வியாழன், 14 பிப்ரவரி, 2019

அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வருகிறார் - தமிழிசை தகவல்

bjp national president amith shah vists to erode tomorrow says tamilsai soundararajantamil.samayam.com :சென்னை: கடந்த 10ம் தேதி பிரதமர் மோடியின் திருப்பூர் வருகையை தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளதாக தமிழிசை சௌந்திரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.;
  • பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளார்.
    • மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் தமிழகம் வருகின்றனர்.
    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோடு மாவட்டத்திற்கு வரவுள்ளதாகவும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரும் தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கு வருகை தரவுள்ளதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.


    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு தேசிய தலைவர்கள் தொடர்ந்து சென்று வருகிறார். அந்த வகையில் கடந்த 10ம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வந்திருந்தார். அப்போது புதிய மெட்ரோ ரயில் வழித்தடம் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பிறகு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

    அதை தொடர்ந்து தற்போது பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஈரோட்டிற்கு வரவுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நாளை ஈரோடு வரும் அமித் ஷா, அங்கு நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக கூறினார்.

    மேலும் பேசிய அவர், அமித் ஷாவை தொடர்ந்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேலூருக்கும், மத்திய இணை அமைச்சர் ஸ்மிருதி இரானி திருவண்ணாமலைக்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் தமிழக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய தமிழிசை, பாஜக கூட்டணி குறித்து பொறுப்பாளர் முரளிதர ராவ் தான் பேச வேண்டும் என்றார். பாஜக தலைவர்கள் வருகை மக்களவை தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவியாக இருக்கும் எனவும் தமிழிசை தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக