வியாழன், 22 மார்ச், 2018

11 பேருக்கு ஆயுள் தண்டனை! இறைச்சி விற்பனையாளர் அளிமுதீன் கொலை ...பசு பாதுகாவலர்கள்

பீம் பிரபா காந்தி : முதல் முறையாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை!
ஜார்கண்ட் நீதிமன்றத்தால் "பசு பாதுகாவலர்கள்" என்ற பெயரில் தாக்குதல் நடத்திய வழக்குகளில், நாட்டிலேயே முதல் முறையாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஜார்கண்டில் அலிமுதின் அன்சாரி என்ற இறைச்சி விற்பனையாளர் கடந்த 9 மாதங்களுக்கு முன் ஃகவ் ரக்ஷா சமிதி என்ற அமைப்பால் தாக்கப்பட்டார். இந்த வழக்கில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 3 பேர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் 11 பேரை குற்றவாளி என அறிவித்துள்ளது. இதனையடுத்து, 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது ஜார்க்கண்ட் விரைவு நீதிமன்றம்.
பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் வழங்கப்பட்ட முதல் தண்டனை இது.
- பீம் பிரபா காந்தி</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக