வியாழன், 22 மார்ச், 2018

ஹெச்.ராஜா :திமுக மக்களிடம் செல்வாக்கை இழந்து வருகிறது: .. மதுரையில் ரதயாத்திரையை தொடக்கி ,,,

tamilthehindu :திமுக  மக்களிடம் செல்வாக்கை இழந்து வருதாக  பாஜக தேசிய செயலாளர்
எச்.ராஜா கூறியுள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத்தின் ராமராஜ்ஜிய ரத யாத்திரை இன்று (புதன்கிழமை) மதுரையிலிருந்து மானாமதுரை, பரமக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. இந்த ரத யாத்திரையை மதுரையில் ஹெச்.ராஜா தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா,
”மக்களிடம் திமுக செல்வாக்கை இழந்து வருகிறது. ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிராகவும் கலவர சூழலை ஏற்படுத்தவும் திராவிடர் கழகம் முயற்சி செய்கிறது. செவ்வாய்க்கிழமை இரவு கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அவரது கார் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் சங்கரமடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆகவே, திராவிட கழகம் கலவர சூழலை ஏற்படுத்தும் தீய நோக்கில் செயல்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத ஊர்வலத்துக்கு 144 தடை உத்தரவு பொருந்தாது” என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக