சனி, 16 பிப்ரவரி, 2019

குறளரசன் மதம் மாறினார் காதல் காரணம் .. வீடியோ ..ராஜேந்தரின் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு ..

குறளரசன் ஒரு இஸ்லாம் மதப்பெண்ணைக் காதலித்து வருவதாகவும் அவரை மணக்க அந்தப் பெண்ணின் பெற்றோர் விதித்த நிபந்தனைகளாலேயே இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

tamil.samayam.com :சென்னை: இயக்குநர் டி. ராஜேந்திரனின் மகனும், நடிகர் சிம்புவின் இளைய சகோதரருமான குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஆர். பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சிலம்பரசனின் சகோதரர் குறளரசன்
இஸ்லாம் மதத்தை தழுவினார். இதுதொடர்பாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். நடிகர் சிம்புவின் இளைய சகோதரர், குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதை அவரது தந்தை டி. ராஜேந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான டி.ராஜேந்திரன் இயக்கத்தில், 80-களில் வெளியான பல படங்கள் வெள்ளி விழா கண்டது. திரைப்பட இயக்கம் மட்டுமின்றி அத்துறை சார்ந்த பல தளங்களிலும் இயங்கும் பன்முகத்தன்மை கொண்டவராக டி. ராஜேந்திரன் இருந்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக