சசிகலா சபதம் :எம்மை கதற வைத்தவர்களை 11 நாளில் பதற வைப்பேன்!

Prabha - Oneindia Tamil  தஞ்சாவூர்: சசிகலாவின் பரோல் விடுப்பு முடிவதற்கு இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. நடராஜன் உடல் அடக்கம் முடிந்த அன்று இரவில் இருந்தே பஞ்சாயத்துகள் தொடங்கிவிட்டன என்கின்றனர் குடும்ப கோஷ்டிகள். ' அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கும்விதமாக அடுத்து வரும் நாட்களை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் சசிகலா' என்கின்றனர் அவர்கள். நடராஜனின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 20-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உடல் அடக்கம் முடிந்த பிறகு, அன்று இரவு மட்டும் அமைதியாக இருந்தார். ஆனால் அடுத்த நாள் காலை முதலே பஞ்சாயத்துகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. நடராஜன் வாங்கிப் போட்ட சொத்துக்கள், அவைகளை முறைப்படி மாற்றவது உள்பட சொத்து விவகாரம் குறித்து தீவிர விவாதம் நடந்து வருகிறது. மறுபுறம், ஆறுதல் சொல்ல வருகிறவர்களிடம் சோகமான முகத்தோடு பேசி வருகிறார் சசிகலா. தமிழ் ஆர்வலர்களின் வருகைதான் அதிகமாக இருக்கின்றன. 'அண்ணனைப் போல ஒரு போராளியைப் பார்க்க முடியாது. தமிழ்த் தேசியத்துக்காக அவர் செய்த பணிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. 

பிரான்ஸ் போலீஸ் காவலரின் தியாகம் ..... பிணை கைதிக்கு மாற்றாக தன்னை ஈய்தார்

BBC :பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிணைக்கைதிக்கு பதிலாக உள்ளே சென்ற போலீஸ் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த அர்னாட் பெல்ட்ராம் "ஒரு சிறந்த நபர்" என்றும் "விதிவிலக்கான தைரியத்தை" வெளிக்காட்டியதாகவும் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோங் பாராட்டியுள்ளார்.
தெற்கு பிரான்சில் மூன்று பேரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிதாரியை கொன்று அங்கு நிலவிய மோசமான சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு இந்த போலீஸ் அதிகாரி காரணமாக திகழ்ந்தார்.
பெல்ட்ராமின் தியாகம் குறித்து வானொலி நேர்காணல் ஒன்றில் பேசிய அவரது சகோதரர், "அவர் வழிப்போக்கர்களுக்காக தனது உயிரையே கொடுத்துள்ளார். தான் உயிர் பிழைப்பதற்குரிய வாய்ப்பே கிடையாது என்பது குறித்து அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கக் கூடும். இந்த செயல் அவரை உயர்ந்த மனிதராக ஆக்காவிட்டால் வேறென்ன ஆக்க முடியும்?" என்று கூறியுள்ளார்.

ஜெ. இட்லி, பொங்கல் சாப்பிட்டது உண்மைதான் கிருஷ்ணப்ரியாவின் வாக்குமூலம்!

Gajalakshmi  Oneindia Tamil  சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலன் தேறிய பின்னர் ஜெயலலிதா இட்லி, பொங்கல், தக்காளி சாதம், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டார் என்று கிருஷ்ணப்ரியா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், வீட்டுப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இதே போன்று சசிகலாவின் அண்ணன் மகளான கிருஷ்ணப்ரியாவும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். கிருஷ்ணப்ரியா போயஸ்கார்டனிலேயே வளர்ந்தவர் என்ற முறையிலும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சசிகலாவிற்கு உதவியாக அவ்வபோது சென்று வந்தவர் என்ற முறையிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
 அடுத்த நாளே கண்விழித்த ஜெ. அடுத்த நாளே கண்விழித்த ஜெ. கிருஷ்ணபிரியா ஆறுமுகசாமி கமிஷன் முன்பு அளித்த வாக்குமூலம் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வாக்குமூலத்தில் கிருஷ்ணப்ரியா கூறியுள்ளதாவது :செப்டம்பர் 22ம் தேதி இரவு ஜெயலலிதா மயங்கிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளித்த சிகிச்சையால் அடுத்த நாளே கண்விழித்தவர், தான் எங்கிருக்கிறேன் என்று கேட்டதாக என்னுடைய அம்மா இளவரசி கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம்

ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராகக் கடையடைப்புப் போராட்டம்!மின்னம்பலம்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் என அனைத்தையும் நஞ்சாக மாற்றி, மனித உயிர்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது; எனவே அந்த ஆலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே குரல் எழுப்பப்பட்டுவருகிறது.
சமீபத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டுவரும் தாமிர உருக்காலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுர பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 24) ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ! மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி!

முதல்வர் தினமலர் :சித்தராமையா, கர்நாடக முதல்வர், மத்திய அரசு, தென் மாநிலங்கள், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய நிதி ஆணையல், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் , புதுடில்லி: மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011ம் ஆண்டு மக்கள் தொகையைப் பின்பற்றுவதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த காலங்களில், மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள், 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசின், 15வது நிதி ஆணையம் 2011ம் ஆண்டு மக்கள் தொகையை பின்பற்றுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011ம் ஆண்டு மக்கள் தொகையைப் பின்பற்றினால் தென் மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சசிகலா புஷ்பா திருமணத்திற்கு தடை : நீதிமன்றம் தீர்ப்பு

வெப்துனியா :அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவின் திருமணத்திற்கு மதுரை குடும்ப நல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ;சசிகலாவும், ஜெயலலிதாவும் தன்னை அடித்து விட்டதாக பாராளுமன்றத்தில் புகார் பரபரப்பை ஏற்படுத்தியவர்  அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. அதனால், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின், சசிகலாவிற்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அவரின் பெயரில் விருப்ப மனு கொடுக்க வந்த அவரின் கணவரை அதிமுகவின் கடுமையாக தாக்கினர்.<அந்நிலையில், வழக்கறிஞர் ராமசாமி என்பவரை  வருகிற  26-ம் தேதி சசிகலா புஷ்பா  மணக்கப்போவதாக சமூகவலைத்தளங்கலில் அழைப்பிதழ் பரவியது.  ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எனவும் செய்திகள் வெளியானது.

அப்பல்லோ பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு - ஐசியு வில் அனுமதி

வெப்துனியா :அப்பல்லோ மருத்துவக் குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் மயக்கி விழுந்த அவருக்கு இதய அடைப்புக்கான ஆஞ்சியோ செய்யப்பட்டது. மருத்துவப் பரிசோதனை முடிந்ததை அடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோவில் முக்கிய பிரமுகர்களுக்கான வார்டில் பிரதாப் ரெட்டிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்

கால்நடைத் தீவன ஊழல் - நான்காவது வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை

மாலைமலர் :பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான
நான்காவது வழக்கில் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு இன்று 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #FodderScam #Lalu கால்நடைத் தீவன ஊழல் - நான்காவது வழக்கில் லாலுவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை பாட்னா: ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ். பீகார் முதல்வராக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சந்தையூர் . பின்னணியில் அருந்ததியினரின் 127% to 255% அளவு உள்இடஒதுக்கீட்டு....?

Adv Manoj Liyonzon : அருந்ததியினரின் 127% to 255% அளவு உள்இடஒதுக்கீட்டு
முழக்கம்
தமிழக வரலாற்றில், ஏன் இந்திய வரலாற்றிலேயே 127% அளவு இடஒதுக்கீட்டு உரிமையை கொண்ட ஒரே பட்டியல் சாதி “அருந்ததியர்” மட்டும் தான்
ஒட்டுமொத்தமுள்ள 76 பட்டியல் சாதியினருக்கும் சேர்த்து 18% இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமுள்ள பட்டியல் சமூகத்தில், அருந்ததியர் மக்கள் தொகை 13.06%
இதில் பட்டியல் சமூகத்திற்கான 18% இட ஒதுக்கீட்டில், அருந்ததியர் மக்களுக்கு 100% உள்இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற நிலையில், அது 2.35% ஆக வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் வழங்கப்பட்டதோ 3% உள்இடஒதுக்கீடு. அதாவது 127% அளவு வழங்கப்பட்டது.
காரணம் 2.35% என்று இல்லாமல் Round Off to the next 10 or 100s அடிப்படையில், 2.35%ஐ Round off ஆக 3% என்று வழங்கப்பட்டது.
அதாவது ஒட்டுமொத்த பட்டியல் சாதியினருக்குமான 18% இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 127% அளவு உள் இடஒதுக்கீட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது நியாயமானதே, ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வரவேற்கத்தக்க ஒன்று தான். இதை யாரும் எதிர்க்கவில்லை, புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை தவிர.
தற்போது உள்ள 3% (127% அளவு) உள் இடஒதுக்கீட்டு உரிமையை, 6%மாக (255% அளவு) உயர்த்த முழக்கமிடுகிறார்கள் சில அருந்ததியர் இயக்கங்களும் கட்சிகளும்.

திமுகவின் மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்க மண்டல மாநாடு இன்று துவக்கம்!.. 100 ஏக்கரில்

100 ஏக்கரில் திமுக மண்டல மாநாடு இன்று துவக்கம்!மின்னம்பலம்: மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல திமுக மாநாடு இன்று (மார்ச் 24) தொடங்கி 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லையில் பெருந்துறை விஜயமங்கலம் என்ற ஊர் அருக்கில்
தேசிய நெடுஞ்சாலையின் வலது பக்கத்தில் பயன்பாடில்லாத 500 ஏக்கர் இடத்தைத் தேர்வு செய்து 100 ஏக்கரில் மாநாட்டு விழாவும், 400 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டுப் பந்தல் அருக்கில் தலைவர்கள் ஓய்வு எடுக்கும் அளவில் குளு குளு வசதியுள்ள அறையும், தொண்டர்கள் நிர்வாகிகள் வசதிகளுக்கு ஏற்ப மெடிக்கல்

திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் மகளை கொன்ற தந்தை.. கேரளாவில் ஆணவ படுகொலை


Shyamsundar -Oneindia Tamil 
 திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் கேரளாவை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து இருக்கிறார். திருவனந்தபுரம்: திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் கேரளாவை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் காரணமாக ஆதிராவின் தந்தை ராஜன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 
ஆதிராவும், அதே பகுதியை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரும் 2 வருடமாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. ஆனால் நேற்று நாடு இரவில் ஆதிரா அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். 
 முதலில் ஆதிராவின் காதலுக்கு ராஜன் ஒப்புக்கொள்ளவில்லை. மாப்பிள்ளை ராணுவ வீரராக இருந்தாலும், தலித் என்பதால் கல்யாணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று பேசி இருக்கிறார். மாப்பிள்ளையின் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டும் கூட கொடுக்க மாட்டேன் என்று சண்டை போட்டு இருக்கிறார்.

பாஜகவின் ஆபரேஷன் திராவிடம் ... நடிகர்கள் தான் ஏவல் பேய்கள் ?

tamiloneindia - Gajalakshmi" 2019 பொதுத்தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்களில் தென் இந்தியாவை குறி வைத்து பாஜக ஆபரேஷன் திராவிடத்தை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:அப்படியானால் தமிழகத்தில் பாஜக நடத்த திட்டமிட்டுள்ள ஆபரேஷன் ராவணாவின் கதாநாயகன் நடிகர் ரஜினிதானோ என்ற சந்தேகங்களை இது எழுப்புகிறது.
வடமாநிலங்களில் காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதலபாதாளம்.
இதற்கு சான்றாக அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை சொல்லலாம். பிளவுபட்ட அதிமுக இடையே ஒரு பக்கம் போட்டியென்றால் மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான்.
தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வந்த பாஜக பிடிக்கும் என்று பார்த்தால் நாம் தமிழர் கட்சி, நோட்டா இரண்டும் பாஜகவை 5வது இடத்திற்கு தள்ளியது

சந்தையூரில் இயக்குனர் பா.ரஞ்சித், ஆதவன் தீட்சண்யா கள ஆய்வு ! ... சமரச முயற்சி ?

இயக்குனர் ப.ரஞ்சித் : படிநிலை சாதி அமைப்பில் ஒரு சாதிக்கு கீழாக ஒரு சாதி உள்ளது, என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அதை இங்கு வந்து பார்த்த பிறகு தயக்கமின்றி உறுதியாகிவிட்டது. ஆனால் இது தலித்துக்களுக்குள் நிலவுவதுதான் மிகவும் வேதனையான உள்ளது,
ஆ.நாகராசன் : சந்தையூர் சுவர் தொடர்பாக..
பார்வைக் கோளாறை சரிசெய்ய அம்பேத்கர் பெரியார் கண்ணாடியை அணியுங்கள்.
""'""""""""""""""""""""""
சந்தையூர் சுவர் தொடர்பாக.. நேற்று.. 19.3.2018 தோழர் கு.இராமகிருட்டிணன்,
தோழர் ஆதவன்தீட்சண்யா, இயக்குனர் ப.ரஞ்சித் ஆகியோர்கள், சந்தையூர் அருந்ததியர் மற்றும் பறையர் சமூகத்தவரை தனித்தனியாக சந்தித்து கருத்துக்கள் கேட்டுள்ளனர். கருத்து சேகரிப்பில் பறையர் சமூக மக்கள் சுவரை இடிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனராம். இதே போன்று சுவரை இடித்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அருந்ததியர் மக்களும் உறுதியாக உள்ளனராம். கு.இராமகிருட்டிணன் சந்தையூருக்கு மிகவும் காலம் தாழ்த்தி வந்ததற்கு முதலில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார், மேலும் அவர் பேசிய உரையின் சாரம், படிநிலை சாதி அமைப்பில், அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக அழுத்தப்பட்டு கிடக்கும் அருந்ததியர் பக்கம் நியாயம் உள்ளது. இதில் அருந்ததியர்களை அழுத்திக் கொண்டிருக்கும், மூட்டை எதுவாக இருந்தாலும் அதை தூக்கி எறிய வேண்டியது, மட்டும்தான் உண்மையான சமூக நீதியாக இருக்கமுடியும், ஆகவே சுவரை இடிப்பதே சரியானது என்றார்.

திருமுருகன் காந்தி :அதிமுக பாஜகவிற்கு கைக்கூலி

Thirumurugan Gandhi : அப்பாவி தமிழர்களைக் கொன்றும், 10664 தமிழர்களை
சிறையிலிட்டும் தமிழர்களை கொடுமைப்படுத்தும் சந்திரபாபு நாயுடு ஆட்சிபுரியும் ஆந்திரா கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க முடியாது..."
என்று சொல்லும் அதிமுகவின் தம்பித்துரை அவர்கள், ஆந்திரவில் நடைபெறும் படுகொலைகளை ஆந்திர அரசு அல்லாது சுதந்திரமாக , நேர்மையாக விசாரிக்க வேண்டுமென்று தேசிய மனித உரிமைக் கமிசன் சொன்னது பற்றியோ.
இப்படுகொலைகளின் குற்றவாளியான சந்திரபாபு நாயுடுவின் வணிக நிறுவனங்கள் தங்குதடையின்றி தமிழகத்தில் இயங்குவது பற்றியோ இதுவரை பேசி இருக்கிறாரா??..
பாராளுமன்ற துணை சபாநாயகாரான திரு.தம்பித்துரை ஆந்திர அரசு செய்யும் இப்படுகொலைகள், சட்டவிரோத சிறை, சித்திரவதைகள் குறித்து ஏதேனும் பாராளுமன்றத்தில் பேசி, தம் கட்சி உறுப்பினர்களைக் கொண்டு முடக்கி இருக்கிறாரா?...
20 தமிழர்களை படுகொலை செய்தபோது அக்குடும்பங்கள் ஒன்றைகூட நேரில் சந்தித்துப் பேசி ஆறுதல் கூற ஒரு அமைச்சரையும் அதிமுக அரசு அனுப்பவும் இல்லை, இது குறித்த சுதந்திரமான விசாரணை இன்று வரை கோரவுமில்லை..

நீரவ் மோடி சொத்துக்களை பறிமுதல் செய்த விவசாயிகள் !

வினவு :மக்கள் பணத்தை ஏப்பம் விட்ட பண முதலைகளை வெளிநாடுகளுக்கு தப்பிக்கவிடுகிறது மத்திய அரசு. அவர்கள் வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்கின்றனர். மல்லையாகள் மோடிகளிடம் எப்படி கடன் வசூலிக்க வேண்டும் என பாடம் கற்று தருகின்றனர் மகாராஷ்டிர விவசாயிகள்.
ந்தியாவைச் சேர்ந்த சுமார் 31 கார்ப்பரேட் முதலாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று விட்டதாக கடந்த 14 -ம் தேதி (மார்ச் 2018) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது அறிவித்துள்ளார், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அக்பர்.
இவர்கள் அனைவரும் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடன்வாங்கி விட்டு பட்டை நாமம் சாற்றியவர்கள். சுமார் 400 தனியார் நிறுவனங்கள் வங்கிகளிடம் கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் (Wilful Defaulters) டிமிக்கி கொடுத்து வருவதாக அரசு அடையாளம் கண்டுள்ளதாகவும், சுமார் 91 கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கமல் – ரஜினி வருகை புது வசந்தமா ? புஸ்வாணமா ? மதுரையில் நாளை கூட்டம்

கமல் – ரஜினி அரசியல் வருகை : புதுவசந்தமா ? புஸ்வாணமா ?
அரங்கக் கூட்டம் நாள் : 24.03.2018 சனிக்கிழமை மாலை 5:30 மணி. இடம் : மூட்டா அரங்கம், காக்கா தோப்பு தெரு,< சென்னை சில்க்ஸ் அருகில், மதுரை – 1. தலைமை :< பேராசிரியர் அ. சீனிவாசன், தலைவர், ம.உ.பா. மையம், மதுரை.
சிறப்புரை :< பேராசிரியர் மு. ராமசாமி, மேளாண் தலைவர், நாடகத்துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சை.நன்றியுரை : திரு. மு. சங்கையா, பொருளாளர், ம.உ.பா. மையம், மதுரை.அனைவரும் வருக!
தகவல் :மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.<

ஜெயலலிதா யானை ருக்கு திடீர் மரணம் .. தானமாக வழங்கிய அண்ணாமலையார் கோயில்

tamilthehindu :முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 23 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக வழங்கிய, திருவண்ணாமலை கோயில் யானை ருக்கு உயிரிழந்தது. 30 வயதா கும் ருக்கு கோயிலின் அனைத்து உற்சவங்களிலும் முக்கிய பங்காற்றியது.
நேற்று முன்தினம் மாலை கோயிலுக்குள் சுற்றித் திரிந்த நாய்கள் துரத்தியதில், மிரண்டுபோன ருக்கு அங்குமிங்கும் ஓடி இரும்புத் தடுப்புகள் மீது முட்டி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், அதன் புருவத்திலும், இடது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், கால்நடை மருத்துவர் கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், யானை ருக்கு நள்ளிரவு 12.30 மணியளவில் உயிரிழந்தது. ருக்கு இறந்ததை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

ஆபரேஷன் திராவிடநாடு ...கட்சிகளை உடைக்க ரூ 4800 கோடி.. பாஜகவின் சதி திட்டம் தெலுங்கு நடிகர் சிவாஜி ,,, Operation Dravida Secrets

தீக்கதிர் :தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் பாஜக காலூன்ற புதிய சதி திட்டத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. அதற்கு ரூ 4800 கோடியை ஒதுக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சமூக ஊடகங்களில் எப்படியெல்லாம் இந்த திட்டம் பாஜகவால் நிறைவேற்றப்பட்டு வருகிறது என எழுதப்பட்டு வந்தது. அதன் படி பல்வேறு நிகழ்வுகளும் கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அது உண்மைதான் என்று முன்னாள் பாஜக ஆதரவாளரும், நடிகருமான ஆந்திராவை சேர்ந்த சிவாஜி கூறியுள்ளார்அதன் செயல்திட்டம் எவ்வாறெல்லாம் இருக்கிறது என்பது பாஜக பெயரை குறிப்பிடாமல் அதன் செயல்திட்டங்களையும் விளக்கியுள்ளார். இது தென்மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாஜகவின் குறுக்கு புத்தியையும் மக்களிடம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

58 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: பாஜக- 19; காங்.- 10; திரிணாமுல்-4; பிஜேடி-3; டிஆர்எஸ்-3

: Mathi - Oneindia Tamil டெல்லி: 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ராஜ்யசபாவில் ஆளும் பாஜகவுக்கு 58 எம்.பிக்கள்தான். ஆனால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ளன. ராஜ்யசபாவில் தனிப் பெரும்பான்மைக்கு 126 எம்.பிக்கள் தேவை. இந்த நிலையில் 16 மாநிலங்களில் 58 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
அதிகபட்சமாக உ.பியில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6, மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர். எஞ்சிய 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில்தான் இந்த 25 எம்.பி. பதவி இடங்களுக்கான போட்டி நிலவியது.
 58 இடங்களுக்கான தேர்தல்களில் பாஜக 19; 
காங்கிரஸ் 10; திரிணாமுல் காங்கிரஸ் 4; பிஜூ ஜனதா தளம் 3; தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 3 இடங்களிலும் வென்றுள்ளன

வெள்ளி, 23 மார்ச், 2018

கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்ற விடுப்பு வழங்கி உள்ளது !

கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன்!மின்னம்பலம் :ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி அன்னிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத்தருவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை டெல்லி அழைத்துச் சென்ற சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 3 முறை அவரை காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
கடந்த 12ஆம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தியை மார்ச் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி நீதிபதி சுனில் ராணா உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லி திகார் சிறையில் கார்த்தி அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடவேண்டுமென்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆன்லைனில் ஸ்டாலின்... ஆன் தி ஸ்பாட்டில் உதயா!

டிஜிட்டல் திண்ணை:  ஆன்லைனில் ஸ்டாலின்... ஆன் தி ஸ்பாட்டில் உதயா!
minnambalam :“திருவிழாவுக்கு தயாராகிவிட்டது திமுக. எல்லா சாலைகளும் ரோம் நோக்கி என்று சொல்வதுபோல திமுகவினருக்கு இன்று எல்லா சாலைகளுமே ஈரோட்டை நோக்கியே இருக்கின்றன. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது குடும்ப சகிதமாகக் காலையிலேயே விமானத்தில் கோவைக்கு வந்துவிட்டார். செல்வி, செல்வம், தயாநிதி மாறன் என இன்னொரு குரூப் அடுத்த விமானத்தில் கோவை வந்து சேர்ந்தார்கள். கருணாநிதி குடும்பத்தார் எல்லோருக்குமே விமான நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும் வழியில் உள்ள லீ மெரீடியன் ஹோட்டலில்தான் ரூம் போடப்பட்டிருக்கிறது.

BBC :பிரான்ஸ் மாலில் பிணைக்கைதிகளாக மக்கள் பிடித்துவைப்பு - இருவர் பலி

பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் பொதுமக்கள் பலரை பிணைக் கைதிகளா வைத்துள்ளார்.> இதில் இருவர் இறந்துள்ளதாக நம்பப்படுகிறது.
அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி நபரொருவர் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கார்கசோன் என்ற பகுதிக்கு அருகிலுள்ள அந்த பல்பொருள் அங்காடிக்கு சிறப்பு போலீஸ் படைகள் விரைந்துள்ளன.< துப்பாக்கியை வைத்துள்ளவர் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் ஃபிரான்சிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஜிகாதிய துப்பாக்கித்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த சூழ்நிலை "தீவிரமானது" என்று அந்நாட்டின் பிரதமர் எய்துவார் பிலிப் தெரிவித்துள்ளார்.

2 முன்னாள் புலிகளுக்கு மரண தண்டனை ! நீதிபதி இளஞ்செழியன் ..கொள்ளை கொலை... ஒரு இராணுவ கோப்ரல் உட்பட ...

வீரகேசரி :கொலை, கொள்ளை உட்பட 5 குற்றங்களை புரிந்த முன்னாள் விடுதலைப்புலி
உறுப்பினர்கள் இருவர் மற்றும் இராணுவ கோப்ரல் ஆகியோரை குற்றவாளிகளாக இனம்கண்ட யாழ் மாவட்ட நீதிபதி மா. இளஞ்செழியன் மூவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
; கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி சங்கானை முருகமூர்த்தி ஆலய குருக்களின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ரி.56 ரக துப்பாக்கியால் குருக்களை சுட்டுக்கொலை செய்தமை, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்தமை குருக்களின் மகன்மார் இருவரையும் சுட்டு படுகாயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை புரிந்த இரு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் இராணுவ கோப்ரல்  ஆகிய மூவருக்கு  எதிராகவும் சட்டமா அதிபரால் யாழ்.மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் யாழ். மேல்நீதிமன்றில் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிரான நம்பிகை இல்லா தீர்மானதிற்கு ஆதரவு

congress_bjpதினமணி :புது தில்லி: மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மக்களவையில் காங்கிரஸ் அனுமதி கோரியுள்ளது.
காங்கிரஸ் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவையில் வரும் 27ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவை செயலருக்கு மனு அளித்துள்ளார்.
ஏற்கனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள், மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரியிருக்கும் நிலையில், தற்போது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதிகோரியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

20 ஆம் ஆத்மி எம்எல்ஏ தகுதி நீக்கம் செல்லாது: டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தினமலர் :டில்லியில் 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என உத்தரவிட்டுள்ள டில்லி ஐகோர்ட், இது குறித்து மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஒத்திவைப்பு ஆதாயம் தரும் பதவிகளை வகித்ததால் டில்லி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜனாதிபதிக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்ததை அடுத்து 20 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தேர்தல் கமிஷனின் தகுதிநீக்க பரிந்துரையை எதிர்த்து ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 20 பேரும் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் வாதம் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் விசாரணை இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டில்லி ஐகோர்ட், தகுதி நீக்கம் செல்லப்பட்டது செல்லாது. தகுதி நீக்கம் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், எம்எல்ஏக்கள் இரட்டை பதவியில் வகிப்பது மறுப்பதற்கில்லை எனவும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த கெஜ்ரிவால், ‛‛நீதி வென்றது'' என்றார்.

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணக் கொள்ளை தொடர்கிறது . காற்றில் பறக்க விடப்பட்ட அரசு உத்தரவு

tamilthehndu :தமிழக அரசின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டு, சென்னை திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணக் கொள்ளை இன்னும் தொடர்கிறது.
‘தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்; அதிக இருக்கைகள் உள்ள திரையரங்குகளில், இருக்கைகளைக் குறைக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். ஆனால், சென்னையில் உள்ள திரையரங்குகள் மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை. மேற்கண்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி, கடந்த 20 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளித்தனர். இதனால், நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்ரமணியம், அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குரங்கணி காட்டுத்தீ உயிரிழந்தோர் 20 ஆக அதிகரிப்பு

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்புமாலைமலர் : தேனி மாவட்டம் குரங்கணி காட்டுதீ விபத்தில் சிக்கி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாய் வசுமதி, நித்ய நிக்ருதி ஆகிய இருவர் இன்று உயிரிழந்தனர். 
தேனீ மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு மதுரை: தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மறுநாள் மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அணுவித்யா சிகிச்சை பலனின்றி கடந்த 15-ம் தேதி பரிதாபமாக மரணமடைந்தனர்.

தமிழக போலீஸ் அதிகாரிகளின் வீட்டு ஆர்டர்லியாக போலீஸ் காவலர்கள் ....

Shankar A :. கடலூர் மாவட்ட
எஸ்பி.சி.விஜயக்குமார் இல்லத்தில் 9 ;
tஎஸ்பி.விஜயக்குமா
சுனில் குமார் சிங்
ஆயுதப்படை காவலர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். தோட்ட வேலை, சமையல், ஓட்டுநர் உட்பட. நேற்று, ஆயுதப்படை காவலர்களை, ஆயுதப் படையில் சென்று ரிப்போர்ட் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். உயர்
அதிகாரிகளின் உத்தரவு ஏதுமின்றி, தானாகவே இந்த முடிவை எடுத்த எஸ்பி.விஜயக்குமாருக்கு வாழ்த்துக்கள்.
பொருளாதார குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ள சுனில் குமார் சிங் ஐபிஎஸ் வீட்டில் வேலை பார்ப்பவர்கள்
சமையல்
1) இருதய மணாளன்
2) குப்புசாமி
3) ஆரோக்கிய ராஜ்

மாணவரின் ஆடையைக் களையச் சொல்லித் துன்புறுத்தல்!

மாணவரின் ஆடையைக் களையச்  சொல்லித் துன்புறுத்தல்!மின்னம்பலம்: நாகர்கோவிலில் மாணவரின் ஆடையை களையச் சொல்லி துன்புறுத்திய பள்ளி நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வடசேரியில் எஸ்எம்ஆர்வி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ப்ளஸ் 2 தேர்வெழுதிய மாணவர் ஒருவரை, பள்ளியின் நிர்வாகி ஒருவர், ஆடைகளைக் களையச் சொல்லி அடித்து மிரட்டிய காட்சிகள் வாட்ஸ்அப்பில் வெளியாகியது.
பள்ளி நிர்வாகி ரவுடியைப் போல மாணவரை மிரட்டி, மாணவரின் சட்டையைக் கழற்றி முட்டிபோட்டி நிற்கவைத்து தண்டனை வழங்கியுள்ளார். ஆனால், எதற்காக மாணவருக்குத் தண்டனை வழங்கினார் என்பது தெரியவில்லை.

ஸ்டாலின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஆணையரிடம் புகார்

மு.க.ஸ்டாலின் போலி அக்கவுண்ட், படம்: திமுக
tamiltehindu :தனது ட்விட்டர் போலவே போலியாக உருவாக்கி விஷமக் கருத்துகளைப் பதிவு செய்து உலவ விட்ட நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்குச் செல்பவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம், அவர்கள் வாக்கு திமுகவுக்கு தேவை இல்லை என ஸ்டாலின் ட்விட்டர் பக்கம் போன்றே வடிவமைத்தும், அதில் கருத்துப் பதிவு செய்தும், தனியார் தொலைக்காட்சி ஒன்று ஸ்டாலின் அறிவிப்பாக இதைக் கூறுவது போல் போட்டோஷாப்பில் தயார் செய்து வாட்ஸ் அப் வலைத்தளம், முகநூலில் சிலவிஷமிகள் பரவ விட்டிருந்தனர்.
இது குறித்து பலரும் அதிர்ச்சியடைந்து ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் சென்று பார்த்தபோது அப்படி அவர் பதிவுசெய்யவே இல்லை எனத் தெரியவந்தது.

வினய் குமார் சர்மா...ரூ.6,000 கோடி மோசடி அம்பலம்... ஹிமாச்சல் பிரேதேச தொழிலதிபர்

Nahan, March 22: CID sleuths have arrested a director of Paonta Sahib-based firm Indian Technomac Company Limited in a nearly Rs 6000 crore fraud case.
சிக்கினார் அடுத்த தொழிலதிபர் ரூ.6,000 கோடி மோசடி அம்பலம்
தினமலர்.:ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜெகத்பூர் கிராமத்தில், 'இந்தியன் டெக்னோமேக்' என்ற நிறுவனத்தை, வினய் குமார் சர்மா என்பவர் நடத்தி வந்தார். இயக்குநர் பொறுப்பில் இருக்கிறார்.
; இவர், தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிக்கும் பணிக்காக, பல்வேறு வங்கிகளில், 2,167 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த தொகையை அவர் திரும்ப செலுத்தவில்லை. நிறுவன ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வில்லை; அவர்களின் வைப்பு நிதியில் பல்வேறு மோசடிகள் செய்திருப்பது தெரிந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன், அவரது நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, வினய் குமார், 2,175 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. அவரது நிறுவனம், 750 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி வைத்து உள்ளது.

கர்நாடகாவில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மதச்சார்பற்ற ஜனதா தளம்?

Mathi - Oneindia Tamil பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸின் வாக்குகளை பிரிக்க பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக மதச்சார்பற்ற ஜனதா தளம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் கடைசியிலும் மே முதல் வாரத்திலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸும் போராடி வருகின்றன. கர்நாடகத்தை பொருத்தவரை ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளில் பெரும்பான்மை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு செல்லும். பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த லிங்காயத்துகள் வாக்குகளை 'தனி மத அங்கீகாரத்தின்' பெயரால் காங்கிரஸ் பிரித்துவிட்டது. 
பாஜகவின் வியூகம் பாஜகவின் வியூகம் இந்த நிலையில் சிறுபான்மையினர், தலித்துகள் வாக்குகள் அப்படியே கொத்தாக காங்கிரஸுக்கு சென்றுவிடக் கூடாது என்பதில் பாஜக கவனமாக இருக்கிறது. லிங்காயத்து வாக்குகள் பிரியும் நிலையில் ஒக்கலிகா சமூகத்தின் வாக்குகளை மடை மாற்ற அதன் மடாதிபதிகளை பாஜக சந்தித்து பேசி வருகிறது. காங். வாக்குகளை பிரிக்க... காங். வாக்குகளை பிரிக்க... அத்துடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் 3-வது அணியை அமைத்துள்ளது. 

வியாழன், 22 மார்ச், 2018

தமிழக cambridge analytica ? பொய்யை பரப்புவதையே முழுநேர பணியாக கொண்டு....


Venkat Ramanujam : இல்லாததை இருக்கு என்றும் .,இருப்பதை இல்லாத மாதிரி செய்யும் Cambridge Analytica போன்ற மாயை தரும் spinning நிறுவனங்கள் தமிழ் நாட்டிலும் உண்டா..
ஒன்றா ரெண்டா நிறைவே உள்ளது ..சில சம்பிள் மட்டும் ..
1. நிரந்திரம் - Sankara Mutt - Kanchi
2. தற்காலிகம் - Purohit - Rajbahavan , Chennai
3. கிழக்கு பதிப்பகம் C/o Badri Seshadri
4. புதிய தமிழகம் C/o Dr K Krishnasamy
5. தினமலர் C/o Gopalji
6. குமுதம் C./o Kumudam Varadarajan
7. விகடன் C/o many ..
8. சாதிரீதியான அமைப்புகள்
9.மதரீதியான அமைப்புகள் ( Muslims / Christian/ Hindus )
10 Rangaraj Pandey , Sumanth Raman #சீமான் , etc.,

வளர்ச்சிக்காக மாற்றம் என்ற பெயரிலே தான் அரம்பிப்பார்கள் .,அது கடைசியில் அவர்கள் வளர்ச்சியில் போய் நிற்க்கும் ..
மொத்ததில் தாங்கள் சொல்வதை கேள்வி கேட்பதை அறவே விரும்பாதவர்களை கூர்ந்து கவனியுங்கள் ..
சூட்சமம் புரியும் .. இருள் விலகும் ..ஓளி பரவம்..

திராவிட மொழி தோற்றம் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது, அது 6000-6500 ஆண்டுகளுக்கு முன்பாகவும் இருக்க வாய்ப்பு?


Aazhi Senthil Nathan : திராவிட மொழிக்குடும்பத்தின் தோற்றம் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது, அது 6000-6500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும்கூட இருக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
A Bayesian phylogenetic study of the Dravidian language family என்கிற தலைப்பில், Vishnupriya Kolipakam, Fiona M. Jordan, Michael Dunn, Simon J. Greenhill, Remco Bouckaert, Russell D. Gray, Annemarie Verkerk ஆகிய ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்று நேற்று http://rsos.royalsocietypublishing.org/content/5/3/171504 இல் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை பற்றி நேற்றே பல செய்திகள் வந்துள்ளன. (கூடுதலாக நீங்கள் தேட உதவும் என்பதால் கட்டுரை, கட்டுரையாளர்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறேன். மொழியியலாளர்கள் யாரேனும் இக்கட்டுரையை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும்).
தமிழின் தொன்மை, திராவிட மொழிகளின் தோற்றம் குறித்த பல ஆய்வுகள் நீண்ட காலமாகவே மொழியியல், அகழ்வாய்வுகள் சார்ந்தே இருந்தன. பல கருத்துகள் தொன்மங்கள் என்கிற நிலையிலிருந்து மேம்படாமலிருந்தன. ஆனால் அண்மைக்காலத்தில் மரபணு ஆய்வுகளும் மனிதப்புலப்பெயர்வு தொடர்பான ஆய்வுகளும் தென்னிந்திய நிலப்பகுதியில் வாழ்ந்த மூதாதையர் குறித்து பல புதிய வெளிச்சங்களைக் காட்டிவருகின்றன.

குஜராத்தியர்கள்தான் வங்கி மோசடிகளில் ஈடுபடுகிறார்கள்.. ப.சிதம்பரம் அதிரடி குற்றசாட்டு!

வெப்துனியா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடியால் செய்யப்பட்ட பணமோசடியின் தாக்கம் குறைவதற்கு முன்பாகவே, சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் ஜுவல்லரியின் நகைக்கடை அதிபர் ரூ.800 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 தேசிய வங்கிகளில் பணமோசடி செய்பவர்கள் வரிசையாக வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் நிலையில், ஒரு மோசடி நடப்பதற்கு முன்பாகவே அதைத் தடுக்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசும், ரிசர்வ் வங்கியும் கவனம் செலுத்துவதில்லை. இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘இந்த பணமோசடிகள் எல்லாம் ஜூவல்லரித் துறையைச் சேர்ந்தவர்களாலேயே நடக்கிறது. குறிப்பாக அவர்களெல்லாம் குஜராத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் யாரோ உதவுகிறார்கள். அந்த உதவி எப்படி, யாரால் கிடைக்கிறது என்பது பற்றிய தகவல்கள் இல்லை. இதுகுறித்து தொடர்ந்து பொதுமக்கள் அரசை நோக்கி கேள்விகளை எழுப்பவேண்டும். மிகக்கடுமையான கேள்விகளை முன்வைக்கவேண்டும்’ என தெரிவித்துள்ளா

உணவு கேட்டு வந்த மூதாட்டியை கட்டி கடலில் வீசிய இளைஞர்கள்.. குமரியில் அரங்கேறிய கொடூரம்


சமீப காலமாக ஒருவரை அடிப்பதற்கு முன்பு அந்தக் குற்றத்தை அவர் செய்திருப்பாரா என்பதை யோசிக்காமல், உடனே அவர் மீது குற்றம் சுமத்தி தண்டனைக்கு உட்படுத்தும் சம்பவம் அதிகரித்துகொண்டே செல்கிறது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் உணவு கேட்டு வந்த மூதாட்டி ஒருவரை, குழந்தையைத் திருட வந்தவர் எனக் கூறி மரத்தில் கட்டிவைத்து, பின்பு கடலில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பல் வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி, குழந்தைகளைக் கடத்துவதாகத் தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், மணக்குடியில் மூதாட்டி ஒருவர் வீடு வீடாகச் சென்று உணவு கேட்டுள்ளார். ஆனால் அவர் குழந்தைகளைத் திருடுவதற்காக வந்துள்ளார் எனக் கூறி இளைஞர்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து பிறகு கை,கால்களைக் கட்டி கடலில் வீசியுள்ளனர்.

பினராய் விஜயன் ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு! சட்டவிரோத ஆயுதப் பயிற்சி..



மின்னம்பலம்: ஆர்எஸ்எஸ், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் சட்டவிரோத ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரளாவில் உள்ள கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் சில அமைப்புகள் சட்டவிரோத ஆயுதப் பயிற்சி எடுத்துவருவதாகவும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் காங்கிரஸ் உறுப்பினர் வி.டி.சதீசன் கேரள சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 22) கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய பினராயி விஜயன், “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, சோசலிஸ்ட் டெமாகிரெட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவை ஆயுதப் பயிற்சியை சட்டவிரோதமாக வழங்கிவருகின்றன. வழிபாடு நடத்தும் இடத்தில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வழிப்பாட்டு தலங்கள், பள்ளி மைதானங்கள் மற்றும் தனியார் இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கம்புகளைக் கொண்டு பயிற்சி வழங்குகிறது. இது போன்ற செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களில் நடத்தப்படும் இத்தகைய ஆயுதப் பயிற்சிகளைத் தடை செய்வதற்கு சட்டமும் இயற்றப்படும்” என எச்சரித்தார்.

ஹெச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வெப்துனியா: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவிற்கு இன்னும் ஏன் மனநல சிகிச்சை செய்யப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஹெச்.ராஜா வன்முறை துண்டும் விதமாக எப்போதும் பேசி வருவதாக அவர் மீது சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு மனநலபாதிப்பு இருக்க வாய்ப்பிருப்பதால் அவருக்கு மனநல பரிசோதனை செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஹெச்.ராஜாவிற்கு மனநல பிரச்சனை இருந்தால் அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி அம்பத்தூர் காவல் நிலைய அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கணவர் இறப்புக்காகப் பார்க்க வேண்டாம்; போராட்டத்தை நடத்துங்கள்' - தினகரனுக்கு சசிகலா

போராட்டம்விகடன் :கே.குணசீலன் ம.அரவிந்த்: கணவர் இறந்து இருந்தாலும் பரவாயில்லை காவிரி விஷயம் என்பது டெல்டா மக்களோட வாழ்வாதார பிரச்னை. அதில் அவர்களின் ஜீவாதாரம் அடங்கியிருக்கிறது அதனால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள் என சசிகலா கூறியதாகத் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி.தினகரன், தஞ்சாவூரில் வரும் 25-ம் தேதி மாபெரும் உன்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் சசிகலா கணவர் நடராசன் உடல் நலக் குறைவால் இறந்துவிட அவரின் இறுதிச் சடங்குக்காகச் சசிகலா 15 நாள்கள் பரோலில் வந்திருக்கிறார். நேற்று நடராசன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் அறிவித்திருந்தபடி உண்ணாவிரதப் போராட்டம் நடக்குமா என ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என நேற்று இரவே தினகரன் தெரிவித்தார். பெரிய மாநாடுகள் மட்டுமே நடத்தப்படும் தஞ்சாவூர் திலகர் திடலில் உண்ணாவிரதம் நடத்துவதற்கு அனுமதி வாங்கியுள்ளனர். அந்த இடத்தில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

தினகரன் பாஜகவை எதிர்க்கவில்லை - போட்டு உடைத்த நாஞ்சில் சம்பத்

வெப்துனியா :ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பாஜகவை எதிர்த்து பேசி நான் பார்ததே இல்லை என அவரிடமிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் தலைமையாக சசிகலாவை ஏற்க மாட்டேன் என பரபரப்பு கிளப்பிய நாஞ்சில் சம்பத், அடுத்த சில நாட்களிலேயே சசிகலாவுடன் இணைந்து கொண்டார். சசிகலா சிறைக்கு சென்ற பின் தினகரனின் தீவிர ஆதரவாளராக சம்பத் மாறினார். அந்நிலையில், சமீபத்தில் தினகரன் தனது அணிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டினார். மேலும், அதிமுக கொடியில் ஜெ.வின் படத்தை பதிந்து புதிய கொடிய அறிமுகப்படுத்தினார். எனவே, அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன் எனக்கூறி அவரது அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேறினார். மேலும் இனிமேல் அரசியலில் ஈடுபடப்போவதில்லை,
இலக்கிய மேடைகளில் மட்டுமே என்னை பார்க்கலாம் என அதிரடி பேட்டி கொடுத்தார். இந்நிலையில், பிரபல வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ‘ தினகரனிடம் திராவிட சிந்தனை இல்லை. திராவிடம் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பாஜக, சங் பரிவாரங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், அதை தினகரன் நடைமுறைப் படுத்தியுள்ளார் என சந்தேகம் எழுந்துள்ளது.

புதுச்சேரியில் 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என ஐகோர்ட் உத்தரவு

புதுச்சேரியில் 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என ஐகோர்ட் உத்தரவுமாலைமலர் :புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டு, கடந்தாண்டு ஜூலை மாதம் அவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால், அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்க தடை விதித்தார்.
இதனை அடுத்து, ஆளுநரின் இந்த நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லெட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கு, ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி நியமன எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு என 3 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

சந்தையூர் அருந்ததியர் முஸ்லீம் மதம் மாற முடிவு ... விடியோ பேட்டி


பறையர் ஜாதிவெறிக்கு எதிர்கொள்ள முடியாமல் சந்தையூர் அருந்ததியர் மக்கள் முஸ்லீம் மதம் மாற முடிவு செய்து இன்று அறிவித்தனர் .
தமிழகத்தில் உள்ள அனைத்து சேரிகளில் பறையர் ஜாதிவெறியை எதிர்கொள்ள முடியாமல் அருந்ததியர் மக்கள் போராடி வருகிறார்கள் .
இவைகளை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் ஜாதி ஒழிப்பு பேசும் அமைப்புகள் இருப்பது மிகவும் வெட்கக்கேடான அவமானம் ஆகும் .
சேரில் உள்ள தீண்டாமைக்கு எதிராக போராடாமல் ஜாதி ஒழிப்பு என்பது நிறைவு ஆகாது என்பது பெரியாரிய இடதுசாரி அமைப்புகள் புரிந்துகொள்ளவேண்டும் .
சுமார் 55 நாளாக போராடிவரும் அருந்ததியர் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் தொடர்ந்து கள்ள மௌனம் இருந்து வருவது மிகப்பெரிய வரலாற்று பிழையாகும் .

ஹெச்.ராஜா :திமுக மக்களிடம் செல்வாக்கை இழந்து வருகிறது: .. மதுரையில் ரதயாத்திரையை தொடக்கி ,,,

tamilthehindu :திமுக  மக்களிடம் செல்வாக்கை இழந்து வருதாக  பாஜக தேசிய செயலாளர்
எச்.ராஜா கூறியுள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை இன்று (புதன்கிழமை) மதுரையிலிருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. இந்த ரத யாத்திரையை மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா,
”மக்களிடம் திமுக செல்வாக்கை இழந்து வருகிறது. ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும் கலவர சூழலை ஏற்படுத்தவும் திராவிடர் கழகம் முயற்சி செய்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அவரது கார் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் சங்கரமடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மு.க.முத்து ஆட்கொணர்வு மனு தள்ளுபடி ..

நக்கீரன் :சி.ஜீவா பாரதி   திமுக தலைவர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவை ஆஜர்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.< மு.க.முத்துவின் இரண்டாவது மனைவியின் மகள் என ஷீபா ராணி தொடர்ந்த ஆட்கொனார்வு மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக தந்தையை பார்க்க முடியவில்லை என்றும், முதல் மனைவியின் மகன் அறிவுநிதியின் கட்டுபாட்டில் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.டி.செல்வம், நீதிபதி என்.சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தந்தையை சந்திக்கவிடாமல் தன்னையும், தன் தாயையும் ரவுடிகளை வைத்து அருள்நிதி மிரட்டுவதாகவும், காவல்துறை தன்னை விசாரித்தபோது முறையாக கொள்ளவில்லை எனவும் ஷீபாராணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடராசன் மறைவை கண்டு கொள்ளாத அ இ அ தி மு க துரோகத்தின் உச்சம்!

தொண்டரகள் கொந்தளிப்பு 
Deva Indran மனது வலிக்கிறது. இதயம் அழுகிறது. உங்களால் உருவாக்கப்பட்ட
அரசு துரோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள். உங்களுக்கு மன வலிமை அதிகம். தாங்கிகொள்கிறீர். ஆனால் பதவிக்காக உங்கள் காலடியை கழுவியவர்கள், உங்கள் உறவினர்களின் வீடுகளில் குப்பை பொறுக்கிய இந்த துரோகிகள் அழிவது காலத்தின் கட்டாயம். அப்போது இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
 Ranjithkumar Ranjith உங்களின் மௌனம் அவர்களின் ஏழ தலை முறையை பின்தொடரும். இவன்களை பார்த்தால் சராசரி மனிதர்களை போல குணாதிசையம் ஒன்றுகூட இல்லை. பதவிக்காக ஷிப்டு முறையில் இவன்களின் மனைவிகளை டெல்லிக்கு அனுப்ப சொன்னால் அதையும் ஒரு மந்திரி தலைமையில் செயல் படுத்துவாங்க.
 SaravanakumarMuthusamy எதிர்,எதிர்நிலையில் அரசியல் செய்தவர்கள் கூட மரியாதை செய்துவிட்டார்கள்..ஆனால் ,சசிகலாவால் ஆளாக்கப்பட்டவர்கள்,அதிகாரம் பெற்றவர்கள் மரியாதைக்காக கூட இரங்கல் தெரிவிக்காமல் ,தங்களின் துரோக எண்ணத்தைக் காட்டிவிட்டார்கள்...இவர்களை ,நன்றி கெட்ட நாய் என்று சொல்லக்கூடாது...நன்றி கெட்ட பேய்கள்.... இன்னொரு டயர் நக்கி படத்தை விட்டுவிட்டீர்களே...

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான் உடல்நலக் குறைவால் மரணம்


tamiloneindia :கடைசி வெள்ளை காண்டாமிருக இனமும் இறந்தது-  நைரோபி: கென்யா விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த சூடான் எனும் வெள்ளை காண்டாமிருகம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவில் உள்ளது ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகம். இங்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் சூடான் என்ற வெள்ளை காண்டாமிருகம் வாழ்ந்து வந்தது.
சூடானில் பிறந்தது இந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம். உலகிலேயே மூன்று வெள்ளை காண்டாமிருகங்கள் தான் உள்ளன. அவற்றில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் ஆகும். சூடான் மட்டுமே ஆண். 2009ம் ஆண்டு கென்யா வந்த இந்த சூடான் மூலம் வெள்ளை காண்டாமிருகங்களை இனப்பெருக்கம் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவற்றில் பலன் ஏதும் இல்லை.

ஜெ.,கடைசி நிமிடங்கள்... ஜெய் வீர ஹனுமான் பார்த்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்தார் - சசிகலா

Mayura Akhilan-  Oneindia Tamil சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடைசியாக டிசம்பர் 4ஆம் தேதியன்று மாலை 4.20 மணியளவில் ஜெய் வீர ஹனுமான் சீரியல் பார்த்தார் அப்போது திடீரென அவர் படுக்கையில் சாய்ந்தார் என சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஆறுமுகமசாமி ஆணையத்தில் தனது வாக்குமூலத்தை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளார் சசிகலா. அதில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதிவரை நடந்த சம்பவங்களை 55 பக்கங்களில் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார். அதில் செப்டம்பர் 21ஆம் தேதி முதலே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்துள்ளது. மெட்ரோ ரயில் விழாவில் மெதுவாக நடந்து வந்தது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதுதான் அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்த அவர், 22ஆம் தேதியன்று சோர்வாக காணப்பட்டார் அவர் தலைமை செயலகம் செல்லவில்லை என்று கூறியுள்ளார் சசிகலா. சசிகலா வாக்குமூலம் சசிகலா வாக்குமூலம் செப்டம்பர் 22ஆம் தேதியன்று வீட்டிலேயே பைல் பார்த்துள்ளார். 
 
இரவு 9 மணிக்கு மேல்தான் அவருக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது பாத்ரூமில் மயங்கி விழுந்துள்ளார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோவிற்கு எடுத்து சென்றோம். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவருக்கு நினைவு திரும்பியது

ரத யாத்திரை..... இசக்கி முத்து குடும்பத்தை நினைவு இருக்கிறதா ... அதே கலெக்டர் சந்தீப் நந்தூரி ..

மின்னம்பலம் :இளங்கோவன் முத்தையா: மார்ச் 20
அன்று கேரளா வழியாக தமிழ்நாட்டின் தென்காசி - செங்கோட்டை எல்லைக்குள் நுழைந்து ராமேஸ்வரம் செல்வதாக விஸ்வஹிந்து பரிஷத் நடத்திய ரத யாத்திரைக்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்புகள் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன. அடிப்படையில் இதுபோன்ற நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்கக் கூடாது எனவும், ரத யாத்திரை மேற்கொள்ள எந்த ஓர் அமைப்புக்கும் ஜனநாயக அடிப்படையில் உரிமை உண்டு எனவும் தமிழகத்தில் சில குரல்கள் எழுந்தன.
சிறப்புக் கட்டுரை: ரத யாத்திரையும் எதிர்ப்பரசியலும்!
இந்த ரத யாத்திரையை எதிர்க்க வேண்டிய அரசியல் காரணம் என்ன என்கிற கேள்விக்கு விடை தேட வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, அடிப்படையில் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மத அடிப்படையிலான எவ்வளவோ பிரச்சினைகளுக்குப் பிறகும் இந்தியா இந்தக் கருத்தியலைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு மதங்கள் நிறைந்த இந்நாட்டில் மதச்சார்பின்மை என்கிற கருத்தியலே பூதாகரமாக வெடித்திருக்க வேண்டிய பல பிரச்சினைகள் எழாமல் போனதற்கும், மத சிறுபான்மைச் சமூகங்கள் அச்சமின்றி வாழ்வதற்குமான அடிப்படை அம்சமாகவும் இருக்கிறது.

11 பேருக்கு ஆயுள் தண்டனை! இறைச்சி விற்பனையாளர் அளிமுதீன் கொலை ...பசு பாதுகாவலர்கள்

பீம் பிரபா காந்தி : முதல் முறையாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை!
ஜார்கண்ட் நீதிமன்றத்தால் "பசு பாதுகாவலர்கள்" என்ற பெயரில் தாக்குதல் நடத்திய வழக்குகளில், நாட்டிலேயே முதல் முறையாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஜார்கண்டில் அலிமுதின் அன்சாரி என்ற இறைச்சி விற்பனையாளர் கடந்த 9 மாதங்களுக்கு முன் ஃகவ் ரக்ஷா சமிதி என்ற அமைப்பால் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் 11 பேரை குற்றவாளி என அறிவித்துள்ளது. இதனையடுத்து, 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது ஜார்க்கண்ட் விரைவு நீதிமன்றம்.
பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் வழங்கப்பட்ட முதல் தண்டனை இது.
- பீம் பிரபா காந்தி</

காவிரி .. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் மேலாகவே கர்நாடகவுக்கு தண்ணீர் கிடைக்கிறது ... தவறவிட்ட எடப்பாடி அரசு!

தமிழக தண்ணீர் அளவு tamiloneindia :சாதகங்களை பெறுவதில், கர்நாடகாவிடம், தமிழகம் தோல்வியை தழுவுகிறது- பெங்களூர்:

காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், வெளியே தெரியும் நன்மைகளை விடவும், அதிக நன்மை கர்நாடகாவுக்குத்தான் கிடைக்கிறது. 2007ம் ஆண்டு, காவிரி நடுவர்மன்றம் வழங்கிய, இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், கடந்த மாதம், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
தமிழக தண்ணீர் அளவு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தமிழகத்திற்கான நீரில் அளவை 14.75 டிஎம்சியாக குறைத்து, 177.2 டிஎம்சி என அறிவித்தது. கர்நாடகாவுக்கு இதே அளவு தண்ணீர் அதிகம் பங்கீடு செய்ய உத்தரவிடப்பட்டது.