தினமணி :புது தில்லி: மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மக்களவையில் காங்கிரஸ் அனுமதி கோரியுள்ளது.
காங்கிரஸ் மூத்த உறுப்பினர் மல்லிகார்ஜுன
கார்கே, மக்களவையில் வரும் 27ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி மக்களவை செயலருக்கு மனு
அளித்துள்ளார்.
ஏற்கனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும்
தெலுங்கு தேசம் கட்சிகள், மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டு வர அனுமதி கோரியிருக்கும் நிலையில், தற்போது பிரதான எதிர்க்கட்சியான
காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர
அனுமதிகோரியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக