சனி, 16 பிப்ரவரி, 2019

காஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடம் ஒரு போர் நடகுமோ என்ற எண்ணம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களுக்கு மத்தியில் வெட்குண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி திவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறபப்டுகிறது.
ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க பரவலாக மக்களிடமே உருவாகி இருந்தாலும், தேசிய ஊடகங்கள் எனப்படும் பாஜக ஊடகங்கள் போர் வெறியை உருவாக்கி வருகிறது.
மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான பிரமாண்டமான இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் எப்படி சாத்தியம்?
இந்தியாவிலேயே அதி உச்ச பாதுகாப்பு வலயமைப்பு பகுதி காஷ்மீர். அதுவும் தேசிய நெடுஞ்சாலை அதி உச்ச எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புகள் நிறைந்த பகுதி, இந்த பகுதிக்குள் வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஒருவர் கொண்டு வந்து மோதுகிறார் என்றால் அது இராணுவத்தினர் தரப்பில் இருந்து உதவி இல்லாமல் இப்படி ஒரு தாக்குதலை திவீரவாதிகளால் நடத்த முடியுமா?

ரோந்து செல்லும் போது அல்ல, ராணுவ அணிவகுப்பிற்குள் புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இது நம்பும் படியாகவா இருக்கிறது. அணிவகுப்பினுள் புகுந்து தாக்கும் அளவுக்கா இந்திய இராணுவம் இருக்கிறது?
#
சுமார் 300 கிலோ வெடிகுண்டுகளுடன் ஒருவர் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து தாக்குகிறார் என்றால் நமது பாதுகாப்புத்துறை எப்படி மக்களை பாதுகாக்க முடியும்?
ராணுவ வீரர்கள் பல வாகனங்களில் வரும் போது மிகச்சரியாக உட்புகுந்து தாக்குதல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் அந்த வாகனம் அதுவரை காத்திருந்ததா?
#
காஷ்மீர் மாநில உளவுத்துறை இப்படி ஒரு தாக்குதலுக்கான திட்டம் இருபப்தாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகவும் , ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய உள்துறையும் , உளவுத்துறையும் பொருட்படுத்தவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
#
வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தவர் அடில் அகமது என்றும் அவர் புல்வாமா மாவட்டம் காம்க்கிபோரா பகுதியைச்ச் சேர்ந்தவர் என்றும் தாக்குதல் நடந்த சில மணி நேரங்கள் செய்திகள் வெளியானது எப்படி?
இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா என்ற அய்யம் மக்களிடம் எழுந்திருக்கிறது!
நன்றி : Arul Ezhilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக