சனி, 24 மார்ச், 2018

ஜெ. இட்லி, பொங்கல் சாப்பிட்டது உண்மைதான் கிருஷ்ணப்ரியாவின் வாக்குமூலம்!

Gajalakshmi  Oneindia Tamil  சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலன் தேறிய பின்னர் ஜெயலலிதா இட்லி, பொங்கல், தக்காளி சாதம், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை சாப்பிட்டார் என்று கிருஷ்ணப்ரியா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அலுவலகத்தில் பணியாற்றியவர்கள், வீட்டுப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. இதே போன்று சசிகலாவின் அண்ணன் மகளான கிருஷ்ணப்ரியாவும் ஆறுமுகசாமி கமிஷன் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். கிருஷ்ணப்ரியா போயஸ்கார்டனிலேயே வளர்ந்தவர் என்ற முறையிலும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சசிகலாவிற்கு உதவியாக அவ்வபோது சென்று வந்தவர் என்ற முறையிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 
 அடுத்த நாளே கண்விழித்த ஜெ. அடுத்த நாளே கண்விழித்த ஜெ. கிருஷ்ணபிரியா ஆறுமுகசாமி கமிஷன் முன்பு அளித்த வாக்குமூலம் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. வாக்குமூலத்தில் கிருஷ்ணப்ரியா கூறியுள்ளதாவது :செப்டம்பர் 22ம் தேதி இரவு ஜெயலலிதா மயங்கிய நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளித்த சிகிச்சையால் அடுத்த நாளே கண்விழித்தவர், தான் எங்கிருக்கிறேன் என்று கேட்டதாக என்னுடைய அம்மா இளவரசி கூறினார்.
வெளிநாடு செல்ல மறுத்தார் வெளிநாடு செல்ல மறுத்தார் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டவுடன், அவரை சிறந்த சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச்செல்ல அத்தை சசிகலா விரும்பினார். ஆனால், வெளிநாடு செல்வதை ஜெயலலிதா மறுத்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சுயநினைவு இல்லாமல் இருந்ததால்தான் எங்களால் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வர முடிந்தது. ஒருவேளை நினைவுடன் இருந்திருந்தால், மருத்துவமனைக்கு செல்லக்கூட அவர் அனுமதித்து இருக்கமாட்டார். சசிகலா மட்டுமே போவார் சசிகலா மட்டுமே போவார் 
 அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, சசிகலாவைத் தவிர வேறுயாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. என்னுடைய தாயார் இளவரசியும், அத்தை சசிகலாவும் ஒன்றாக 3-வது தளத்தில் தங்கி இருந்தார்கள். ஜெயலலிதா அழைக்கும் போது சசிகலா மட்டுமே தனியாகப் போவார். வேறுயாரையும் அழைத்துச் செல்லமாட்டார். 
இட்லி, பொங்கல் சாப்பிட்டார் இட்லி, பொங்கல் சாப்பிட்டார் ஜெயலலிதா சிகிச்சையின்போது உடல்நலம் தேறியபோது, இட்லி சாப்பிட்டார். உடல்நலம் தேறிவந்தபோது, இட்லி, பொங்கல், தக்காளி சாதம் ஆகியவற்றை சிறிய அளவு சாப்பிட்டார், ஐஸ்கிரீம் கூட சிறிதளவு சாப்பிட்டார். ஜெயலலிதாவுக்கு பழங்கள் மிகவும் பிடிக்கும். சிகிச்சையின் போது ஒருமுறை திராட்சை சாப்பிடுகையில் அவருக்கு இருமல் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். 
பல்ட்டி அடித்த அதிமுகவினர் பல்ட்டி அடித்த அதிமுகவினர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டார் என்று சொல்லி பின்னர் அவர் இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை என்று ஜகா வாங்கினர் அதிமுகவினர். இந்நிலையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது உண்மை தான் என்று கிருஷ்ணப்ரியா தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக