வியாழன், 14 பிப்ரவரி, 2019

சென்னை ஐ ஐ டி யில் கத்தி குத்து .. மாணவர்கள் மோதல்

confrontation between two chennai iit students one got stabbedtamil.samayam.com: சென்னையில் ஐஐடி-யில் மாணவர்கள் இருவர் மோதிக் கொண்டதில் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி தொழில்நுட்பக் கல்லூரியின் மைய நூலகம அருகேவுள்ள பகுதியில் ஹரியானாவை சேர்ந்த மாணவர்கள் கௌஷிக் மற்றும் மனோஜ் என்பவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இந்த விவாதம் சிறுது நேரத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் மனோஜ் கூர்மையான ஆயுதத்தால் கௌஷிக் வயிற்றில் குத்தி விட்டு சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டார்.


இதனால் வலி ஏற்பட்டு, மாணவர் கௌஷிக் ரத்த வெள்ளத்தில் அப்படியே சாய்ந்து மயங்கினார். உடனே அருகிலிருந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக