துள்ளனர் என்றும், அதில் எத்தனை பேர் அரிசி பெற்று வந்தனர் என்றும் கூடுதல் விவரங்கள் கேட்டுப் பதில் கடிதம் அனுப்பினார்.

பாலியல் புகார் ஐஜி முருகன் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாலியல் புகார் ஐஜி முருகன் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு!மின்னம்பலம் : தமிழகம் முழுவதும் உள்ள உயரதிகாரிகளின் தனி அறைகள், அரசு அலுவலகங்களில் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்தத் தலைமை செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகனுக்கு எதிராக அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார். இந்தப் புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தப் பரிந்துரைத்தது.
விசாகா குழுவில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதியை நியமிக்கக் கோரியும், முருகனை பணிமாற்றம் செய்யக் கோரியும் புகார் கூறிய பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையில் புதிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

சென்னை ஐ ஐ டி யில் கத்தி குத்து .. மாணவர்கள் மோதல்

confrontation between two chennai iit students one got stabbedtamil.samayam.com: சென்னையில் ஐஐடி-யில் மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியின் மைய நூலகம அருகேவுள்ள பகுதியில் ஹரியானாவை சேர்ந்த மாணவர்கள் கௌஷிக் மற்றும் மனோஜ் என்பவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இந்த விவாதம் சிறுது நேரத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் மனோஜ் கூர்மையான ஆயுதத்தால் கௌஷிக் வயிற்றில் குத்தி விட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

காஷ்மீரில் தாக்குதல்..40 CRPF வீரர்கள் உயிரழப்பு வீடியோ


பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்வு: மோடி கடும் கண்டனம்மாலைமலர் :ஜம்மு-காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. பலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்வு.
 ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள். விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தார்கள். வீரர்கள் சென்ற வாகனம் லடூமோடு பகுதியில் சென்றபோது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை பயங்கரவாதிகள் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரமாக மோதச் செய்தனர்.

உறவுகளை அணைத்துக்கொள்ள அனுமதிக்காத பண்பாடு எல்லாம் பண்பாடே அல்ல.

Shalin Maria Lawrence : உலக கட்டிபிடி தினம்
நான் தென் தமிழ்நாட்டில் விளிம்பு நிலை பெண்களிடையே பெண்கள் மீதான வன்முறை குறித்து பயிற்சி அளிக்கும்போது கடைசியாக பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டி பிடிக்கும் செஷன் ஒன்று வைப்பேன்.அது மிகவும் இறுக்கமாக இருக்கும் அவர்களை தளர்விப்பதற்காக செய்யும் பயிற்சி.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல பெண்கள் கட்டிபிடிக்க அவ்வளவு கூச்ச படுவார்கள்.
"என்னமா உங்க வீட்ல யாரையும் கட்டி பிடிச்சததில்லயா?"
இல்ல மேடம்.
"உங்க புருஷருங்களாவது?"
இல்ல மேடம்.
பிறகு இது தொடர்பாக ஒரு சிறு ஆய்வு செய்யும்போது கிட்டிய தகவல்.அதிர்ச்சி.
கணவர்களில் பெரும்பாலானோர் மனைவிகளை கட்டி பிடிப்பதுமில்லை ,முத்தம் கொடுப்பதுமில்லை.
கலவி நேரத்தில்? அப்பொழுதும் இல்லை.
வெறும் கலவி மட்டுமே.என்கிற பதில் வந்தது.
இந்த நாட்டின் பெண்கள் எவ்வளவு சபிக்கப்பட்டவர்கள்.
அறிவியல் சொல்லுகிறது.கட்டி பிடிக்கும்போது மன அழுத்தம் குறைகிறதாம் ,தசை இறுக்கம் குறைந்து தளர்வடைகிரதாம் ,தன்னம்பிக்கை பிறக்குமாம் ,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம் ,மனம் சந்தோஷமாக இருக்குமாம்.
ஆக மேல் சொன்ன அத்தனை நல்ல விஷயத்தில் இருந்து இந்த ஆண்கள் பெண்களை மட்டுமல்ல தங்களையும் விளக்கி கொள்ளுகிறார்கள்.
மேலை நாடுகளில் கட்டி பிடித்தல் என்பது கிளர்ச்சி கிடையாது.அது அன்பை பகிர்வதற்கான மிக எளிமையான ஒரு வழிமுறை.
ஆனால் இங்கே கட்டிபிடிப்பு அசிங்கம்.

‘சாதி-மதம் அற்றவர் சான்றிதழ் பெற்றார் சினேகா .. இந்தியாவிலேயே முதல் முறையாக திருப்பத்தூர் வழக்கறிஞர் சினேகா .. சாதித்தார்

சிநேகா‘சாதி-மதம் அற்றவர்’ என்று வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெற்ற திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா ,
 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா, ‘சாதி-மதம் அற்றவர்’ என்கிற சான்றிதழை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் போராடி பெற்றிருக்கிறார். ‘‘சாதிய அமைப்பிற்கு அடையாளமாக சாதி சான்றிதழ்  இருப்பதைப் போல், சாதி-மதம் அற்றவர்களின் வாழ்விற்கு ஒரு அடையாளமாக இச்சான்று அமைந்திருப்பதாகவும், என்ன சாதி என்று சொல்வதற்கே உரிமை இருக்கும் நிலையில் சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் ’’ என்றும் பல்வேறு தரப்பிலிருந்து, அந்த வழக்கறிஞருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. vikatan.com -logeswaran.g

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்: முலாயம் சிங் பேச்சு

தினமலர் : புதுடில்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என லோக்சபாவில் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசினார்.
லோக்சபாவில் கடைசி நாளான இன்று அனைத்து கட்சி தலைவர்களும் நன்றியுரை நிகழ்த்தினர்.அப்போது, சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் பேசியதாவது: மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைத்து கட்சிகளையும், மோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். பல நல்ல பணிகளை விரைந்து செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு பேனர் வைக்கக்கூடாது - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மாலைமலர் :சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அவரது பிறந்த நாளுக்கு பேனர் வைக்க அனுமதிக்கும்படி முன்னாள் அதிமுக எம்.பி பாலகங்கா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பேனர் வைக்க அனுமதிக்க கோரிய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், அதிமுக வைக்கும் பேனருக்கு எதிராக நடவடிக்கைகள் இல்லை என்பதால் பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டனர். அத்துடன் மனுவையும் தள்ளுபடி செய்தனர்

அதிமுகவிடம் பாஜக கேட்கும் ...தென்சென்னை, கன்னியாகுமரி, கோவை, சிவகெங்கை , நெல்லை, நீலகிரி, திருச்சி

வெப்துனியா :அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ஒருபக்கம் அதிமுக பிரமுகர்கள் கூறி வந்தாலும் இன்னொரு பக்கம் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பாஜகவை கூட்டணியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் தம்பிதுரையை சமாதானப்படுத்தும் வேலையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் பாஜக ஏழு தொகுதிகள் கேட்பதாகவும் அவை தென்சென்னை, கன்னியாகுமரி, கோவை, சிவகெங்கை , நெல்லை, நீலகிரி, திருச்சி ஆகிய தொகுதிகள் என்றும் செய்திகள் கசிந்துள்ளது. இதற்கு கிட்டத்தட்ட அதிமுக சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, சரத்குமார் கட்சி, புதிய தமிழகம், ஆகிய கட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அதிமுக கூட்டணியில் பாஜகவை சேர்க்கவில்லை என்றால் அதிமுகவை தனிமைப்படுத்திவிட்டு மீதிக்கட்சிகளை வைத்து பாஜக தனிக்கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி துணை நிலை ஆளுநர் மாளிகை முன்பு தொடர்ந்து தர்ணா

புதுச்சேரி: துணை நிலை ஆளுநர் மாளிகை முன்பு  முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து தர்ணா தினந்தந்தி : முதல் அமைச்சர் நாராயணசாமி விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அதிவிரைவு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப் படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.;

அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வருகிறார் - தமிழிசை தகவல்

bjp national president amith shah vists to erode tomorrow says tamilsai soundararajantamil.samayam.com :சென்னை: கடந்த 10ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளதாக தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.;
  • பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளார்.
    • மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் தமிழகம் வருகின்றனர்.
    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோடு மாவட்டத்திற்கு வரவுள்ளதாகவும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.

    நிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?- வானிலை ஆர்வலரின் பதில்

    சென்னை, நில நடுக்கம் - tamil.thehindu.com/ சென்னைக்கு அருகில் வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? அந்தமான், வங்கக்கடல் நில நடுக்கம் உணர்த்துவது என்ன என பல்வேறு கேள்விகளுக்கான வானிலை ஆர்வலர் பதில் அளித்துள்ளார்.
    இயற்கையை கணிப்பதும், அதை வெல்வதும் மனிதகுலம் இன்றுவரை செய்ய முடியாத ஒன்று. அதற்கு சிறந்த உதாரணம் நில நடுக்கத்தைக்கூறலாம். பல் விஷயங்களை முன் கூட்டியே கணிக்கும் ஆற்றல் பெற்ற மனித விஞ்ஞான வளர்ச்சி நிலநடுக்கம் குறித்து முன் கூட்டியே கணிப்பதில் இதுவரை வெற்றிபெற முடியவில்லை.