சனி, 24 மார்ச், 2018

ஜெயலலிதா யானை ருக்கு திடீர் மரணம் .. தானமாக வழங்கிய அண்ணாமலையார் கோயில்

tamilthehindu :முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 23 ஆண்டுகளுக்கு முன்பு தானமாக வழங்கிய, திருவண்ணாமலை கோயில் யானை ருக்கு உயிரிழந்தது. 30 வயதா கும் ருக்கு கோயிலின் அனைத்து உற்சவங்களிலும் முக்கிய பங்காற்றியது.
நேற்று முன்தினம் மாலை கோயிலுக்குள் சுற்றித் திரிந்த நாய்கள் துரத்தியதில், மிரண்டுபோன ருக்கு அங்குமிங்கும் ஓடி இரும்புத் தடுப்புகள் மீது முட்டி மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், அதன் புருவத்திலும், இடது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், கால்நடை மருத்துவர் கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், யானை ருக்கு நள்ளிரவு 12.30 மணியளவில் உயிரிழந்தது. ருக்கு இறந்ததை கால்நடை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து கோயில் சார் பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, கோயில் மதில் சுவர் அருகே (வடக்கு சுவர்) நல்லடக் கம் செய்யப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத் தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக