வியாழன், 14 பிப்ரவரி, 2019

‘சாதி-மதம் அற்றவர் சான்றிதழ் பெற்றார் சினேகா .. இந்தியாவிலேயே முதல் முறையாக திருப்பத்தூர் வழக்கறிஞர் சினேகா .. சாதித்தார்

சிநேகா‘சாதி-மதம் அற்றவர்’ என்று வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெற்ற திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா ,
 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா, ‘சாதி-மதம் அற்றவர்’ என்கிற சான்றிதழை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் போராடி பெற்றிருக்கிறார். ‘‘சாதிய அமைப்பிற்கு அடையாளமாக சாதி சான்றிதழ்  இருப்பதைப் போல், சாதி-மதம் அற்றவர்களின் வாழ்விற்கு ஒரு அடையாளமாக இச்சான்று அமைந்திருப்பதாகவும், என்ன சாதி என்று சொல்வதற்கே உரிமை இருக்கும் நிலையில் சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் ’’ என்றும் பல்வேறு தரப்பிலிருந்து, அந்த வழக்கறிஞருக்குப் பாராட்டுகள் குவிகின்றன. vikatan.com -logeswaran.g

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக