சனி, 24 மார்ச், 2018

தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ! மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி!

முதல்வர் தினமலர் :சித்தராமையா, கர்நாடக முதல்வர், மத்திய அரசு, தென் மாநிலங்கள், கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய நிதி ஆணையல், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் , புதுடில்லி: மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011ம் ஆண்டு மக்கள் தொகையைப் பின்பற்றுவதை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். கடந்த காலங்களில், மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரைகள், 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசின், 15வது நிதி ஆணையம் 2011ம் ஆண்டு மக்கள் தொகையை பின்பற்றுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வில் 2011ம் ஆண்டு மக்கள் தொகையைப் பின்பற்றினால் தென் மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு எதிராக போராட தென் மாநிலங்கள் ஒன்றிணையுமாறு பதிவிட்டுள்ள அவர், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர்களையும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினையும் டுவிட்டரில் டேக் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக