வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

தனுஷுக்கு தந்தை என்று கூறி வழக்கு தொடர்ந்தவருக்கு மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு போலீஸில் மனு

tamil.thehindu.com/tamilnadu : நடிகர் தனுஷுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள முதியவர் போலீஸ் பாதுகாப்புக் கேட்டு திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் ஆர்.கதிரேசன் (70). இவர், நடிகர் தனுஷ் தனது வாரிசு என வழக்குத் தொடர்ந்தார்.இவரது வழக்கை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நேற்று திருப்புவனம் காவல் நிலையத்தில் தனக்கும், தனது மனைவிக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் அளித்தார். அந்த மனுவில் கூறி யுள் ளதாவது:
திருப்புவனம் பழையூர் காசி நகரில் உள்ள மகள் தனம் வீட்டில் ஓராண்டாக வசித்து வருகிறேன். இதற்கு முன் என் குடும்பத்துடன் மேலூரில் வசித்து வந்தேன். என் மகன் கலைச்செல்வன் என்ற தனுஷ் தற்சமயம் தனுஷ் என பெயர் மாற்றம் செய்து நடிகராக உள்ளார். அவர் 16 வயதில் பிளஸ் 1 படித்தபோது வீட்டை விட்டுச் சென்றார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவ ரை அறிந்து கொண்டோம். தற்போது திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகனாக வலம் வருகிறார். எனது மகனை மீட்டெடுக்கும் நோக்கில் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். பின்னர் மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை யின்போது போலி ஆவணங்களை தாக்கல் செய்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 6-க்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நான் திருப்புவனத்தில் வசிக்கும் வீட்டின் கதவை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் தட்டி அச்சுறுத்துகின்றனர். வயதான எங்களுக்குப் பாதுகாப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக